ரெகுலர்

என் டைரி 178

மனசை வதைக்குது மாமியாரின் ஒப்பீடு!

சமீபத்தில்தான் அவள் விகடனில் எழுத்தாளர் அனுராதா ரமணன் குறிப்பிட்டிருந்தார்.. 'எம்.டெக் படித்திருந்தாலும் இன்னொரு எம்.டெக்.. அதாவது மாமியார் டெக்னிக்கும்தேவையாக இருக்கிறதுதானே' என்று! அதைப் படித்து ரசித்த நான், இத்தனை சீக்கிரத்தில் அந்த டெக்னிக் கைவராமல் உங்கள் முன் நிற்பேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

என்னுடையது பெரியவர்கள் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம். இப்போது இருவருமே மும்பையில் நல்ல கம்பெனியில்வேலை செய்கிறோம். திருமணம் ஆன இந்த ஒரு வருடத்தில் சமீபத்தில்தான் எங்களோடு வந்து ஆறு மாதம் தங்க விரும்பி எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார் என் மாமியார்.

அவர் வந்து எங்களுடன் தங்குவதில் சந்தோஷமான நான், நான்கு நாட்கள் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு அவரை உபசரித்தேன். இப்போதும் கூட அவருக்கு பிரஷரும் பி.பீ-யும் இருக்கிறது என்பதால், பார்த்துப் பார்த்து சமைத்து வைத்து விட்டுத்தான் ஆபீஸ் செல்கிறேன். இத்தனைக்கும் வீட்டிலிருந்து இரண்டரை மணி நேர பயண தூரத்தில் இருக்கிறது என் ஆபீஸ்.

இத்தனை செய்தும் அவருக்கு என் மேல் திருப்தியே ஏற்படாததுதான் என் பிரச்னை. எதற்கெடுத்தாலும் என்னை தன் மூத்த மருமகளுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்.

''அனிதா வீட்டை பளபளனு கண்ணாடி மாதிரி வெச்சிருப்பா. இப்படி கண்டது கண்ட இடத்துல இருக்காது..''

''அனிதா வீட்டுலதான் இருப்பானாலும் பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்துக்குவா.. அவ வயசையே கண்டுபிடிக்க முடியாது. நீ என்னடான்னா, சாயம் போன ஜீன்ஸூம் தொளதொள சட்டையுமா.. கையில ஒரு வளையல்கூட போட்டுக்க மாட்டேங்கறியே!'' என்று துவங்கி, எல்லாவற்றிலும் ஒப்பிடல்தான்!

சமீபத்தில் ஒருநாள்.. ஆபீஸ் டென்ஷனிலிருந்து விடுபட டி.வி-யில் ஒரு நடன நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்கும் ''இந்த மாதிரி ஆட்டம், பாட்டம்லாம் அனிதாவுக்கு சுத்தமா பிடிக்காது. அறிவுபூர்வமான விஷயங்களைத்தான் பார்ப்பா'' என்று பெருமையடித்தார். எனக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது. என்னைப் பற்றிய விமர்சனங்களை அவர் தாராள மாக சொல்லட்டும்.. ஆனால், என் ஓரகத்தியுடன் என்னை ஒப்பிட்டு மட்டம் தட்டுவதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

என் கணவரிடம் இதைச் சொல்லலாம் என்றால், அவரே ஒருநாள் முந்திக் கொண்டு, 'அம்மா கொஞ்ச நாள்தான் நம்மளோட இருப்பாங்க. அவங்க மனசு கோணாம நடந்துக்கோ..' என்று அறிவுரை சொல்கிறார்.

இப்போதெல்லாம் எனக்கு வீட்டுக்குப் போகவே பிடிக்கவில்லை. தினமும் தனிமையில் என் கணவரிடம் சண்டை போடுகிறேன். அவரும் எதையாவது சொல்ல, பிரச்னையாகி விடுகிறது. எங்கள் இருவருக்கும் இடையே பெரும் பிளவு ஏற்பட்டு விடுமோ என்று பயமாக இருக்கிறது.

இன்னும் ஐந்து மாதங்கள் என் மாமியார் முன் வாய் மூடி இருக்க வேண்டும். என் கணவரிடம் சண்டை போடாமலும், அலுவலகத்தில் இந்த டென்ஷனையெல்லாம் காட்டாமலும் இருக்க வேண்டும். நான் என்ன செய்யட்டும்? உதவுங்களேன்.. ப்ளீஸ்!

- பெயர் வெளியிட விரும்பாத 'அவள்' வாசகி

என் டைரி 177-ன் சுருக்கம்

''அழகாய்ப் பிறந்து இளமையிலேயே கணவரைப் பறிகொடுத்துத் தவிக்கும் அபலை நான். என்னையே நம்பியிருக்கும் இரண்டு பிள்ளைகளுக்காக வேலைக்குச் செல்கிறேன். ஆனால், சக ஆண் ஊழியர்களின் கீழ்த்தரமான பேச்சையும் பார்வையையும் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தத் தொந்தரவைத் தாங்க முடியாமலே நான்கு அலுவலகங்கள் மாறிவிட்டேன். இவற்றில் இருந்து தப்பிக்க என்னதான் வழி?''

