ரெகுலர்

காதல் கல்வெட்டுகள்! - 9

அது 1920-ம் வருடம்!

சென்னையில் நடந்தேறிய ஒரு சாதாரண நிகழ்ச்சி, சமுதாயத்தின் கடும் எதிர்ப்-பையும், மக்களிடையே பெரும் பரபரப்பை-யும் ஏற்படுத்தி விட்டது.

நடந்தது கொலையோ, கொள்-ளையோ அல்ல. ஒரு திருமணம்தான்! அதற்கு ஏன் இத்தனை பரபரப்பும் எதிர்ப்பும்?

திருமணம் புரிந்த மணமகள் ஆசார அனுஷ்டானங்கள் நிறைந்த, தமிழ் அந்தணர் குலத்தைச் சேர்ந்த பதினாறு வயது மங்கை. மணமகனோ வேற்று நாட்டவர். வேற்று மதத்-தவர்.

இது போதாதா பழமைவாதிகள் போர்க்-கொடி உயர்த்த? 'ஐயோ, நம் மதம், பண்பாடு, கலாசாரம் எல்லாம் என்னாவது?' என்று கூக்குரலிட்டனர். கூட்டங்கள் போட்டுத் தூற்றினர். வசைமாரி பொழிந்-தனர்.

எவரையும் நிலைகுலைய வைத்து, பின்வாங்க வைக்கும் சூழ்நிலைதான் அது.

ஆனால் காதலின் சக்தியால், சமுதாயத்தையே எதிர்த்து நின்று, அன்று மட்டும் அவர்கள் எதிர்நீச்சல் போட்டு வெல்லாமல் இருந்தால், 'கலாக்ஷேத்ரா' என்கிற அரிய பொக்-கிஷம் நம் மண்ணுக்குக் கிடைக்காம-லேயே போயிருக்கும்.

ஆம். அந்த மணப்பெண், நாட்டியத் துறைக்குப் புத்துயிரூட்டி, அதை உலகளவில் புகழ் பெறச் செய்த ருக்மணிதேவி! மணமகன் டாக்டர் ஜார்ஜ் சிட்னி அருண்டேல் எனும் ஆங்கிலேயர்.

நீலகண்ட சாஸ்திரி எனும் வைதீகமான அந்தணருக்கு மகளாக 1904--ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ம் தேதி மதுரையில் பிறந்தார் ருக்மணிதேவி.

பெரும் ஆன்மிகவாதியும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரருமான டாக்டர் அன்னி-பெசன்ட் அம்மையாரின் தலைமையில் இயங்கி வந்த 'தியஸாபிகல் சொஸைட்டி' என்ற ஆன்மிக இயக் கத்தினால் கவரப்பட்ட சாஸ்திரி, குடும்பத்து-டன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

ஏழு வயதிலிருந்தே அன்னிபெசன்ட் அம்மை யாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ருக்மணிதேவி ஆன் மிகத்திலும் இந்திய கலாசாரத்திலும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார்.

அன்னிபெசன்ட் அம்மையாருடன் நெருங்கிப் பணியாற்றியவர்களில் டாக்டர் ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்பவரும் ஒருவர்.

கல்வியாளரும் ஆன்மிகவாதியுமான அவர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கலைக் குடும்பத்தில் தோன்றியவர்.

இளம் ருக்மணிதேவியின் சூதுவாதறியாத மலர் முகம் அருண்டேலின் உள்ளத்தை மெல்ல கவரத் தொடங்கியது.

அன்னிபெசன்ட் அம்மையாரின் நெருங்கிய தோழரான அருண்டேலால் தான் கவனிக்கப்படுகிறோம் என்ற நினைவே ருக்மணிக்கு இனியதோர் உணர்வாக இருந்தது.

அவருக்கு அவள் மேல் தோன்றிய கனிவும் அன்பும், அவளுக்கு அவர் மேல் தோன்றிய மதிப்பும் மரியா-தையும் இருவர் உள்ளங்களிலும் காதலாக அரும்பத் தொடங்கியது.

நாட்டாலும் மதத்தாலும் கலாசாரத்தாலும் வேறுபட்ட அவ்விருவரையும் ஈருடலும் ஓருயிருமாக இணைத்தது காதல் எனும் பேருணர்வு! இத்தனைக்கும் அருண்டேலுக்கு ருக்மணியை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான வயது!

காதல் நெருப்பாயிற்றே.. பிறர் அறியாமல் பொத்தி வைக்க முடியுமா என்ன? அதுவே ஒரு நாளில் வெளிப்பட்டது. ஊர், உலகுக்குத் தெரிய வந்தது. கடும் எதிர்ப்பும் எழுந்தது.

பொங்கிக் கிளம்பிய எதிர்ப்புக் கணைகளையெல்லாம் தவிடு பொடியாக்கிய அவர்களது காதல் 1920-ம் ஆண்டு திருமண உறவாக மலர்ந்தது. இளம் பெண் ருக்மணி, ருக்மணிதேவி அருண்டேல் ஆனார்.

அன்பு மனைவியுடன் வெறும் காதல் மொழிகள் மட்டும் பேசி காலம் கடத்தவில்லை அருண்டேல். அவளுக்குள் புதைந்து கிடந்த கலை ஆர்வத்தையும், கற்பனைத் திறனையும் வெளிக்கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார்.

மேலை நாடுகள் பலவற்றுக்கும் அவளை அழைத்துச் சென்றார். சிற்பங்கள், ஓவியங்-கள், நடனங்கள், நாடகங்கள், பாடல்கள் என்று மேற்கத்திய கலைகளின் அனைத்துப் பரிமாணங்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

1924-ம் ஆண்டு. லண்டன் மாநகர அரங்கம் ஒன்றில் ரஷ்ய நடனக் கலைஞர் அன்னா பாவ்லோவாவின் பாலே நடன நிகழ்ச்சிக்கு ருக்மணியை அழைத்துச் சென்றிருந்தார் அருண்டேல்.

அந்தப் பெரும் கலைஞரின் அபிநயத்தையும், அற்புத நடனத்தையும் பார்த்து பிரமித்துப் போனார் ருக்மணி. நிகழ்ச்சிக்குப் பின் அவரைச் சந்தித்து நடனத்தைப் பாராட்டிய ருக்மணியிடம் அன்னா சொன்னது இதுதான்.. ''உங்கள் நாட்டின் நடனக் கலை அதி அற்புதமானது. அதற்குப் புத்துயிரூட்டி, பெருமை சேர்க்க வேண்டியது உன்னைப் போன்றவர்களின் கடமை.''

நமது நடனத்தின் பெருமையைப் பற்றி வெளிநாட்டவர் மூலம் அறிந்து கொண்ட ருக்மணிதேவியின் நடனக் கலைப் பயணம், 1924-ம் ஆண்டு, அவரது இருபதாவது வயதில் காதல் கணவரின் துணையுடன் துவங்கியது.

நடனம் என்பது அப்போது அத்தனை கௌரவமானதாக இல்லை. ஆண்களின் மோகத்தைத் தூண்டும் விதமாக சில பெண்கள் மட்டுமே ஆடும் 'சதிர்' என்ற ஆட்டம்தான் நடனம் என அப்போது பெயர் பெற்றிருந்தது.

இப்படிப்பட்ட ஒரு துறையில் முழுமூச்சுடன் இறங்கிய ருக்மணிக்கு எதிராக மீண்டும் கிளர்ந்து எழுந்தது சமுதாயம்.

கடும் விமர்சனங்களுக்கும், மோசமான தாக்குதல்களுக்கும் உள்ளானார் ருக்மணி. ஆனாலும் கணவர் அருண்டேலின் ஆதரவு இருந்-ததால், அவர் முன் வைத்த காலை பின் வைக்கவில்லை.

