பண்டிகைகளும் பலன்களும்! - 26

ஆண்டவனின் அருளைத் தரும் ஆனி மாதம்!

குடும்பப் பிரச்னைகள் தீர மீன ராசி பெண்கள் ஆனி 11-ம் தேதியில் (ஜூன் 25) சந்திரனை வழிபட்டால் குடும்ப ஒற்றுமை வளரும். பூரட்டாதி நட்சத்திர பெண்கள் பெருமாள் சந்நிதியில் அடிப் பிரதட்சணம் செய்ய, குடும்ப பிரச்னைகள் தீர்ந்து நலம் உண்டாகும்.

ஐஸ்வர்யம் பெருக ஆனி 12-ம் தேதி (ஜூன் 26) தேய்பிறை அஷ்டமியாதலால் பைரவரை வணங்கிட சிறந்த நாள். சப்தவிடங்கர் தலங்களில் ஒன்றான நாகப்பட்டினத்தில் காயாரோகண சுவாமிக்கு இன்று பல்லக்கு உற்சவம். அங்கு இறைவன் ஆட்கொண்ட பௌண்டரீக முனிவரை வணங்கி சிவனோடு கோமேதக லிங்கத்தையும் வழிபட்டு வர, ஐஸ்வர்யம் பெருகும்.

எதிர்ப்புகள் அகல ஆனி 13-ம் தேதி (ஜூன் 27) ஏயர்கோன் கலிக்காம நாயனார் அவதார தினம். இன்று கலிக்காமரையும் சிவனையும் பூஜித்து சிவபதிகம் பாட, பெரியோர் நட்பும் புகழும் கைகூடும். 'துர்க்காஸ்தாபனம்' (துர்க்கையை வீட்டுக்கு அழைத்தல்) என்ற முறையில் துர்க்கையை வீட்டில் வைத்து பூஜித்தால் எதிர்ப்புகள் அகலும்.

தீவினை நீங்க ஆனி 15-ம் தேதி (ஜூன் 29) ஆனி மாத தேய்பிறை ஏகாதசி. இதை 'நிர்ஜலா ஏகாதசி' என்பர். இன்று விரதமிருந்து

மகாவிஷ்ணுவை வழிபடுபவர்கள் சுவர்க்க சுகங்களை அனுபவிப்-பார்கள். ரிஷப ராசிப் பெண்கள் சூரியனை நோக்கி கதிரவன் துதி பாடி வழிபட்டால் தீய வினைகள் நீங்கி நலம் பெறுவர்.

கதிரவன் துதி..

''ஞாலத்தைச் சுற்றிவரும் ஞாயிறே! நின் சேவடியைக்
கோலமுடன் கைகூப்பிக் கும்பிடுவேன் - சீலமுடன்
பாரினிலே காத்தென்னைப் பல் சுகமும் நீதந்து
வீரியனே என் வினையை நீக்கு!''

பிள்ளைகளின் சோம்பல் நீங்க ஆனி 16-ம் தேதி (ஜூன் 30) கூர்ம ஜெயந்தி. மகாவிஷ்ணு ஆமை வடிவில் அவதாரம் எடுத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கியதால் இன்று விஷ்ணுவுக்கு கலவை அன்-னம் நிவேதித்து குழந்தைகளுக்குத் தானமிட, வீடு தொடர்பான சிக்கல்கள் தீரும். இன்று சோம-பிரதோஷம் என்பதால் மாலையில் நந்திதேவரை வழிபடுதல் நன்மை தரும். சோம்பித் திரியும் பிள்ளைகளை திருமால் ஆலயத்துக்குள் அழைத்துச் சென்று,

'ஓம் கூர்ம ரூபாய வித்மஹே
பூமி நேசாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்' என்ற

காயத்ரி மந்திரத்தை 108 முறை கூறச் செய்தால், சுறுசுறுப்படைவர்.

பூமுடிக்க தடை விலக ஆனி 17-ம் தேதி (ஜூலை 1) அன்று ஆனி மாத சிவராத்திரி. சிவன் சந்நிதியில் பஞ்சாக்கர மந்திரம் ஜபித்து ஐந்து தீபங்கள் ஏற்றிட, மங்களச் செய்திகள் வரும். மிதுன ராசிப் பெண்கள் இன்று சந்திரனை இரவில் வழிபட்டு, சந்திர துதி படித்து, பால் நிவேதனம் செய்து 7 பெண்களுக்கு வழங்கிட, பூமுடிப்பதில் தடை இருந்தால் விலகும்.

பித்ருக்களின் அருளைப் பெற ஆனி 19-ம் தேதி (ஜூலை 3) திருவள்ளூர் வீரராகவப் பெரு-மாளுக்குத் தெப்பத் திருநாள். ஆனியில் இறந்த பித்ருக்களின் திதிநாளை விட்டவர்கள், இன்று அவர்களை நினைத்து பித்ரு பூஜை செய்தால் அவர்கள் அருளால் சுபகாரியங்கள் எண்ணிய விதமாக நடைபெறும்.

உடல் நோய்கள் தீர ஆனி 20-ம் தேதி (ஜூலை 4) அமிர்த லக்ஷ்மி விரதம். பொற்குடத்தில் அமிர்தம் ஏந்திய

லக்ஷ்மியை வீட்டில் செம்-மலர்களால் பூஜை செய்து, நோயுற்ற பெண்-களுக்குக் கலசாபிஷேகம் செய்ய, அவர்கள் நலம்-பெறுவர். அனைத்துப் பெண்களும் உடல் நோய்-கள் தீர அமிர்த லக்ஷ்மியை பூஜை செய்து நீர் அருந்தலாம். இன்று ஆஷாட சுத்த பிரதமை நன்னாளும் கூட. இன்றைய தினம் சந்திரனைக் காணும்- அனைவரும் வீண்பழிகளிலிருந்து விடு-படுவார்கள்.

'ஓம் வசிகராய வித்மஹே கலாநாதாய தீமஹி.
தந்நோ சந்த்ர ப்ரசோதயாத்' என்ற

சந்திரனின் விசேட காயத்ரியை 21 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு.

கிரகத் தொல்லைகள் சீராக சிவானந்த லகரியை ஆனி 21-ம் தேதி (ஜூலை 5) சிவன் கோயிலில் படிப்பவர்களுக்கு சிவனருளால் கிரகத் தொல்லைகள் தீர்ந்து அமைதியான வாழ்க்கை மலரும்.

கணவரோடு பிணக்குகள் தீர சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் ஆனி 22-ம் தேதி (ஜூலை 6)- சந்திர-னை வணங்கிட, கணவரோடு பிணக்குகள் இருப்பின் தீரும். ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்களும், சூரிய தசையில் இருப்போரும் இன்று விநாயகப் பெருமானை விரதமிருந்து வணங்கிட வாழ்க்கை நலன்கள் கூடும்.

குழந்தைப் பேறு கிடைக்க ஆனி 23-ம் தேதி (ஜூலை 7) ஸ்கந்த பஞ்சமி திருநாள். இன்று முருகப் பெருமானை நினைத்து விரதமிருந்து, ஒருவேளை மட்டும் சிறிது உணவு ஏற்று, முருகன் சந்நிதியில் தீபமேற்றி 'ஸ்கந்தலகரி' பாடிட, குழந்தைப் பேறு கிட்டும். மக நட்சத்திரப் பெண்கள் சிவபெருமானை வழிபடலாம். இன்று, பேறுகள் அருளும் கௌரி தேவியை வடதேசப் பெண்கள் வணங்கும் சமீ கௌரி விரதத் திருநாள்.

கலைகளில் சிறந்து விளங்க ஆனி 24-ம் தேதி (ஜூலை 8) முருகனுக்குரிய குமாரசஷ்டி. இன்று முதல் 6 நாட்களுக்கு சஷ்டி விரதமிருந்து ஆறு-முகனின் ஆறு படைக்கவசங்கள் கூறி முருகனை பூஜிக்க, வாழ்வில் தடைகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். கன்னி ராசிப் பெண்கள் சந்திரனை வழிபடவும் இது சிறந்த நாள். இன்று சிதம்பரம் நடராஜர் சந்நிதியில் ஆனித் திருமஞ்சன அபிஷேகம். இன்றைய தினம் நடராஜர் வீற்றுள்ள கோயில்களுக்குச் சென்று வில்வார்ச்சனை செய்திட, கலைகளில் சிறந்து விளங்கலாம். நடராஜப் பத்து என்னும் பதிகம் பாடிட, நாட்டியக் கலைஞர்களுக்கு நன்மதிப்பு கிட்டும்.

'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்பார்கள். அப்படிப்பட்ட திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாசகரின் வரலாற்றைக் காண்போம்..

