Published:Updated:

நமக்குள்ளே....

நமக்குள்ளே....

நமக்குள்ளே....

காதல் கல்யாணங்கள் குடும்ப சம்மதத்தோடு நடந்தாலும், அதுவரையிலும் அந்த வீடுகளில் ஏற்படுகிற மனப்போராட்டங்கள், உறவுச் சிக்கல்கள் நமக்குப் புதில்லை. ஆனால், அண்மையில் தோழி ஒருத்தி கொண்டு வந்த பிரச்னை... கொஞ்சம் வினோதம் ப்ளஸ் விவாதத்துக்குரியது!

கம்ப்யூட்டர் படித்து வேலைக்குப் போகக் காத்திருக்கிற பெண்ணுக்கு, மல்டி நேஷனல் கம்பெனியில் நல்ல சம்பளம் வாங்குகிற பையனை, முடிந்தவரை விசாரித்து பேசி முடித்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நிச்சயித்த மறுநாளிலிருந்தே, 'சினிமாவுக்கு வா... ஷாப்பிங் வா...' என்று பைக்கில் ரவுண்ட் அடித்தான் மாப்பிள்ளை. அதிகாலை இரண்டு மணிக்குக்கூட எஸ்.எம்.எஸ்., செல்போன் பேச்சு என வெறித்தனமான துரத்தல்! 'என்கூட இப்பவே வரலேனா... உடனே செத்துடுவேன்' என்று நார்மலைத் தாண்டிய ரக எஸ்.எம்.எஸ்-களும் வரவே... பயந்து போனவள், பெற்றோரிடம் காட்டினாள்.

''கல்யாணத்துக்கு அப்புறமும் ரொமான்ஸை மிச்சம் வெச்சுக்கக் கூடாதா? இப்படி ராத்திரியில வெகு நேரம் கழிச்சு கொண்டாந்துவிட்டா... அக்கம் பக்கம் என்ன நினைப்பாங்க?’' என அவர்கள் கெஞ்ச... ''அவ, எனக்குத்தான்னு முடிவான பிறகு, எப்படி இருந்தா என்ன?'’ என்று வயிற்று நெருப்பில் எண்ணெய் வார்த்தான்.

''எனக்குத் தெரிஞ்ச பொண்ணுக்கு கல்யாணமாகி, ஏழாம் மாசமே பிரசவமாகி, மாமியார் வீட்டுல பெரும் பிரச்னையாயிடுச்சு. இடையில... ஒருத்தருக்கொருத்தர் பிடிக்காம போய், கல்யாணம் நின்னுட்டா என்னத்துக்கு ஆகறது?'' என்று திகில் கூட்டினார் எதிர்வீட்டுக்காரர்.

''எங்க பொண்ணுக்கு வெளிநாட்டுல வேலை பார்க்கற மாப்பிள்ளையோடதான் நிச்சயம் பண்ணோம். கல்யாணம் முடியற வரை நெட்லகூட சாட் பண்ண விடலை. சிறுசுங்க ஒண்ணுகிடக்க ஒண்ணு உளறி, ரெண்டு குடும்பத்துக்கும் சண்டை வந்தா... யார் சமாளிக்கறது'' என்று உடுக்கு அடித்தார் தூரத்து சொந்தம்.

இதையெல்லாம் பகிர்ந்து கொண்ட அந்தத் தாய், ரொம்பவே நிலைகுலைந்து போய்த்தான் இருந்தார். 'நிச்சயத்துக்குப் பின் - கல்யாணத்துக்கு முன்' என்ற காலகட்டத்தில் ஆணும், பெண்ணும் எந்த அளவு இடைவெளி காப்பது? இதைவிட வினோதமான, விபரீதமான சங்கதிகள் அக்கம் பக்கத்தில் நடந்திருக்கலாம். தெரிந்திருந்தால் சொல்லுங்களேன்... இம்மாதிரி சந்தர்ப்பங்களை சமாளிக்கும் அளவிலான, யோசனைகளையும் சேர்த்தே எழுதி அனுப்புங்களேன் தோழிகளே..!

உரிமையுடன்

நமக்குள்ளே....

ஆசிரியர்