Published:Updated:

ஜாய்ஃபுல் ஆம்பிவேலி... கலர்ஃபுல் லாவாசா !

ஜாய்ஃபுல் ஆம்பிவேலி... கலர்ஃபுல் லாவாசா !

பி.ஆரோக்கியவேல்

 இது சுற்றுலா நேரம்! மிடில் கிளாஸ் குடும்பங்களில்கூட இப்போதெல்லாம் 'சம்மர் வெக்கேஷ’னுக்கென்று தனியாக பட்ஜெட் ஒதுக்க ஆரம்பித்திருக்கும் அளவுக்கு, சுற்றுலா இன்று மக்களின் அவசியத் தேவையாகி இருக்கிறது. போட்டிங், ஷாப்பிங், பீச், ஃபால்ஸ் என்றே சுற்றுலாவை அறிந்தவர்களுக்கு, காட்டேஜ், செயற்கை பீச், பேட்டரி கார்கள் என்று அசத்தும் இந்த ஹைடெக் டூரிஸ்ட் ஸ்பாட்கள் நிச்சயமாக சர்ப்ரைஸ் கொடுக்கும்!

அசத்தும் ஆம்பிவேலி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜாய்ஃபுல் ஆம்பிவேலி... கலர்ஃபுல் லாவாசா !
##~##

நமக்கு எப்படி ஊட்டி, கொடைக்கானலோ... அப்படித்தான் மகாராஷ்டிராவாசிகளுக்கு லோனாவாலா. நம்முடைய ஊட்டி, கொடைக்கானல் அளவுக்கு லோனாவாலாவில் இயற்கையின் கொடை தாராளமாக இல்லை. குளிர், நீர் நிலைகள், பரப்பளவு, பசுமையின் ஆட்சி, விவசாயம்... என்று எல்லா விஷயங்களிலும் ஊட்டியைவிட லோனாவாலா பல படிகள் கீழேதான். இருந்தாலும், அம்மாநில அரசும் மக்களும் அதை உலக அதிசயமாக உயர்த்திப் பிடிக்கிறார்கள். அதிலும் லோனாவாலாவின் உச்சியில் இருக்கும் 'ஆம்பிவேலி’ (Aamby Valley) எனும் பள்ளத்தாக்கு... ஆஹா!  

 மும்பை விமான நிலையத்திலிருந்து 122 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த மலைவாசஸ்தலத்தில் கச்சிதமான விமான நிலையம்கூட அமைத்திருக் கிறார்கள். செயற்கையாக உருவாக்கியிருக்கும் பிரமாண்டமான ஏரிக்கரையில் கடற்கரை மணலைக் கொட்டி பீச் கிரிக்கெட், பீச் வாலிபால் மைதானங் களை உருவாக்கியிருக்கிறார்கள். குன்றுகளின் பின்னணியில் வனாந்திரமான பகுதியில் அமைந்து இருக்கும் ஒரு காட்டேஜிலிருந்து பார்த்தால், அடுத்த காட்டேஜ் தெரியாத அளவுக்கு தள்ளித் தள்ளிதான் காட்டேஜ்களை நிறுவியிருக்கிறார்கள்.

பல்லாயிரம் ஏக்கர்களையும், பல மலை களையும் வளைத்துப் போட்டு உருவாக்கப் பட்டிருக்கும் இந்த செயற்கை சொர்க்கத்தில் இருக்கும் ஒவ்வொரு காட்டேஜிலும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் கிடைக்கின்றன. ஜிம், ஏ.டி.எம், நீச்சல்குளம், ஆம்பி தியேட்டர், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆயுவேத மஸாஜ், பியூட்டி பார்லர்... என்று இது ஒரு தனி நகரமாகவே காட்சியளிக்கிறது. சாதாரண காட்டேஜ் போர் அடித்துப் போனால், வுட்டன் காட்டேஜ், அதுவும் போர் என்றால்... ஸ்பானிஷ் டைப் காட்டேஜ் என்று மாறிக் கொண்டேயிருக்கலாம்.

ஜாய்ஃபுல் ஆம்பிவேலி... கலர்ஃபுல் லாவாசா !

உள்ளுக்குள்ளே பயணிக்க... தடதடக்கும் நம் கார்களைப் பயன்படுத்தினால் புகையும், சத்தமும் வரும் என்பதால், நம் காரை ரிசப்ஷனுக்கு வெளியிலேயே நிறுத்திவிட வேண்டும். ஓட்டலுக்கோ, தியேட்டருக்கு செல்ல வேண்டும் என்றால், ஒரு போன் அடித்தால் போதும்... சத்தமும் புகையும் கிளப்பாத பேட்டரி கார்கள் காட்டேஜின் வாசலுக்கே வந்து நம்மை அழைத்துப் போகின்றன!

சரி, வாடகை? ஒரு நாளைக்கு முப்பதாயிரம் ரூபாய்! இது தங்குவதற்கு மட்டும்தான்... சாப்பாடு மற்றும் இதர விஷயங்கள் தனி!