தமிழ் வளர்த்த தலைநகர் மதுரையில் இறை-யருள் மிக்க நகராக விளங்குவது திருவாதவூர். இத்தலத்-தில் சம்புபாதாசிரியர் - சிவஞானவதியார் என்ற தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து, சிறு பருவத்திலேயே நல்வாக்கினை வெளிப்படுத்தும் நற்பிள்ளையாகத் திகழ்ந்தது. அந்தக் குழந்தைக்கு அவர்கள் வாதவூரர் எனப் பெயரிட்-டனர்.

கலையறிவும், நூல் அறிவும், நுண்ணறிவும் பெற்ற இந்தப் பிள்ளையின் திறமை பற்றி அறிந்த மன்னன் அரிமர்த்தன பாண்டியன், அந்த அறிவைப் போற்றி பிரதான அமைச்சர் பதவியை வழங்கினான்.

அதுசமயம் அரசின் பாதுகாப்புக்குக் குதிரைகள் தேவைப்படவே வாதவூரரிடம் செல்வம் தந்து, குதிரை வாங்கி வரப் பணித்தான் அரசன். அதற்காக பயணம் மேற்கொண்ட அவர், வழியில் திருப்பெருந்துறை சிவபெருமான் சந்நிதியைக் கண்டு, ஈசனை வழிபட்டார். அங்கே சிவபெருமானே குருவாக வந்து தன் திருக்கரங்களால் வாதவூரருக்கு சிவதீட்சை அருளி அருள் சுரந்தார். மணி மணியாக வாசகம் பேசுவதால், ''மாணிக்க வாசகராய் விளங்குக'' என்று வாழ்த்தினார். வாதவூரரும் பாண்டிய மன்னன் கொடுத்த பணம் அனைத்தையும் ஆலயப் பணிக்கே கொடுத்துத் திருப்பணி வேலை-களில் ஈடுபட்டார். தன்னுடன் வந்த காவலர்களை மதுரைக்குத் திருப்பி அனுப்பினார்.

குதிரை வாங்கச் சென்ற அமைச்சர் வராமல் போக-வே, கோபம் கொண்ட மன்னன் அரிமர்த்-தனன், ஓலைகள் அனுப்பி அவரை எச்சரித்துப் பார்த்தான். பல மாதங்கள் கடந்தும் குதிரைகள் வராததால் வாதவூரரை சிறைபிடித்துச் சித்ரவதை செய்தான்.

சிறைவாசத்தில் பல துன்பங்களைக் கண்ட மாணிக்கவாசகர், திருப்பெருந்துறை ஈசனை நினைத்து, மனமுருகப் பாடினார். தன் அன்பர் படும் வேதனையைக் கண்ட ஈசன் தன்னிடம் உள்ள சிவ கணங்களைக் குதிரைச் சேவகராகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றிக் கொண்டு மதுரைக்குச் செல்லும்படி கட்டளையிட்டார்.

பிறகு இறைவனே குதிரைப் படை தலைவனாக மன்னன் முன் தோன்றி குதிரை-களை மன்னனிடம் ஒப்படைத்தார். அழகிய கட்டழகான வலிமை பொருந்திய குதிரை-களைக் கண்டு மன்னன், வாதவூரருக்கு பரிசுகளை தந்து மகிழ்ந்தான். அன்றிரவே அந்தக் குதிரைகள் அனைத்தும் நரிகளாகி மன்னனது குதிரைகளைக் கொன்றன. அதற்குத் தண்டனையாக மீண்டும் மாணிக்கவாச கருக்கு சிறைவாசம் தந்து, பணத்தைக் கேட்டான். வாதவூரர் இறைவனை நினைந்துருக, பாண்டி யனுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக அவன் ஆண்ட மதுரையில் வைகை நதியில் வெள்ளம் வரச் செய்தார் ஈசன். இந்தத் திருவிளையாடல்கள் எல்லாம் இறைவன் நடத்து-வதே என்றறிந்த மன்னன், மாணிக்கவாசகரைப் போற்றி வணங்கி நின்றான்.

ஆம்! இந்த நிகழ்வுகளெல்லாம் நடைபெற்றதால்தான் திருவாசகம் என்னும் தேனை நாம் செவிக்கு இனியதாய்ப் பருகுகிறோம்.

நிறைவடைகிறது

- தொகுப்பு பிருந்தா கோபாலன்