வாசகி கோட்டா

ஃபாலோ-அப்

'என்று தணியும் இந்த முதுமையின் சோகம்!' என்ற தலைப்பில் கடந்த இதழில் ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தோம். அதில், 'நரசய்யா - ரவணம்மா என்ற முதிய தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை' குறிப்பிட்டு, தன் சோகத்தையும் கொட்டியிருந்தார் ஒரு முதிய வாசகி. அந்தக் கண்ணீர்க் கதையைப் படித்து விட்டு, ஏராளமான கடிதங்கள் குவிந்தன. பலர் தொலைபேசி வாயிலாகவும் தங்கள் ஆதங்கத்தைத் கொட்டித் தீர்த்தனர். அவற்றில் இரண்டு மட்டும் உங்கள் பார்வைக்கு..

''வெளிச்சத்துக்கு வந்திருப்பது நரசய்யா - ரவணம்மா தம்பதியின் தற்கொலைதான். ஆனால், இருட்டுக்குள்ளேயே அமுங்கிப்போன எத்தனையோ சோகங்கள் நம்மிடையே தினம் தினம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்தான் என் சொந்த ஊர். சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபோது கேள்விப்பட்ட செய்திகள் அத்தனையும் முதியவர்களின் சோகம் சுமந்தவைதான்.

பக்கத்து கிராமம் ஒன்றில் உத்திரத்-தில் சேலையில் தொங்கி, தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறார் 80 வயது பெண்மணி ஒருவர். காரணம் என்ன தெரியுமா?

ஒரு நாளைக்கு 2 ரூபாய்க்கு வெற்றிலை பாக்கும், ஒரு டம்ளர் காபியும்தான் அவருடைய அதிகபட்ச தேவை. அதையும் குத்திக் காட்டியிருக்கிறார் அவருடைய மருமகள்.

'உன்னை வெச்சு சோறு போடுறதே அதிகம். இதுல வெத்திலை - பாக்கு ஒரு கேடா?' - என்ற மருமகளின் சொற்கள் அமிலமாய் மாறி அவரை மரணத்துக்குத் தள்ளியிருக்கிறது.

அந்த கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இன்னொரு கிராமத்தில் நிகழ்ந்த சோகம் இன்னும் கொடூரம்.

மார்பிலும் தோளிலும் தூக்கி வளர்த்த தன் ஒரே மகன் அவனுடைய வீட்டில் தன்னை தங்க வைத்து, பராமரிக்க வேண்டும் என்கிற பேராசையெல்லாம் இல்லை அந்த முதியவருக்கு.

தன் குடிசைக்கு வந்து தன்னை ஒருமுறை பார்க்கவாவது மாட்டானா என்று-தான் ஏங்கியிருக்கிறது அந்த முதிய இதயம். அவன் வரவே இல்லை என்றதும் அவன் வீடு தேடி சிலமுறை சென்றிருக்கிறார். அங்கும் மகனைப் பார்க்க முடியாமல் போக, புத்திர பாசத்தின் சுமையைத் தாங்க மாட்டாமல் பூச்சிக்கொல்லி மருந்தை விழுங்கி, மரணத்தைத் தழுவியிருக்கிறார்.

இதையெல்லாம் பார்த்தோ என்னவோ, இன்னொரு முதிய பெண்மணி தன் கணவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்க, கணவர் இறந்து விட்டால் பிள்ளைகளுக்கு நாம் பாரமாக இருக்க வேண்டுமே என்று நினைத்து, அரளி விதையை அரைத்துக் குடித்து தன் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டார்.

ஏன் இந்த நிலை? இலையுதிர் கால இலைகளைப் போல மெல்ல மெல்ல உதிர்ந்து கொண்டிருக்கும் மனித மாண்புகளை எப்படி மீட்டெடுப்பது? இந்த மிருகங்களை மீண்டும் எப்படி மனிதர்களாக்குவது?

பதில்களே இல்லாத கேள்விகளோடு முடிக்கிறேன்.''

- ம.பாரதி சேகர், பெங்களூரு

''பிள்ளைகளின் நிராகரிப்பு ஒரு பக்கம்.. வறுத்தெடுக்கிற விலைவாசியும், வாடகை உயர்வும் இன்னொரு பக்கமாக தள்ளாத வயதில் தவிக்கிற தம்பதி நாங்கள்.