ஆஹா... ஆரஞ்சு கவுன்ட்டி!

அடுத்த ஸ்பாட், ஆரஞ்சு கவுன்ட்டி (Orange County). காவிரி ஊற்றெடுக்கும் கர்நாடக மாநிலம் குடகுமலையின் மடியில் அமைந்திருக்கிறது 'ஆரஞ்சு கவுன்ட்டி’. நாம்மூரில் 'கார்ப்பரேஷன் வார்டு’ என்று சொல்வதைப் போல அமெரிக்காவில் எல்லாம் 'கவுன்ட்டி’ என்று சொல்வார்கள். ச்சும்மா ஒரு ஸ்டைலுக்காக தன் பெயருடன் 'கவுன்ட்டி’யை சேர்த்து கொண்டிருக்கும் ஆரஞ்சு கவுன்ட்டி அமைந்திருப்பது, ஒரு காபி தோட்டத்தில். அந்த ஊரின் பாரம்பரியத்துக்கே உரிய முறையில் ஆரஞ்சு கவுன்ட்டியில் பணிபுரியும் பெண்கள் எல்லாம்கூட குடகுமலைப் பெண்கள் அணியும் அதே ஸ்டைலில்தான் புடவை கட்டுகிறார்கள். இங்கே இருக்கும் ஒவ்வொரு காட்டேஜுமே தனித் தனி பங்களா மாதிரி. ஆனால், பாரம்பரிய பங்களா. அகன்ற தாழ்வாரம், விசாலமான பெட்ரூம், அதில் தேக்குமர கட்டில்,  ஈஸி சேர், வாசல், திண்ணை, வீட்டுக்குப் பின் தோட்டம், தோட்டத்தில் ஒரு நீச்சல் குளம், அதற்கு பின்னால் மரங்கள், ஏரி என்று... 'ச்சே... வாழ்ந்தால் இப்படி ஒரு வீட்டில் வாழ வேண்டும்' என்ற எண்ணம் அங்கே போகும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் வரும்.

ஜாய்ஃபுல் ஆம்பிவேலி... கலர்ஃபுல் லாவாசா !

அந்தக் கால வீடாக இருந்தாலும், கீஸர் துவங்கி டி.வி. வரை அத்தனை நவநாகரிக வசதிகளையும் வைத்திருக்கிறார்கள். நாக்கின் சுவை அறிந்து விதம்விதமான சுவைகளில் பரிமாறும் ஓட்டல் களுக்கும் பஞ்சமில்லை... பாதுகாப்புக்கும் குறை வில்லை. காடும், காபி தோட்டமுமாக ஏரியா இருப்பதால்... பறவை ஆர்வலர்கள் இங்கே அடிக்கடி திரளும் அளவுக்கு, சீஸனுக்கு தகுந்த மாதிரி வெவ்வேறு பறவைகள் வந்து போகின்றன. இந்த ஆரஞ்சு கவுன்ட்டிக்கு அருகில் திபெத் மக்கள் வசிக்கும் ஒரு குடியிருப்பும் இருக்கிறது.

வாடகை... சீஸனுக்கு தகுந்த மாதிரி பதினைந்தாயிரம் முதல் முப்பதாயிரம் வரை!

வாவ்... லாவாசா!

ஜாய்ஃபுல் ஆம்பிவேலி... கலர்ஃபுல் லாவாசா !

மும்பையிலிருந்து புனே போகும் சாலையில், சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் தனி உலகம், லாவாசா (Lavasa). ஏழு மலைகளையும் அறுபது கிலோ மீட்டர் தூரத்துக்கு நீளும் ஏரிக்கரையையும் ஒட்டி அமைந்திருக்கும் இந்த உலகத்தின் பரப்பளவு... சுமார் 100 சதுர கிலோ மீட்டர். அதாவது சென்னையில் பாதி! இங்கே நீங்கள் தேர்ந்தெடுக்க பல நட்சத்திர ஓட்டல்கள் உண்டு. மலைகளின் மடியில் இந்நகரம் அமைந்திருப்பதால் சாகசத்துக்காக செய்யப்படும் மலையேற்றம், வாட்டர் வாலிபால், பெடல் போட்... என்று விளையாட்டுகளுக்கு பஞ்சமே இல்லை. 'பேசாம இங்கயே இருந்திடலாம் போல இருக்கு...’ என்று மனம் ஏங்கினால், கட்டி முடிக்கப்பட்ட முப்பதாயிரம் வீடுகளும் அப்பார்ட்மென்ட்டுகளும்கூட இங்கே விற்பனைக்கு ரெடியாக இருக்கின்றன. உலகத் தரம் வாய்ந்த பள்ளிக்கூடம், மருத்துவமனை, சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள்... என்று இங்கே அத்தனையும் உண்டு!

டிக்கெட் போட்டுவிடலாமா..?!