Published:Updated:

அழகான கொலு வைக்க அசத்தலான ஐடியாக்கள்!

நவராத்திரி டிப்ஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

ன்மிகத்துடன் அழகு உணர்ச்சியும் கைகோத்து ஆனந்த நடனம் புரியும் பொழுது... நவராத்திரி சீஸன்! தசாவதாரம் செட், ராமர் பட்டாபிஷேக செட் என தொடங்கி... நவீன கான்செப்ட்டில் பொம்மைகளை வைத்து... கோயில், பார்க், அலங்கார விளக்குகள் என கொலு வைப்பதன் எல்லைகள் முடிவில்லாமல் விரிந்து கொண்டே போகும்... அழகாக வைத்து முடித்து, பாராட்டு கிடைக்கும்போது உள்ளம் உவகையில் துள்ளும். உங்கள் வீட்டு கொலுவின் அழகுக்கு மேலும் மேலும் அழகு சேர்க்கும் விதத்தில், வசந்தா விஜயராகவன் நிறைய டிப்ஸ்களை தருகிறார். அவை, இங்கேயும்... இதழில் ஆங்காங்கேயும் இடம்பெறுகின்றன.

அழகான கொலு வைக்க அசத்தலான ஐடியாக்கள்!

• கொலு வைக்கும் சமயத்தில் அதன் அலங்காரத்துக்கு தேவையான சில முக்கிய பொருட்களைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அவை... ஃபேப்ரிக் பெயின்ட்டுகள் (கறுப்பு, சிவப்பு, பச்சை, வெள்ளை மற்றும் தங்க நிறம்), பெயின்ட் பிரஷ், தங்கம் மற்றும் கறுப்பு நிற கயிறுகள், கறுப்பு சார்ட் பேப்பர், பிரவுன் பேப்பர், செயற்கைப் பூங்கொத்து, ஐஸ்கிரீம் குச்சிகள், சீட்டுக் கட்டு முதலியவை (சீட்டுக் கட்டுகளில் உள்ள எல்லா சீட்டுகளும் ஒரே அளவில் இருப்பதால், சிரமப்படாமல் எளிதாக பயன்படுத்தலாம்).

•  சீட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, நீளவாக்கில் பிடித்துக்கொண்டு, கீழ் இரு முனைகளையும் இணைத்தால் கூம்பு வடிவம் கிடைக்கும். இதை ஸ்டேப்ளர் போட்டு இணையுங்கள். சிறிய பூக்கூடை போல இருக்கும். இதில் விருப்பம் போல பெயின்ட் செய்து, பூங்கொத்திலிருந்து கொஞ்சம் பூவை எடுத்து உள்ளே செருகிவிடவும். இந்த மினி பூக்கூடைகளை சுவரிலும், ஜன்னல்களிலும் ஒட்டிவிட்டால் அறைக்கே தனி அழகு வந்துவிடும்.

•  முளை கட்டிய கேழ்வரகை தரையில் கொட்டியிருக்கும் மணற்பரப்பில் விதைத்து, பச்சைப் பசேல் வயல்களை உருவாக்குங்கள். சற்று பெரிய அட்டைப் பெட்டிகள் அல்லது தெர்மாக்கோலை உபயோகித்து மாட்டுக் கொட்டகை, சினிமா டென்ட் தியேட்டர், அரசு மருத்துவமனை போன்றவற்றை உருவாக்கி, பெயர் எழுதி ஒட்டலாம்.

படங்கள்: க.பாலாஜி  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு