ஸ்பெஷல்

மாலை சூடும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்களுக்கும் அவர்களை பெற்றவர்களுக்கும் பெரும் வரம்தான் 'திருமண வலைதளங்கள்'. ஆனால், அவர்களின் அந்த ஏக்கத்தையே தங்களுக்கு சாதகமாக்-கிக் கொள்கிற கயவர்களைப் பற்றிக் கேள்விப்படும்போது வலைதளம் என்கிற அந்த வரமே சாபமாகி விடுமோ என்கிற பயம் எழுகிறது.

சமீபத்தில் ஒரு அப்பாவி தந்தை நமக்கு எழுதி-யிருந்த கடிதம் ஒன்று போதும் விஷயத்தின் தீவிரத்தை உணர்த்துவதற்கு! இதோ.. அந்தக் கடிதத்தின் சாரம்..

'எங்கள் ஒரே மகளுக்கு 29 வயதைத் தாண்டி விட்டது. அவளுக்கு வரன் தேடுவதற்காக பிரபலமான திருமண வலைதளத்தில் பதிவு செய்து, என் தொடர்பு எண்ணையும் கொடுத்திருந்தேன்.

ஒருநாள் ஒரு பையன் என்னைத் தொடர்பு கொண்டான். 'எங்களுக்கு சொந்த ஊர் திருநெல்வேலி பக்கத்துல ஒரு கிராமம். நான் கோயம்புத்தூர்ல வேலை பார்க்கிறேன்..' என்றவன், அடுத்த வாரமே ஒரு வேலையாக சென்னை வருவதாகவும் அப்போது வீட்டுக்கு வந்து என் மகளைப் பார்க்க விருப்பதாகவும் தெரிவித்தான்.

கூடவே, அவன் அருகில் இருந்த அவன் பெற்றோரும்(?!) பேசினார்கள்.. 'பையனுக்கு ரொம்ப நாளா பார்க்கிறோம். சரியாவே அமையல. அவனுக்குப் பிடிச்சா போதும்.. வேற எதைப் பத்தியும் நாங்க பேச மாட்டோம்..' என்று நம்பிக்கை தரும் விதத்தில் அவர்கள் பேசவும், அந்த நாளுக்காக அந்த விநாடியிலிருந்து காத்திருந்தோம்.

அடுத்த வாரம் அவனும் வந்தான். பெண்ணைப் பார்த்ததுமே 'பிடித்து விட்டது' என்று சொன்னவன், அங்கேயே தன் செல்போனிலிருந்து அவன் பெற்றோரிடம் என் மகளையும் என்னையும் பேசச் செய்தான்.

'ஆறு மாசத்துல கல்யாணம் வெச்சுக்கலாம். முந்தின நாள் நிச்சயம் பண்ணிக்கலாம். பொண்ணை கட்டின புடவையோட அனுப்பினாலும் சரிதான்!'' என்று அவர்கள் பேசப் பேச, சந்தோஷித்தோம்.

ஆனால்.. இத்தனை சந்தோஷமும் வெறும் கானல் நீராகப் போகிறது என்று நாங்கள் அப்போது நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

தினமும் பல முறை என் மகளிடம் போனில் பேசினவன், அடுத்த வாரமே மீண்டும் சென்னை வந்தான். என் மகளை வெளியில் அழைத்துச் செல்ல விரும்புவதாகச் சொன்னான். அப்போது அது எனக்கு உறுத்தலாகத் தோன்றியதுதான்.

ஆனாலும், 'இதற்கு தடை சொன்னால், மாப்பிள்ளையின் மனம் கோணுமோ' என்று நினைத்து சம்மதித்தேன்.

ஆனால், வெளியில் அழைத்துச் சென்றவன் என் மகளை நேரே ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துப் போயிருக்கிறான். அந்த ஹோட்டலின் தோற்றமே இவளை பயமுறுத்தவும், 'என்ன நீ.. இவ்ளோ டென்ஷனாகுற? என்னை கல்யாணம் பண்ணிக்கறதுன்னா, இந்த மாதிரி ஹோட்டல்ல நடக்குற பார்ட்டிக்கெல்லாம் வர வேண்டியிருக்குமே! நான் சென்னை வந்தா இங்கதான் தங்குவேன். தெரியுமா உனக்கு? வாயேன்.. என் ரூமுக்குப் போலாம்!' என்று அவளை கட்டாயப்படுத்த, என்னென்னவோ பேசி, அவனிடமிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்தாள்.

இதை அவள் சொன்னதுமே உஷாரான நாங்கள் நெல்லையில் இருக்கும் எங்கள் உறவினருக்கு போன் பண்ணி அவன் கொடுத்திருந்த முகவரியில் அவன் வீடு இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னோம். ம்ஹூம்.. அப்படி ஒரு முகவரியே இல்லை. அவன் வேலை செய்வதாகச் சொன்ன கோவையைச் சேர்ந்த பிரபல நிறுவனத்தில் விசாரித்தபோது அதுவும் போலி என்று தெரிய வந்தது.

எதிர்பார்த்த மாதிரியே அவன் அடுத்து என்னையோ என் மகளையோ தொடர்பு கொள்ளவில்லை. அவன் பெற்றோர் என்று போனில் பேசியவர்கள் அவன் திட்டம் தெரிந்த அவன் நண்பர்களாகக்கூட இருக்கலாம். ஏதோ பெரிய ஆபத்திலிருந்து தப்பித்து விட்ட நிம்மதியில் இருக்கிறோம் நாங்கள்!'

- என்று முடிந்திருந்த அந்தக் கடிதம், எச்சரிக்கை மணியேதான்.

'இப்படியும் ஒரு ஏமாற்றா?' என்கிற அதிர்ச்சியுடன், விசாரித்ததில் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவற்றில் ஹைலைட் கோவையைச் சேர்ந்த வாசகி ஒருவரின் சோகம்..

''என் கணவர் பிசினஸ்மேன். நாங்க எங்க மகளுக்காக இன்டர்நெட்ல பதிஞ்சு வச்சிருந்ததைப் பார்த்துட்டு, அமெரிக்காவுல இருந்து பண்றதா எங்களுக்கு போன் வந்தது. 'எனக்கு சிவகாசி பக்கத்துல ஒரு கிராமம்தான் சொந்த ஊரு. அமெரிக்காவுல வேலை பார்க்கறேன். அம்மா, அப்பாலாம் இறந்துட்டாங்க. ஒரே ஒரு அக்கா.. அவங்களும் இங்கதான் இருக்காங்க. அவங்களோட அடுத்த தடவை இந்தியா வரும்போது, கல்யாணத்தை முடிச்சிடலாம். உங்க டாட்டர் மாதிரி ஒரு ஹோம்லியான பெண்ணைத்தான் தேடிட்டு இருந்தேன்..' னெல் லாம் அவன் தேனொழுக பேசுனதுலயும், அமெரிக்க மாப்பிள்ளை கிடைச்ச சந்தோஷத்துலயும் இருந்தோம்.

தொடர்ந்து எங்ககிட்ட போன்லயே பேசிட்டு இருந்தவன், 'அடுத்த வாரம் ஒரு வேலை விஷயமா கோயம்புத்தூர் வருவேன்னு நினைக்கிறேன். வந்தா உங்களை வந்து பார்க்கிறேன்'னு சொன்னான். அதே மாதிரி, கோவை வந்து ஒரு ஹோட்டல்ல இருந்து போன் பண்ணி சாயந்திரம் நாலு மணிவாக்குல வீட்டுக்கு வர்றதா சொன்னான்.

திடீர்னு மத்தியானம் ரெண்டு மணிக்கு அவன்கிட்டருந்து பதட்டத்தோட போன் வந்தது.. 'என்னோட பாஸ்போர்ட், விசா, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டோட மொத்த லக்கேஜையும் எப்பிடியோ தொலைச்சுட்டேன். இப்போ எனக்கு ரூமை வெக்கேட் பண்ணக்கூட காசு இல்ல. அதுவுமில்லாம, கம்ப்ளெயின்ட் கொடுக்க, பாஸ்போர்ட் அப்ளை பண்ணனு எனக்கு இப்போ அவசரமா நாப்பதாயிரம் ரூபா தேவைப்படுது. ஊருக்கு போனதுமே அனுப்பிச்சு வச்சிடறேன்..'னு அவன் பேசுனதுல நாங்களும் பதறிப்போக, என் வீட்டுக்காரர் அந்தப் பணத்தை எடுத்துட்டு, அந்த ஹோட்டல் வாசல்லயே நின்ன அவனைப் பார்த்து கொடுத்துட்டு வந்தார்.

அதோட கம்பி நீட்டினவன்தான். ஆளைக் காணோமேனு ஹோட்டலுக்குப் போய்ப் பார்த்தா, 'அப்படி ஒரு பேர்ல யாருமே தங்கலையே'ங்கறாங்க ஹோட்டல்காரங்க. இப்படிக்கூட ஒருத்தன் ஏமாத்துவானா?'' என்றார் அதிர்ந்துபோய்.

''இப்படி வலைதளங்களில் விரிக்கப்படும் வலைகளில் சிக்கி ஏமாந்து போனவர்களுக்கான தீர்வு என்ன, ஏமாற்றுபவர்களுக்கான தண்டனை என்ன?'' என்ற கேள்விகளுடன் சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் கிளையின் உயரதிகாரி ஒருவரை சந்தித்தோம்.

''இது மாதிரி நிறைய நடக்குது. சும்மா பொழுதுபோக்குக்காக இந்த வெப்சைட்கள்ல தன் பெய-ரைக் கொடுத்துட்டு, ஒரு பொண்ணை தேர்ந்தெடுத்து, பழகி, அது போர் அடிச்சதும் 'ஸாரி.. நமக்குள்ள சரிப்பட்டு வராதுனு தோணுது..'னு விலகிட்டு, அடுத்த பொண்ணுக்கான வேட்டையை ஆரம்பிக்கற கொடுமையும் இதுல நடக்குது. பொதுவா இதுல இருக்கற முக்கியமான பலவீனம் என்னனா, இப்படி ஏமாந்தவங்க பலரும் முன் வந்து புகார் கொடுக்காததுதான். வெறும் 2% குற்றங்கள்தான் எங்க கவனத்துக்கு வருது.

அவங்க புகார் கொடுக்கும்போதுதான் இதுக்கான தீர்வு கிடைக்கும். சம்பந்தப்பட்ட பெண் பத்தின எந்தத் தகவலும் வெளி வராம நாங்க பார்த்துக்குவோம். ஏமாந்தவங்க புகார் கொடுக்க தயங்கற நேரத்துல, அவங்களை மாதிரியே இன்னொரு குடும்பம் அவன்கிட்ட ஏமாறத் தொடங்கியிருக்கும்ங்கிறதை அவங்க கவனத்துல வெச்சுக்கணும்..'' என்று எச்சரித்தார் அவர்.

இதுபற்றி பிரபல திருமண வலைதள இயக்குநரான 'கல்யாண மாலை' மோகனிடம் பேசினோம்..

''எங்களோட கல்யாணமாலை வலைதளத்துல வரன் தரப்புல இருந்து தரப்படற தகவல்களையெல்லாம் நாங்களே ஒரு தடவை பரிசீலனை செஞ்சுதான் வெளியிடறோம். ஆனா, அதையும் மீறி இது போன்ற சில தவறுகள் நடக்கறதை எங்களாலயும் தடுக்க முடியாம போயிடறது துரதிஷ்டம்தான்..'' என்று நடக்கும் தவறுகளுக்கு வருந்தியவர்,

''பெண்ணை பெத்தவங்க முதல் பேச்சு வார்த்தையை மட்டும் போன்ல முடிச்சுட்டு, பையனோட குடும்பம், அலுவலகம், நண்பர்கள் வட்டாரம், குடியிருக்கிற இடம்னு நாலு இடங்கள்லயும் நேரே போய் தீர விசாரிக்கணும். உடனடியா நேரடி அறிமுகங்களை ஏற்படுத்திக்கணும்..'' என்று பிரச்னைக்கான தீர்வையும் கொடுத்தார்.

''என்னதான் இன்டர்நெட்ல வரன் பார்த்தாலும், நமக்கே நமக்-கான கலாசாரத்தையும் பண்பாட்டையும் மறந்துடக் கூடாது..''என்பது 'பாரத் மேட்ரிமோனி' நிறுவனர் முருகவேலின் கருத்து. ''என்னைப் பொறுத்தவரை கல்யாணத்துக்கு முன்னால பொண்ணையும் பையனையும் சகஜமா பழக விடறது பாதுகாப்பு இல்லாத விஷயம்னுதான் சொல்லுவேன். என்னோட நிச்சயதார்த்தம் முடிஞ்சு நான் அமெரிக்காவுல இருந்து இந்தியா வந்தப்போ, என் மனைவியை கூட்டிட்டு கோயிலுக்குப் போகலாமே தோணுச்சு. என் பெற்றோரே கேட்டும் என்னோட மாமனார் பிடிவாதமா மறுத்துட்டார்.

அவரோட அந்த உறுதி எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அது பையன் மேல இருக்கற சந்தேகம் இல்ல.. அவங்க பொண்ணு மேல அவங்களுக்கு இருக்கற அக்கறை. அந்த அக்கறை எல்லாப் பெற்றோருக்கும்.. குறிப்பா இந்தக் காலகட்டத்துப் பெற்றோருக்கு கண்டிப்பா தேவை!'' என்றார் முருகவேல்.

பழமைவாதம் போல தோன்றினாலும் மிகச் சரியான வார்த்தைகள்!

- ம.பிரியதர்ஷினி