ரெகுலர்

பட்ஜெட் வீடுகள்!

Click to Enlarge

ரவிவர்மாவின் ஓவியம் போலவே மயக்குகிறது பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் இல்லம். ஆம்.. காதல் மனைவி ஷர்மிளா, பாசப் பிள்ளைகள் தர்ஷனா, அர்ஜித்துக்காக அவர் வாங்கிய சந்தோஷ கூடு, சென்னை, கே.கே. நகரில் இருக்கும் 'பிரஜ்வால் அபார்ட்மென்ட்'-ன் நான்காவது மாடியில் இருக்கும் 1200 சதுர அடி வீடு.

சமீபத்தில் வெளியாகியுள்ள 'தசாவதாரம்' படம் வரைக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளவர், அடுத்ததாக 'மாஸ்கோவில் காவேரி' என்கிற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

''ப்ளீஸ்.. உங்க சப்பலை இந்த கப்போர்டுக்குள்ள வச்சிடுங்களேன்..'' என்கிற அவரின் வித்தியாச வரவேற்போடு உள்ளே நுழைந்தோம். அந்த கப்போர்டையே உட்கார வசதியான இருக்கையாகவும் செய்திருப்பதில் சேர்க்கிறார் முதல் ஸ்கோர்.

''இத்தனை பிசியிலயும் வீட்டைப் பார்த்துப் பார்த்து அழகா..'' என்று நாம் முடிப் பதற்குள், ''எல்லாமே ஷர்மி பண்ணினதுதான். மூணு வருஷத் துக்கு முன்னாடி இந்த வீட்டை வாங்கினோம். 'என்ன வேணா செஞ்சிக்கோ'னு ஷர்மி கிட்ட சொன்னேன் அவ்ளோதான். படிச்சது இன்ஜினீயரிங் வேறயா.. கலக்கிட்டாங்க!'' என்று ரவிவர்மன் சிரிக்க, வெட்கத்துடன் ஷர்மிளாவும் அதில் சேர்ந்து கொள்ள இருவருடனும் வீட்டை வலம் வந்தோம்.

Click to Enlarge

அடக்கமான ஹால், அதன் இடது ஓரத்தில் ரவிவர்மனின் வொர்க்கிங் ரூம், அதையடுத்து கிச்சன், டைனிங் ஏரியா, தொடர்ச்சியாக குழந்தைகளின் ஸ்டடி ரூம், அதற்கு எதிர்ப்புறம் தம்பதியின் பெட் ரூம்.. என்று வீட்டின் அமைப்பே முதல் அழகு.

வெள்ளைப் புறாவாய் இருந்த ஹாலின் ஒரு பக்க சுவர் மட்டும் நீல வண்ணம் பூசிக் கொண்டு சிரித்தது.. ''ப்ளூ என் வொய்ஃபோட ஃபேவரிட்..'' என்று மீண்டும் அவரை 'ரோஸ்' ஆக்கினார் ரவிவர்மன்.

வீட்டில் அவர்களுக்குப் பிடித்த இடங்கள் ஹால், அவருடைய வொர்கிங் ரூம் மற்றும் படுக்கை அறையில் வெளிச்சம் சேர்க்கும் ஃபிரெஞ்சு விண்டோஸ்தானாம்! அதில் ஏறி உட்கார்ந்து வேடிக்கை பார்ப்-பதில் அத்தனை பிரியமாம் இருவருக்கும்.

''இந்த ஜன்னலுக்குக் கீழ இருக்குற இடத்தைப் பார்த்தீங்களா? பொதுவா எல்லார் வீட்டுலயும் இங்க சுவர்தானே இருக்கும்.. ஆனா, ஷர்மி இந்த இடத்தை நியூஸ் பேப்பர் வச்சுக்கற கப்போர்டா மாத்திட்டாங்க. இந்த மாதிரியே, எங்க வீட்டுல நிறைய இடங்கள்ல கப்போர்ட் இருக்கும். இதெல்லாம் இடத்தை மிச்சம் பிடிக்கிற சமாசாரம்..'' என்று அவர் கூற, இன்னொரு 'இ.மி.பி.' (இடத்தை மிச்சம் பிடிக்கும்) அயிட்டமும் நம் கவனத்தை ஈர்த்தது. ஒன்றுக்குள் ஒன்றாக அடைந்து கிடந்த மூன்றடுக்கு மர ஸ்டூல்கள்தான் அவை.

Click to Enlarge

''இது இவருக்காக நான் ஆர்டர் பண்ணி வாங்கினது. இருக்குறதுலயே குட்டியான ஸ்டூல்ல இவர் உக்காந்துக்கிட்டு, ரெண்டாவதுல டீ, ஸ்நாக்ஸ் வச்சுக்குவார். பெரிய ஸ்டூல்ல லாப் டாப்-ஐ வச்சு வொர்க் பண்ணுவார்..'' என்று ஷர்மிளா சொல்ல, ரவி வர்மனின் கண்களில் ஆனந்தம்!

