Published:Updated:

போர்க்கப்பலுக்கு பூ கேப்டன் !

போர்க்கப்பலுக்கு பூ கேப்டன் !

மோ.அருண் ரூப பிரசாந்த்

''உலகம் முழுவதும் கப்பலை 'ஷீ’ (she) என்று பெண்பாலில் விளிப்பார்கள். அந்தக் கப்பலுக்கு, ஒரு பெண் கேப்டனாக இருப்பதை, ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள் மக்கள். எனக்கு இது பழகிவிட்டது!''

- படபடவென பேசுகிறார், நல்லெண்ண பயணமாக சென்னை துறைமுகத்துக்கு வந்திருந்த அமெரிக்க கடற்படை போர்க் கப்பலின் (யு.எஸ்.எஸ்.டி. கேட்டர்) கமாண்டர், சாந்தி சேத்தி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
போர்க்கப்பலுக்கு பூ கேப்டன் !

யெஸ்... சாந்தி சேத்தி இந்திய வம்சாவளிப் பெண்தான்!

''தாய், தந்தையின் பூர்விகம் புதுடெல்லி. உறவினர்களைப் பார்க்க சிறுவயதில் டெல்லி வந்திருந் தாலும், தென்னிந்தியா வருவது இதுவே முதல் முறை. அமெரிக்க கடற்படையில் மொத்தம் 280 கமாண்டர்கள் இருக்கிறார்கள். எட்டு பேர் பெண்கள். அதில் நானும் ஒருத்தி'' என்று அவர் சொன்னபோது, பெருமிதம் நமக்கும் ஒட்டிக்கொண்டது.

''ஆரம்பத்தில் இதுதான் லட்சியம் என்று நினைத்து, கப்பற்படையில் சேரவில்லை. நாளாக ஆக நடுக்கடலில் பார்க்கும் சூரிய உதயம், நடுநிசி நட்சத்திரங்கள், ஆழ்கடல் அமைதி என ஒவ்வொன்றாக மிகவும் பிடித்துப் போனது. சென்ற செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இருந்து கிளம்பினோம். மே மாதம்தான் மீண்டும் போய்ச் சேருவோம். வேலையை, ஒரு காதலோடு செய்யாவிட்டால்... ஆழ்கடலின் அமைதி, மயான அமைதியாகத்தான் இருக்கும்.  

போர்க்கப்பலுக்கு பூ கேப்டன் !

ஏவுகணைகள், பீரங்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் என மிதக்கும் ஆயுதக் கிடங் குதான் இந்தக் கப்பல். ஆனால், இங்கிருப்பவர்களை கவனியுங்கள்... அவர்களிடம் எந்தப் பதற்றமும் இருக்காது. 'போர்க் கப்பல்’ என்றால் சண்டையில் உயிர்களைப் பறிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கெல்லாம் பாதுகாப்பும், அரசியல் ஸ்திரத் தன்மையும் தேவைப்படுகிறதோ... அங்கெல்லாம் போய் எங்கள் வருகையைப் பதிவு செய்கிறோம்'' என்று பூப்போல விளக்கம் தந்தவர்,

''இந்தியாவில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம், வண்ணங்கள்தான். நான் சென்று வந்த எந்த நாட்டோடும் ஒப்பிடும்போதும், இந்தியாவில்தான் வண்ணங்கள் அதிகம்!''

- சொல்லும்போது சாந்தியின் கண்களில் வானவில்!

உண்மைதான்... 'மயில் கழுத்து கலர்ல சேலை வேணும்’, 'மாந்தளிர் கலர்ல தாவணி வேணும்’ என்று நிற்கும் பெண்கள் வேறு எந்த தேசத்தில் சாத்தியம்?!

படங்கள்: அ.ரஞ்சித்