அவள் பிறந்தாளே...!

'அவள் விகடன்’ பதின்மூன்றாம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு கட்டமாக, 'அவள் விகடன்’ பிறந்த அதே 1998-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கான பரிசுப் போட்டி அறிவித்திருந்தோம்.

உலகமெங்குமிருக்கும் 'அவள்’ குடும்பங் களில் இருந்து வந்து குவிந்த கடிதங்களில் இருந்து 430 பேர் பரிசுக்குரியவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 'அவள் விகடன்' போலவே பதின்மூன்றாம் வயதில் நிற்கும் அந்த குட்டிப் பெண்கள் ஒவ்வொருவருக்கும், 'எந்நேரமும் பொன் நேரம் ஆகட்டும்’ என்ற வாழ்த்துக்களுடன் டிஜிட்டல் சுவர்க் கடிகாரங்கள் பரிசாக அனுப்பி வைக்கப் பட்டன.

கையில் கிடைத்த மறுநொடியே... 'நன்றி' என்ற குரல் முதலில் ஒலித்தது... தென்காசியைச் சேர்ந்த அர்ச்சனாவிடமிருந்து!

வீடு தேடி சென்றபோது... ''எனக்கும் 'அவள் விகடனு’க்கும் ஒரே வயசு. ஸேம் பின்ச். உங்க கிஃப்ட்-க்கு தேங்க்ஸ்!'' என்று சந்தோஷமாக நம்முன் வந்தாள் அர்ச்சனா.

''அர்ச்சனா பிறந்தப்போ, அவங்க அம்மாவுக்கு டெலிவரி ரொம்பவே சிரமமா இருந்தது. 'தாயைக் காப்பத்தறது கஷ்டம்தான்’ங்கற அளவுக்கு டாக்டர்ஸ் எல்லாம் சொல்லிட்டாங்க. ஆனா, கடவுள் அருளால தாயும் சேயும் நல்லபடியா பிழைச்சு வந்துட்டாங்க. 'அம்மாவைக் காப்பாத்தின செல்லம்’னு இவளை டாக்டர்ஸ் எல்லாம் கொஞ்சினாங்க. எங்க குடும்பத்துல இப்படி ஒரு சந்தோஷ வரவு கிடைச்ச அதே நேரத்துலதான் விகடன் குடும்பத்துலயும் புது வரவா 'அவள்’!'' என்று அர்ச்சனாவின் பாட்டி சந்திரலீலா பரவசமாக...

''நாங்க கூட்டுக் குடும்பம். எங்க வீட்டுல அவள் விகடனை புது வாசத்தோட என் மாமியார் சந்திரலீலாதான் முதல்ல படிப்பாங்க. அதுக்கு அப்புறம் எங்க கைகளுக்கு வரும். பரிசுப் போட்டி அறிவிச்சப்போ, 'ஹை... நம்ம வீட்டுல ஒரு வாண்டு இருக்கே’னு எல்லாரும் குஷியாகி விண்ணப்பிச்சோம். பாருங்க... இப்போ வர்றவங்ககிட்ட எல்லாம் எங்க அர்ச்சனா மேடம், 'எனக்கு அவள்ல இருந்து கிஃப்ட் அனுப்பியிருக்காங்க!’னு பெருமையா காட்டிட்டு இருக்காங்க!'' என்று அர்ச்சனாவின் அம்மா முருகேஸ்வரி சொல்ல, மேடத்தின் முகத்தில் அத்தனை வெட்கம்!

அந்த வெட்கத்துடனேயே கடிகாரத்தை உற்சாகமாக உயர்த்திப் பிடித்து போஸ் கொடுத் தாள் அர்ச்சனா!

- ம.பிரியதர்ஷினி
படம்: என்.ராஜேந்திரன்