Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

தோழிகளே... இங்கே நான் முன் வைக்கும் சப்ஜெக்ட், நமக்கானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நம் உறவு, தூரத்து உறவு, நட்பு, வேலைக்கார பெண்மணி... என யாரோ ஒருவருடன் சம்பந்தப்பட்டுதான் இருக்கிறது!

'குடிகார கணவர் அடித்து, உதைத்தார்... மனமுடைந்த மனைவி தற்கொலை' என்று தினசரிகளைப் புரட்டியதும் முகத்தில் அறையும் செய்திகளைத்தான் சொல்கிறேன். பிஞ்சுக் குழந்தைகளையும் உலகத்தைவிட்டே அழைத்துச் செல்லும் பெண்கள் பற்றி படிக்கும்போது, வேதனை பல மடங்காகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'குடிகாரக் கணவன்' என்பது காலம்காலமாக பெண்களின் சாபமாகத் தொடர்கிறது. தற்கொலையும் தொடர வேண்டுமா?

##~##

மனநல மருத்துவர் பத்ரு முகைதீனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ''குடிகாரன் பேச்சு... பொழுது விடிஞ்சா போச்சுங்கிறது மருத்துவ ரீதியாகவும் உண்மை. அதனால், அப்படி இப்படி வார்த்தைகளால் புண்படுத்தும் அவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை. 'எக்கேடும் கெட்டுத் தொலை' என மௌனம் காத்தாலே... அவர்களின் புலம்பல் கச்சேரி முடிந்துவிடும்.

வீண் சந்தேகம், வரதட்சணை, இன்னொரு பெண்ணின் மீது மையல் என்ற காரணங்களுக்காக அடி, உதை என்றால்... பெரியவர்கள் பஞ்சாயத்து பேசலாம். வன்முறையே ஸ்டைல் என்றால், சட்டத்தை நீட்டலாம். அதிலும் திருந்தாவிட்டால்... பிரிவதிலும் தப்பில்லை.

மன அழுத்தம் அதிகமாகும் நேரத்தில்.. அந்த சிச்சுவேஷனில் இருந்து விலகி இருந்தாலே மீண்டுவிடலாம்'’ என்று சொன்ன டாக்டர், கடைசியாகச் சொன்னது நூறு சதவிகித நிதர்சனம். அது -

''குழந்தைகள் அநாதையாவது... புருஷன் இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொள்வது... இதைத் தவிர, தற்கொலை வேற எதையும் சாதிக்காது. குழந்தைகளுக்கு நல்ல உலகத்தை அமைத்துக் கொடுத்து... போதை புருஷன் முன் வாழ்ந்து காட்டுவதுதான் அவனுக்கு தரும் சரியான தண்டனை.'’

தோழிகளே... அக்கம் பக்கம் இப்படி பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்காக பரிந்து கொண்டு, குடிகாரக் கணவர்களிடம் நாம் பஞ்சாயத்து பேச முடியாதுதான். ஆனால், மன உளைச்சலில் தடுமாறும் பெண்களுக்கு மனோபலம் தந்து உதவ முடியும்தானே!

உரிமையுடன்

நமக்குள்ளே...


ஆசிரியர்