தீபாவளி அனுபவங்கள் பேசுகின்றன..

ஒவ்வொன்றுக்கும் பரிசு பட்டர்ஃப்ளை ஸ்ப்ரே அயர்ன் பாக்ஸ்

சீயக்காய் லேகியம்!

எங்கள் பாட்டி கிண்டுகிற லேகிய வாசனைக்கு தீபாவளி முதலில் எங்கள் வீட்டுக்குத்தான் வரும். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னரே அரைப்பது, கிளறுவது என்று வீட்டையே ஒரு வழி பண்ணி விடுவார் பாட்டி. அந்த வருடம் வேறு

மாதிரி ஒரு வழி பண்ணி விட்டார் பாட்டி!

பாட்டி லேகியத்துக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வைத்து 'மறுநாள் கிளறிக் கொள்ளலாம்' என்கிற எண்ணத்தில் அதைப் பரணில் வைத்தார்.

இன்னொரு புறம் என் அம்மா, என் அக்காவின் தலைமுடிக்கு வைத்தியமாக செம்பருத்தி, வெந்தயம், சீயக்காய் உட்பட இன்னும் சில மூலிகைகளை காயவைத்து மிஷினில் அரைத்து, பரணில் வைத்தார்.

என்ன ஆகியிருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதுதானே.. ஆமாம்! லேகியப் பொடி என்று நினைத்து தலைமுடிக்கான பொடியைப் போட்டு லேகியம் கிளறி வைத்து விட்டார் பாட்டி.

தீபாவளியும் வந்தது. லேகியத்துக்காக நாங்கள் வரிசையில் நின்றோம். ''என்ன பாட்டீ.. வாசனையே வரலையே!'' என்று நாங்கள் சந்தேகித்தும் அசரவில்லை பாட்டி. ''வாசனை பிடித்தால் ஸ்வாமி கோபிச்சுக்கிடும்'' என்று சொல்லி எங்கள் வாயை மூடிவிட்டார். சீயக்காய்ப் பொடியை லேகியம் என்று நாங்கள் குமட்டியபடி சாப்பிட்ட கொடுமை ஒருபுறம் நடக்க, இன்னொரு பக்கம் லேகிய பொடியை சீயக்காய் என்று நினைத்து, என் அக்கா தலைக்குத் தேய்த்துக் குளித்த சித்ரவதையும் அரங்கேறியது.

அன்று சாயங்காலம் தற்செயலாக பரணில் இருந்த 'சீயக்காய்ப் பொடி'யை எடுத்துப் பார்த்தபோது உண்மை தெரிய வர, கடுப்புடன் பாட்டியைப் பார்த்தோம் நாங்கள். அவரோ வடிவேலு மாதிரி முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு எங்களைப் பார்த்தார்.

அப்புறம்.. இன்னொரு முக்கியமான விஷயம்.. முடி வளரவில்லையே என்று கவலைப்பட்ட எங்கள் அக்காவுக்கு லேகிய பொடி தேய்த்துக் குளித்த பிறகு தலைமுடி கருகருவென நீளமாக வளர்ந்து வருகிறது.

- எ.வாராகி, .
திருவத்திபுரம்

மர்மத் தலைவலி!
அக்காவுக்கு அது தலை தீபாவளி. கொண்டாடுவதற்காக முந்தின தினமே அமர்க்களமாக வந்து இறங்கினார்கள் அக்காவும் மாமாவும். அவர்களோடு சேர்ந்து வெடிக்க வேண்டும் என்பதற்காகவே விதம் விதமான பட்டாசுகளை எக்கச்சக்கமாக வாங்கிக் குவித்திருந்தோம் வாண்டுகள் நாங்கள்!

மாமா, எங்கள் வீட்டினுள் நுழைந்த நிமிடமே லஷ்மி வெடி, ஆட்டம் பாம், விஷ்ணு வெடி, மின்னல் வெடி என்று எல்லாவற்றையும் எடுத்துக் கடை பரப்பினோம். நிமிர்ந்து பார்த்தால், மாமா பயங்கர தலைவலி, காதுவலியில் துடித்துக் கொண்டிருந்தார். 'லொக் லொக்'கென்று இருமலும் சேர்ந்து கொள்ள, தலையோடு காதையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு அவர் படுக்க, வீடே களையிழந்து போனது.

'கரகரவென்று முறுக்கெல்லாம் சாப்பிட்டால் தலைவலி அதிகமாகி விடும்', என்று என் அம்மா, அதையெல்லாம் தள்ளி வைக்க, ஏக்கத்துடன் பார்த்தவாறு படுத்திருந்தார் புது மாப்பிள்ளை. முந்திரி போட்ட பாயசத்துக்கு பதில் அவருக்குப்

பிடிக்கவே பிடிக்காத கஷாயம்.. தலைவலிக்கு விர்ரென்று எரியும் மிளகுப் பற்று.. என்று அமர்க்களப்பட்டது வீடு.

போதாதற்கு, 'சூடான எண்ணெயில் கற்பூரத்தைப் போட்டு காதில் ஊற்றினால் காது வலி போகும்' என்று என் பாட்டி, கற்பூரத்துக்கு பதில் கற்கண்டைக் காதில் போட, காலையில் எழுந்தபோது, எறும்பு மொய்த்து, காது வீங்கிப் போனது தனிக் கதை.

விஷயம் இதோடு முடிந்து விட்டதா என்றால்.. அட.. இனிமேல்தானே இருக்கிறது!

அருகில் மாமா இல்லாமலே முந்தின நாள் துவங்கி மறுநாள் சாயங்காலம் வரை எல்லாப் பட்டாசுகளையும் நாங்களாகவே வெடித்து முடித்து விட்டு, மாமாவிடம் வந்து அந்த சோகச் செய்தியையும் சொன்னோம் நாங்கள். அடுத்த விநாடியே தலைக்கட்டை எடுத்த மாமா, ''தப்பா நினைச்சுக்காதீங்க.. எனக்கு பட்டாசுன்னா பயம். அதான், சும்மா தலை வலிக்குதுனு பொய் சொன்னேன்'' என்று வழிய, அத்தனை நேரமும் அவரை எங்கள் குடும்பமே படுத்திய பாட்டை நினைத்து நாங்கள் சிரித்த சிரிப்பில் வீடே அதிர்ந்தது!

- ர.கிருஷ்ணவேணி, சென்னை-17

ஃபா(வே)ஸ்ட் பாசஞ்சர்!
தலைவலியாகிப் போன தலை தீபாவளி அனுபவம் என்னுடையது!

புனாவிலிருந்து திருச்சியில் உள்ள என் பிறந்த வீட்டுக்கு வர வேண்டும் நாங்கள். தீபாவளிக்கு முந்தின நாள் இரவு ஒன்பது மணிக்குத்தான் சென்னை வந்து சேர்ந்து, திருச்சி கிளம்புகிற திருவனந்தபுரம் ஃபாஸ்ட் பாசஞ்சர் ரயிலைப் பிடித்தோம்.

'இந்த வண்டி யாராவது கை நீட்டினால் கூட, நிறுத்தி ஏற்றிக் கொண்டு போகும் கட்டை வண்டி' என்று பயணிகளிடையே புகழ் பரவியிருந்த நேரம் அது. அப்படித்தான் ஊர்ந்தது வண்டி. இந்த லட்சணத்தில் விழுப்புரத்தில் தண்டவாளம் வேறு ரிப்பேர் ஆகிவிட, மாயவரம் வந்து சேர்ந்தபோது மறுநாள் (தீபாவளி அன்று) காலை ஒன்பது மணி.

ஏற்கெனவே வெந்த புண்ணில் 'வண்டி கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்' என்ற அறிவிப்பு வெந்நீரை ஊற்றியது. அந்த ஒரு மணி நேரத்தில் ரயிலிலேயே குளித்து, இருவரும் புது உடை மாற்றினோம். வழியில் டிபனும் இனிப்பும் சாப்பிட்டு (பட்டாசு மட்டும்தான் வெடிக்கவில்லை) ஒரு வழியாக, மத்தியானம் பன்னிரெண்டு மணியளவில் திருச்சி வந்து இறங்கினோம்.

ஜங்ஷனில் வரவேற்க வந்திருந்த என் தம்பிகள், ''என்ன மாமா! தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னால வந்திடுங்கனு சொன்னா, ஒரு வருஷம் முன்னாலயே வந்துட்டீங்களே.. இனி அடுத்த வருஷம்தானே தீபாவளி'' என்று கேலி செய்ய, இப்படியாக முடிந்தது எங்கள் தலை தீபாவளி.

- எஸ்.மங்கை, குளித்தலை