வீதி வீதியாக அலைந்து, நடனம் கற்பிக்க ஆசிரியர்களை தேடிப் பிடித்து, அல்லும் பகலும் ஊண் உறக்கமின்றி அந்தக் கலையைப் பயின்றார்.

காமச் சுவையையே மையமாகக் கொண்டிருந்த சதிராட்-டத்தை, தன் கற்பனைத் திறனால் பக்திச் சுவை மிகுந்த பரத நாட்டியமாக மாற்றினார்.

1935-ம் ஆண்டு சென்னையில் தியஸாபிகல் சொஸைட்டியின் உலக மகாநாடு நடைபெற்றது. அருண்டேலின் ஆதரவுடன், மாநாட்டில் பங்குகொண்ட பல நாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில், முதல் முறையாக ருக்மணிதேவி நடனமாடினார்.

பார்த்தவர்கள் பிரமித்துப் போயினர். இந்திய நடனக் கலையின் சிறப்பை முதல் முறையாக வெளிநாட்டவர்கள் அறிந்து கொள்ளும் நிலை உருவானது.

பாரதக் கலைகளுக்கு, குறிப்பாக நாட்டியக் கலைக்கு தொண்டு செய்யும் அமைப்பு ஒன்றை உருவாக்கி நடத்தும் எண்ணம் அருண்டேலுக்கு அப்போதுதான் தோன்றியது.

1936-ம் ஆண்டு ஜனவரி 6-ம் நாள் ருக்மணி தேவியின் தலைமையின் கீழ் அடையாற்றின் கரையில், இயற்கைச் சூழலில் ஒரே ஒரு மாணவருடன் 'கலாக்ஷேத்ரா' என்ற கலைப் பள்ளி உருவானது.

மாமரச் சோலைக்கு நடுவே, கீற்றுக் குடில்களில் உருவாகி வளர்ந்த அந்தப் பள்ளி, ருக்மணிதேவியின் அயராத முயற்சியாலும், அருண்டேலின் ஆதரவிலும் ஆலமரமாக வளர்ந்து தழைத்தது.

வெவ்வேறு பாணி இசை, பலவித நடனங்கள், ஓவியம், கைவேலை என்று கலையின் பலப் பல வடிவங்கள் அரும்பெரும் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு போதிக்-கப்பட்டன.

அப்போதுதான் விழுந்தது அவர் வாழ்வில் அந்தப் பேரிடி. அவரது உயிரிலும், உணர்விலும் கலந்து, அனைத்திலும் துணை நின்ற காதல் கணவர் அருண்டேல் 1945-ம் ஆண்டு கால-மானார்.

தன் வாழ்வே முடிந்தது என துடித்துப் போனார் ருக்மணி. ஆனால், கணவரின் கனவை நிறைவேற்ற அவரால் தொடங்கப்பட்ட தன் கலைப் பயணத்தைத் தொடர வேண்டிய கடமை தனக்கு இருப்பதை உணர்ந்தார். இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு காதல் கணவரின் சிதைக்கு தன் கையாலேயே தீமூட்டினார்.

அவர் சேவை தொடர்ந்தது. பட்டங்களும் பாராட்டுதல்-களும் குவிந்தன. 1977-ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவர் பதவியே அவரைத் தேடி வந்தது. ஆனால், கலைச் சேவைக்கு இடையூறாக இருக்கும் என்று அதை ஏற்க மறுத்து விட்டார்.

கலைச் சேவையையே தன் உயிர் மூச்சாகக் கொண்ட ருக்மணிதேவி, 1986-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

காதல் உணர்வுக்கும் கலைத் தொண்டுக்கும் எந்த நாளிலும் அழிவே இல்லை. ருக்மணி தேவி - அருண்டேல் தம்பதியின் வாழ்வுக்கும் கூடத்தான்!

- சரித்திர காதல் தொடரும்..