Published:Updated:

நெல்லையில் நெகிழ்ந்த தோழிகள்!

அடுத்த அமர்க்களம்... அக்டோபர் 20 சென்னையில்!ஜெ.அன்னாள் நேசமோனி, அருள் ஜேசு ராஜ்படங்கள்: எல்.ராஜேந்திரன், தி.ஹரிஹரன்

நெல்லையில் நெகிழ்ந்த தோழிகள்!

அடுத்த அமர்க்களம்... அக்டோபர் 20 சென்னையில்!ஜெ.அன்னாள் நேசமோனி, அருள் ஜேசு ராஜ்படங்கள்: எல்.ராஜேந்திரன், தி.ஹரிஹரன்

Published:Updated:
##~##

ரண்டு நாட்கள்... 14 போட்டிகள்... 3 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் என்று தயாராக இருக்க... ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகிகள் குவிந்துவிட... குதூகலம், கும்மாளம், கோலாகலம் என அசத்தலாக இம்முறை திருநெல்வேலியில் அரங்கேறியது, அவள் விகடன் சத்யா நிறுவனம் இணைந்து வழங்கிய ஜாலி டே!

திருநெல்வேலி, விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் செப்டம்பர் 21\ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கிய முன்தேர்வு போட்டிகளுக்கு காலை 8 மணிக்கே வாசகிகள் ஆஜராகிவிட்டனர். மெகந்தி, வழக்காடு மன்றம், ஆதி-அந்தம் (கதைப் போட்டி), 'வீணாக்காதே', உல்டா புல்டா டான்ஸ், பாட் டுக்குப் பாட்டு, அம்மா \ பெண், அட்டைப்பட போட்டி, டான்ஸ் மச்சி டான்ஸ், ரங்கோலி என விதம்விதமான போட்டிகளில் கலந்துகொண்டு கலக்கினர், வாசகிகள். குறிப்பாக, கல்லூரி மாணவிகளும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செப்டம்பர் 22 (இரண்டாம் நாள்), நெல்லை சங்கீத சபாவில், ஆர்ப்பாட்டமாக ஆரம்பமானது, ஜாலி டே. போட்டிக்காக மேடையில் டான்ஸ் ஆடியவர்களைவிட, பார்வையாளர்களாக வந்த தோழிகள் ஆடிய ஆட்டமும், அவர்கள் கிளப்பிய விசில் சத்தமும் அரங்கை அதிர வைத்தன. 'அமர் சேவா' சங்கத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான, 'மணிமேகலை குழு’வினர் சக்கர நாற்காலிகளுடன் மேடையேறி 'மாரியம்மா...' பாடலுக்கு கைகளில் வேப்பிலை ஏந்தி நடனமாட, கூட்டத்தில் நிஜமாகவே ஒரு பெண் சாமி வந்து ஆடிவிட்டார். நெகிழ்ச்சி யோடு எழுந்து நின்று கைதட்டி ஆரவாரித்தது, அரங்கம்.

நெல்லையில் நெகிழ்ந்த தோழிகள்!

பாரதியார் பாடல் போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கேற்ற செல்லம்மாள், ''அவள் விகடன் குடும்பத்தோடு இணைந்து எனது 70-ம் பிறந்தநாளைக் கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி' என்று சொல்ல, கடைசி வரிசை கல்லூரி சிட்டுக்கள் 'ஹேப்பி பர்த்டே’ என்று முழங்கியதில் நெகிழ்ந்து போனார்.

பாட்டுக்குப்பாட்டு போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து தோழிகளில் ஒருவர் வராததால், காத்திருப்போர் பட்டியலில் இருந்த யோவாள் என்கிற பார்வையற்ற பெண் பங்கேற்றார். 'கனவு' என தொடங்கும் வார்த்தை அவருக்கு கொடுக்கப்பட்டதும், தனி ஆல்பம் ஒன்றில் இடம்பெற்றிருக்கும் ''கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்...'' எனத் தொடங்கும் பாடலை தேன்குரலில் பாட, அரங்கத்தில் அத்தனை அமைதி!

நெல்லையில் நெகிழ்ந்த தோழிகள்!

இடையிடையே எதிர்பாரா பரிசுப் போட்டிகளாக 'பெரிய காதணி அணிந்தவர்கள்’, 'நீளமாக நகம் வளர்த்தவர்கள்’, 'நன்றாக சிரிப்பவர்கள்’ என, 'ஆன் தி ஸ்பாட்’ போட்டிகளை நடத்தி உடனுக்குடன் பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தினார் நிகழ்ச்சி தொகுப்பாளினி சுபாஷினி.

நெல்லையில் நெகிழ்ந்த தோழிகள்!

'என்ன விலை..?' போட்டிக்காக, '21 இஞ்ச் எல்.சி.டி டி.வி’ மேடையில் வைக்கப்பட்டது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழிகள் வரிசையாக வந்து விலையைச் சொன்னார்கள். சுமதி என்ற தோழி சரியான விலையைச் சொன்னதும் அவருக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. உடனே, மேடைக்கு ஏறிய உடன்குடி ரஹமத்நிஷா, ''ஏற்கெனவே இதே பதிலை நான் சொன்னேன்'' எனச் செல்லமாக கோபித்தார். உடனே, நிகழ்ச்சியின் வீடியோ பதிவை ஓட விட்டு அதை உறுதிப்படுத்திக் கொண்டதும், மகிழ்ச்சியாக பரிசை விட்டுக்கொடுத்தார் சுமதி. ஆனாலும், அவர் வருத்தப்படக் கூடாது என்பதற்காக, சுமதிக்கும் ஒரு பரிசை உடனடியாக வழங்கச் சொன்னார், நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்யா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜான்சன். அதன்படியே பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் க்ளைமாக்ஸ்... மெகா பம்பர் பரிசான சத்யா நிறுவனம் வழங்கும் ரெஃப்ரிஜி ரேட்டர். இதைத் தட்டிச் சென்ற அதிர்ஷ்டக்கார வாசகி... பாளையங்கோட்டையைச் சேர்ந்த மகாலட்சுமி.

போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு இனிதே நிறைவுற்றது நிகழ்வு!

அடுத்த அமர்க்களம்... அக்டோபர் 20 சென்னையில்!

ஆசிரியைகள்... மாணவியராக!

தென்காசி, மத்தளம்பாறையைச் சேர்ந்த விவேகானந்தா நடுநிலைப்பள்ளி ஆசிரியைகள் மொத்தமாக வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களை வழிநடத்தி வந்த தலைமை ஆசிரியையான சுஜாதா, ''இந்த இரண்டு நாட்களும் எங்க வேலைப் பளு, டென்ஷன் எல்லாம் மறந்து, மாணவிகளாகவே மாறிட்டோம்'' என்றார், உற்சாகத்துடன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism