Published:Updated:

வாசகிகள் பக்கம்

வாசகிகள் பக்கம்

ஹலோ ஜாக்கிரதை !

வாசகிகள் பக்கம்

ஆண்களின் வலையில் சிக்காதீர்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 நான், இரண்டு குழந்தைகளுக்குத் தாய். கணவருடன் அடிக்கடி பிரச்னைகள் எழுந்து கொண்டிருந்த நிலையில், இளம் வயதில் எனக்கு அறிமுகமான ஒருவரை, சில வருடங்களுக்கு முன் மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அவரின் அன்பான வார்த்தைகளிலும், அக்கறையான பேச்சிலும் மதி மயங்கி, உள்ளத்தாலும், உடலாலும் இன்று அவருடன் தொடர்பு வைத்திருக்கிறேன். குழந்தைகள் பெரியவர்களாக வளர வளர, நான் செய்வது எத்தனை பெரிய தவறு என்பதை உணர முடிந்தாலும், இன்று வரை அவரிடமிருந்து விடுபட முடியாமல், இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறேன்.

பேசும்போதே என் குரல் நடுக்கத்தை உங்களால் நிச்சயம் உணர முடியும். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. என் மனபாரத்தை அவள் விகடனிடம் இறக்கி வைக்கிறேன்... பாவ மன்னிப்பு கேட்கும் மனநிலையில்தான் இப்போது பேசுகிறேன். தோழிகளே... கணவரிடம் மனக்கசப்பு எனில் அவரிடமிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஆனால், வேறு ஆண்களின் வலையில் சிக்கினால், என்னைப் போல காலம் முழுவதும் கண்ணீர் விடும் நிலைதான் ஏற்படும்.

- குற்ற உணர்ச்சியால் கூனிக் குறுகிக் கொண்டிருக்கும் ஒருத்தி

நேயர் கடிதத்துக்கு

வாசகிகள் பக்கம்

1,500 தண்டம்!

நான்கு மாதங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சி நடத்திய பரிசுப் போட்டி கேள்விக்கு, நான் பதில் எழுதிப் போட்டேன். சமீபத்தில் எனக்கு ஒரு போஸ்ட் கார்டும், ஒரு பார்சல் தபாலும் (வி.பி.பி.) வந்திருந்தது. அந்த போஸ்ட் கார்டில், 'உங்களுக்கு பரிசு கிடைத்திருக்கிறது. இதற்காக பார்சல்

##~##

தபால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

வாசகிகள் பக்கம்

1,500 கட்டி அதை வாங்கிக் கொள்ளவும்’ என்று எழுதியிருந்தது. என் கையெழுத்தில், ஏற் கெனவே அவர்களுக்கு நான் எழுதியிருந்த என் வீட்டு முகவரியை கட் செய்து, அந்த போஸ்ட் கார்டின் பின்புறம் ஒட்டியிருந்ததால், அதன் மீது முழுநம்பிக்கை கொண்டு,

வாசகிகள் பக்கம்

1,500 கட்டி வாங்கிக் கொண்டேன். பிரித்துப் பார்த்தால்... உள்ளே பல் இளித்தன காகிதக் குப்பைகள். பிறகுதான் புரிந்தது நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன் என்ற விஷயம்.

சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத் துக்கு அனுப்பப்பட்ட என்னுடைய கடிதம் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், அதை அவர்கள் சரிவர கிழித்துப் போடவில்லை. விளைவு, யாரோ பயன்படுத்திக் கொண்டு இப்படி ஏமாற்றிவிட்டார்கள்.

திட்டமிட்டே இப்படி ஒரு கும்பல் நிறைய பேரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறதோ என்று சந்தேகிக்கிறேன். எனவே, பத்திரிகைகள், சேனல்கள் என்று பொதுமக்களோடு தொடர்புடைய நிறுவனங்கள் இந்த விஷயத் தில் எச்சரிக்கையோடு நடந்து கொண்டு, உரிய வகையில் வாசகர்கள் மற்றும் நேயர் களின் கடிதங்களைப் பராமரிக்கவோ அல்லது அழிக்கவோ முயற்சி எடுக்க வேண்டும்.

- பணத்தை இழந்த வருத்தத்தில் ஒரு வாசகி

இப்படி உங்களுக்கும் ஏதாவது அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அதையெல்லாம் இரண்டே நிமிடத்தில் இங்கே இறக்கி வையுங்கள். அது, நீங்கள் சிக்கிக் கொண்டதாகவோ... அதிலிருந்து மீண்டதாகவோ... சிக்கலில் மாட்டிக் கொண்டவரை விடுவித்ததாகவோ... எப்படியும் இருக்கலாம். அது, உங்கள் மனபாரத்தை இறக்கி வைப்பதோடு, 'அவள் விகடன்' மற்றும் விகடன் டாட் காம் (www.vikatan.com) ஆகிவற்றில் பிரசுரமாகி, மற்ற தோழிகளுக்கு எச்சரிக்கையாகவும் அமையப்போகிறது.!

 உங்கள் அடையாளங்கள் எதையுமே நீங்கள் தரத் தேவையில்லை. ரகசியத்துக்கு நாங்கள் 100% கியாரன்டி!

உடனே, உங்கள் செல்போனிலிருந்து  04442890003 என்ற எண்ணை அழுத்துங்கள். இணைப்பு கிடைத்தவுடன், கணினி குரல் ஒலிக்கும். பீப் ஒலிக்குப் பிறகு, உங்களுடைய அனுபவத்தை சொல்லுங்கள். நினைவிருக்கட்டும்... இரண்டே நிமிடங்களுக்குள் சொல்ல வேண்டும்.

 வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது.