ஆர்.ஷஃபி முன்னா

கோடை விடுமுறையில் சுற்றுலாவாசிகள் அதிகம் விரும் புவது குளுகுளு பிரதேசங்கள்தான்! அதில் குல்லுவும், சிம்லாவும் எவர்க்ரீன் டூரிஸ்ட் ஸ்பாட்கள்!

இயற்கையின் அழகை முழுமை யாகக் காண வேண்டுமானால்... குல்லுவுக்குத்தான் வரவேண்டும். இந்தியாவின் அரணாக அமைந்திருக்கும் இமயமலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள குல்லு, கடல்மட்டத்தில் இருந்து சுமார் 2,500 மீட்டர் உயரத்தில் உள்ளது.

''சென்னையின் வெயில் மற்றும் வியர்வையில் கரைந்த நம் உடலுக்கு, குல்லுவின் இந்த குளிர் மற்றும் பனி, அளவு கடந்த சந்தோஷத்தைத் தருகிறது...'' என்று குதூலிக்கின்றனர் சென்னையில் இருந்து அங்கே விசிட் அடித்த அன்வர் அலி தம்பதி.

''குல்லுவில் மட்டுமே வருடத் தின் பெரும்பாலான மாதங்களில் பனிக்கட்டியைப் பார்க்கலாம். சினிமாவில் மட்டுமே பார்த்துப் பழகிய இந்தப் பனிக்கட்டிப் பகுதிகளை முதன்முதலாக நேரில் பார்க்கும்போது கிடைக்கும் குதூ கலமே தனி. குளிருக்கு ஏற்றபடி ஸ்வெட்டர் உள்ளிட்ட உடைகளை அணிந்து கொண்டால்... உடல் நலம் பற்றிக் கவலைப்படாமல் அனுபவிக் கலாம்.

பனிச்சறுக்கு, பறவைகளை போல் வானத்தில் பறக்கும் பாராகிளைடிங் மற்றும் ஆகாயத்தில் பலூன் சவாரி என பல்வேறு வகை ஜாலி ரெய்டுகள் உள்ளன. எல்லாவற்றையும் அனுபவிக்க குறைந்தது இரண்டு இரவாவது தங்க வேண்டும். நம் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி

900 முதல் ஹோட்டல்கள் இருக்கின்றன'' என்று கிட்டத்தட்ட டூரிஸ்ட் கைடு அளவுக்கு டீடெயில்களை அள்ளிவிட்டனர் அன்வர் அலி தம்பதி.

டெல்லியில் இருந்து சுமார் 14 மணி நேர மலைப்பாதை ரயில் பயணத்தின் முடிவில் வருகிறது குல்லு. இமாச்சலபிரதேச அரசின் வசதியான வால்வோ சொகுசுப் பேருந்துகள் (கட்டணம்

1,190) இருக்கின்றன. சண்டிகர் அல்லது அம்பாலா வரை ரயிலில் பயணித்து, பிறகு பேருந்து அல்லது டாக்ஸி மூலம் குல்லுவை அடையலாம். டெல்லியிலிருந்து விமானத்தில் செல்லவும் வழியுள்ளது. ஆனால், சாலை பயணத்தின்போது கிடைக்கும், குல்லுவை பிரித்தபடி மலையில் வழிந்து ஓடும் பியாஸ் நதியோர பசுமைக் காட்சிகள், நீர்வீழ்ச்சிகளை எல்லாம் மிஸ் பண்ண வேண்டியிருக்கும்!

மற்றொரு 'ஜில் ஜில்’ மலைப்பிரதேசம்... சிம்லா. டெல்லியிலிருந்து கால்கா வரை ரயிலில் வரலாம். அதன் பிறகும் 'டாய் டிரெய்ன்’ எனப்படும் குட்டி ரயிலில் ஏறி சிம்லா வரையும் பயணிக்கலாம்.

''அனைத்து வகையான இயற்கையின் வளங்களும் சிம்லாவில் உள்ளது. இங்கு வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள குட்டி ரயில் மிகப் பெரிய வரப்பிரசாதம். இதில் பயணிக்காமல் சிம்லா டிரிப் முழுமையாகாது. குளிருக்கான ஜாக்கெட் பேன்றவை

50 முதல் வாடகைக்கு கிடைத்து விடுவதால், ஒரு பெரிய செலவு மிச்சமாகி விடுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் உருவானதாலோ என்னவோ... சிம்லாவில் நுழையும்போது ஒரு பாரம்பரியம் மிக்க வெளி நாட்டில் நுழைந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது!'' என்று சிம்லாவை வர்ணிக்கின்றனர் சென்னையைச் சேர்ந்த கீதா - கிரிராஜ் தம்பதி!

''இமயமலையின் இன்னொரு அழகு முகம், டார்ஜிலிங். நம் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரு வித்தியாசமான சுற்றுலா மலை ஸ்தலம். இயற்கையை அமைதியாக ரசிப்பவர்கள் பார்க்க வேண்டிய இடம்!'' என்று சொல்பவர், சேலத்தை சேர்ந்த கல்பனா... பீகார் மாநிலத்தின், அரரியா மாவட்ட கலெக்டர் எம்.சரவணன் ஐ.ஏ.எஸ்-ஸின் மனைவி!

''மனித நடமாட்டம் குறைவான இதன் பல சமவெளிப் பகுதிகளும், வானத்தை தொடும் மரங்களும் நமக்கு மன அமைதி மற்றும் சந்தோஷத்தை அள்ளித் தரும். கொல்கத்தாவிலிருந்து நியூ ஜல்பாய்குரி வழியாக டார்ஜிலிங் செல்லலாம். குர்கா இன மக்களின் பூர்விகமான டார்ஜிலிங்கில், தென் இந்திய வகை உணவுகளும் தாராளமாக கிடைக்கும்.

நியூ ஜல்பாய்குரியிலிருந்து டார்ஜிலிங் வரை செல்லும் 'டாய் டிரெய்ன்’ எனும் குட்டி ரயில்... ஒடிப்பிடித்து விடும் வேகத்தில்தான் பயணிக்கும். 20 கி.மீ. தூரத்துக்கு அடர்ந்த மலைக்காடுகளில் புகுந்து, நூறுக்கும் மேற்பட்ட மலைப் பாதைகளைக் கடந்து செல்லும் இந்த ரயில் பயணத்தை மிஸ் செய்பவர்களுக்கு, டார்ஜிலிங் விசிட் முழுமை பெறாது. நாங்கள் வசிக்கும் அரரியாவிலிருந்து வெறும் 170 கி.மீ என்பதால், என் கணவருக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் விசிட் செய்து விடுவோம்!'' என சிரித்தபடி சொல்லும் கல்பனா, ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியராக இருக்கிறார்.