ஒரு ஆண், 3 பெண்கள் என்று பிள்ளைகளை ரத்தத்தை ஊற்றித்தான் வளர்த்தோம். ஆனால், எங்கள் மருமகளுக்கு எங்களை பிடிக்கவில்லை. சின்ன சின்ன சண்டை பெரிய அளவில் வெடித்து, மகன் வாழ்க்கை வீணாவதற்கு இடம் தராமல், நாங்களே வேறு வீடு பார்த்துச் சென்றோம்.

மகன் ஓரளவுக்கு பணம் தருகிறான். மகள்களும் நாங்கள் படுகிற பாட்டைப் பொறுக்க மாட்டாமல் சிறு சிறு உதவிகள் செய்கிறார்கள்தான். ஆனால், விஷம் போல ஏறுகிற விலைவாசியின் முன்னால் அதெல்லாம் போத மாட்டேனென்கிறதே! நாடி நரம்பெல்லாம் ஒடுங்கி, பிள்ளையின் நிழலில் இளைப்பாற வேண்டிய வயதில் வேலைக்குப் போயாக வேண்டிய கட்டாயம் எங்களுக்கு! ஒரு இசைப் பள்ளியில் பாட்டும் வீணையும் கற்றுக் கொடுத்து வாழ்க்கையை நடத்து-கிறேன்.

இத்தனை நாட்களாக இப்படியாவது போய்க் கொண்டிருந்தது எங்கள் வாழ்க்கை. ஆனால், சமீப சில நாட்களாக இன்னொரு பிரச்னை எங்களை துரத்தித் துரத்தி அடிக்கிறது. கடந்த இதழில் நீங்கள் வெளியிட்டிருந்த 'வீட்டு வாடகை' பிரச்னைதான் அது.

நாங்கள் இப்போது குடியிருக்கும் வீட்டின் உத்திரம் இடிந்து விழத் துவங்கி விட்டதால், வீட்டு உரிமையாளர்கள் எங்களை காலி செய்யச் சொல்கிறார்கள். வீடு தேடி நாங்கள் அலையாத இடம் இல்லை. குடியிருக்க ஒரு வாடகை வீடு கிடைக்கவே இல்லை இதுவரை.

எங்களின் பரிதாப நிலை நன்கு தெரிந்தும் கூட, 'எங்களுடன் வந்து தங்கிக் கொள்ளுங்கள்' என்று சொல்ல முடியாத நிலை மகனுக்கு. மகள்களும் எங்களிடம் ஆறுதலாகப் பேசுகிறார்-கள். எங்களோடு சேர்ந்து வீடு தேடுகிறார்கள். அதைத் தவிர அவர்களால் மட்டும் வேறென்ன செய்துவிட முடியும்?

ஒரு சமையலறையும் ஒரே ஒரு அறையும் மட்டும் இருந்தால் போதும் என்று தேடினால்கூட, வாடகை மூவாயிரம் ரூபாய், அட்வான்ஸ் 25,000 ரூபாய் என்கிறார்கள். (கடந்த இதழில் வாசகி தேன்மொழி பாஸ்கரன் குறிப்பிட்டிருந்த வார்த்தைகள் ஒவ்-வொன்றும் நிஜம். வீட்டு உரிமையாளர்கள் பலரும் பேராசைக்காரர்களாகத்தான் இருக்கிறார்-கள்.)

ஆனால், எங்களால் அதிகபட்சமாக இரண்டாயிரம் ரூபாய்தான் தர முடியும். கூடுதல் ஆயிரம் ரூபாய்க்கு எங்கு போவோம் நாங்கள்? இன்றைக்கெல்லாம் தொண்டைத் தண்ணீர் வற்ற பாட்டு சொல்லித் தந்தாலும் கூட அவ்வளவு பணத்தை சம்பாதிக்க முடியாதே..

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் விதி எங்கள் வாழ்க்கையோடு விளையாடப் போகிறதோ? புரியவில்லை. கடைசியில் ஆறு அடி நிலமாவது கிடைக்குமா? அதுவும் தெரியவில்லை.''

வேதனையுடன்,
- ருக்மணியம்மாள், சென்னை

- படம் எம்.மாதேஸ்வரன்