ரவிவர்மனின் வொர்க்கிங் ரூம்தான் அவர் சினிமாக்காரர் என்பதைச் சொல்கிறது. ஃபிரெஞ்சு விண்டோவில் ஜம்மென்று உட்கார்ந்திருக்கும் 'டெடி பேர்' பொம்மை, அத்தனை மிருது! லண்டனில் ஐந்நூறு பவுண்ட்ஸ் விலை கொடுத்து வாங்கியதாம். நம் ஊர் மதிப்புக்கு கிட்டத்தட்ட நாற்பதாயிரம் ரூபாயாம் (அம்மாடியோவ்!).

ரூமில் ஒரு பக்க சுவரின் பாதியை மறைத்துக் கொண்டு இருக்கிற ஸ்கிரீன், வீட்டிலேயே சினிமா பார்ப்பதற்காம்! அந்த ஸ்கிரீனை பாய் போல ஷர்மிளா சுருட்ட, வெளிப்படுகிறது பெரிய மர கப்போர்ட். இதுவும்கூட இ.மி.பி. ஐடியாதான்!

கிச்சன் மேடையில் ஸ்டவ்-ஐத் தவிர வேறு ஒரு பொருள்கூட இல்லை என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். ''சமைப்பீங்களா..'' என்று நாம் தயங்கியபடி ஷர்மிளாவிடம் கேட்டால், முந்திக் கொண்டு பதில் வருகிறது ரவிவர்மனிடமிருந்து.

''ஷர்மி பிரமாதமா சமைப்பாங்க. பரபரனு வேலைகளை முடிச்சிட்டு, அந்த சுவடே தெரியாம நிமிஷத்துல கிச்சனை 'நீட்' ஆக்கிடு வாங்க'' என்கிறார்.

பாத்ரூம்.. அது கிச்சனை விடவும் சுத்தம்!

அவர்களுடைய மாஸ்டர் பெட் ரூமில் ஒரு பக்க சுவரில் மட்டும் பச்சையின் ஆட்சி! அதற்கு கான்ட்ராஸ்ட் ஆரஞ்சில் அட்டகாசப்படுத்துகிறது படுக்கையின் நிறம். அந்தந்தப் பொருட்கள் அதனதன் இடத்தில் 'உள்ளேன் அம்மா' என்கின்றன.

''அச்சோ.. அது என் பொம்மைடா..'' - மழலைக் குரலில் நம்மை தங்களின் அறைக்கு வரவைக்கிறார்கள் தர்ஷனாவும் அர்ஜித்தும். பொம்மைகள் ஒருபுறம் இறைந்து கிடக்க, தலை யணைகள் இன்னொரு புறம் பறந்து கிடக்க, சுவர் எங்கும் பால்பாயின்ட் ஓவியங்கள்! வாண்டுகள் இரண்டையும் இடுப்பில் கை வைத்து செல்லமாக முறைக்கிறார் ஷர்மிளா..

''எடுத்து அடுக்கி வச்சிட்டு, கிச்சன் போய்ட்டு வர்றதுக்குள்ள திரும்பவும் எல்லாம் இப்பிடித்தான் கெடக்கும். இந்த வாலுங்களுக்கு ஸ்கூல் திறந்த பிறகுதான் இந்த ரூமுக்கு விமோசனம்!'' என்று அலுத்துக் கொள்கிறார், இழையோடும் பெருமிதத்துடன்.

''கவனிச்சீங்கனா.. எங்க வீட்டுல கப்போர்ட், ஸ்டூல், கட்டில், டைனிங் டேபிள்னு எல்லா மர சாமான்களும் வித்தியாசமான நிறத்துல, சின்னதும் பெருசுமான புள்ளிகளோட இருக்கும். கப்பல்ல பொருட்களை 'பேக்' பண்ணி கொண்டு வர்ற 'ஃபைன் வுட்'-ஆல செய்யப்பட்டது இதெல்லாம். யூனிஃபார்மா இருக்கட்டுமேனு ஆர்டர் பண்ணி வாங்கினோம்..'' என்று ரவிவர்மன் சொல்ல, பெட்ரூமின் மறுபக்கக் கதவைத் திறந்து நமக்கு பால்கனியின் ஆச்சர்யத்தைத் தருகிறார் ஷர்மிளா.

ஆம்! தென்னை மரத்தைக் குனிந்து பார்க்கச் செய்கிறது அந்த உயர்ர்...ர்ர்..ர பால்கனி! ''இங்க நின்னுட்டு, 'ரொம்ப உயரத்துக்கு வந்துட்டேன்பா..'னு எல்லார்கிட்டயும் சொல்லிக்கலாம்ல?!'' - கலகலவென சிரிக்கிறார்கள் ரவிவர்மனும் ஷர்மிளாவும்!

இன்னும் அழகாகிறது அவர்கள் இல்லம்!

நிறைவடைகிறது

- ம.பிரியதர்ஷினி,
படங்கள் 'ப்ரீத்தி' கார்த்திக், எம்.மாதேஸ்வரன்