''உன் கடிதத்தைப் படித்தபோது நான் 40 வருடங்கள் பின்னோக்கிச் சென்றேன் மகளே.. உன்னைப் போலத்தான் நானும். 16 வயதில் திருமணமாகி, கைக்குழந்தை இருக்க, 20 வயதில் கணவரை இழந்தவள்.

என் வயது, இளமை காரணமாக என்னைக் குறி-வைத்தார்கள் சில ஆண்கள். 'நீங்க பாவம் டீச்சர்.. தனி மனுஷியா இருக்கீங்க. உங்களுக்கு 'நோட்ஸ் ஆஃப் லெஸன்' எழுதித் தரட்டுமா?' என்று நான் வேலையில் சேர்ந்த இரண்டாம் நாள் பக்கத்து வகுப்பு ஆசிரியர் கேட்டார். அந்த வயதில் வெளுத்ததெல்லாம் பால் என நம்பிய நானும் வெள்ளந்தியாக சம்மதித்தேன்.

அன்று துவங்கியது பிரச்னை. எதையாவது கொடுக்கிற சாக்கில் கையைத் தொடுவது, இரட்டை அர்த்தம் வைத்துப் பேசுவது.. என்று துயரங்களை அனுபவித்தேன். பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக என்னை நானே மாற்றிக் கொண்டேன்.

என்னைப் புகழ்ந்து பேசுகிறவர்கள், எனக்கு மட்டும் ஏதேனும் சலுகை காட்டுகிறவர்கள்.. இவர்களிடமெல்லாம் எச்சரிக்கையுடன் இருக்க ஆரம்பித்தேன். அதுவரை 'உதவியை மறுத்தா அவங்க மனசு சங்கடப்படுமே' என்று நினைத்து 'சரி.. சரி..' என்று தலையாட்டிக் கொண்டிருந்த நான், 'இல்லை.. வேண்டாம்' என்கிற வார்த்தைகளை உறுதியோடு உச்சரிக்கப் பழகினேன். தைரியத்தை வளர்த்து, வரம்புகளை வகுத்துக் கொண்டேன்.

இதனால் மட்டும் தொல்லைகள் ஒழிந்து விடவில்லை. 'வேலி இல்லாத பயிர்தானே' என்று சீண்டினார்கள்தான். ஆனால், அவர்களுக்கு வார்த்தைகளால் சாட்டையடி கொடுத்து விடுவேன். இதனால், எனக்கு வேறொரு பெயர் கிடைத்தது.. 'அது சரியான சிடுமூஞ்சிப்பா. எதுக்கெடுத்தாலும் வள்ளுனு விழும்' என்பது.

உனக்கு நான் சொல்ல விரும்புகிற ஆலோசனை ஒன்றுதான். உனக்கு சின்ன வயதுதான் எனில் மறுமணம் செய்து கொள்ளேன். இப்போது இல்லாவிட்டாலும் கடைசி காலத்தில் தனிமை சுடும்போது 'நமக்கென்று யாரும் இல்லையே' என்று தோன்றாமல் இருக்கும்.. அதற்காகவாவது!''

- பெயர் வெளியிட விரும்பாத உன் தாய் போன்ற வாசகி!

நிபுணர் கருத்து..

டாக்டர் சுபா சார்லஸ், மனநல மருத்துவ நிபுணர், சென்னை

''கணவரை இழந்த பெண் என்றாலே ஆண்கள் தவ-றான எண்ணத்தோடு நெருங்குவது நம் சமூகத்தின் அவலம்தான். இது-போன்ற சூழ்நிலையில் உங்கள் பேச்சில் கண்டிப்பு காட்டி, நான் அப்படிப்-பட்டவள் இல்லை என்று புரிய வைத்து விட்டால் மீண்டும் அப்படி நடக்காது.

உங்கள் மீது எந்த ஆணும் பரிதாபப்படும்படி உங்களை காட்டிக் கொள்ளாதீர்கள். அலுவலக உறவு தாண்டி ஒரு ஆண் பேச ஆரம்பிக்கும் போதே அதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

ஒருவரைப் பார்த்து பேசிவிட்ட பிறகு வேறு எதற்காகவும் அவரை திரும்பிப் பார்க்காதீர்கள். இதை ஆங்கிலத்-தில் 'செகண்ட் லுக்' என்று சொல்வார்கள். அப்படி ஒரு பார்வையை ஒரு பெண் பார்த்து விட்டாலே ஆண்கள் அந்தப் பெண்ணை தவறான கண்ணோட்டத்தோடு நினைக்கத் தொடங்கி விடுவார்-கள்.

உங்களுக்கு விவரம் தெரியாத வயதில் குழந்தைகள் இருந்தால், உங்கள் எதிர்காலம் கருதி மறுமணம் பற்றிக் கூட சிந்திக்கலாம்.''