வெற்றிக்கு பாஸ்வேர்ட்!

கவலையற்றதுதான் கல்லூரி வாழ்க்கை. ஆனால், கல்லூரி முடிந்ததும் இந்த சமூகத்தை சந்திக்க வேண்டுமே..? இன்டர்வியூக்களை கடக்க வேண்டுமே..? இப்படி யோசித்தாலே கவலை வந்து விடுகிறது நம் மாணவிகளுக்கு. அதைப் போக்கி, உங்களை இன்டர்வியூவிலும் வாழ்க்கையிலும் ஜெயிக்க வைக்கத்தான் இந்தப் புதுப் பகுதி!

இன்டர்வியூக்களின் அடிப்படை அம்சமான 'ஆப்டிடியூட் டெஸ்ட்' (aptitude test) பயிற்சி மட்டுமல்லாது, எங்கும் எதிலும் வெற்றி பெறத் தேவையான 'பர்சனாலிட்டி டெவலப்மென்ட்' பற்றியும் இங்கு பயிற்சி தரப் போகிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.

மேற்படிப்பு குறித்து மாணவ - மாணவியருக்கு வழிகாட்டும் 'டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் ஃபைன்டர்' என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் நெடுஞ்செழியன், இதுவரை ஏறத்தாழ ஐந்து லட்சம் மாணவர்களைப் பட்டை தீட்டிய அனுபவமுள்ளவர். இனி, நீங்களாச்சு.. அவராச்சு!

'உங்களுக்கு என்னவெல்லாம் தெரிந்திருக்கிறது' என்று ஆராயாமல், 'உங்கள் சிந்திக்கும் ஆற்றல் எப்படியிருக்கிறது?' என்பதைப் பரிசோதித்துப் பார்க்கும் தேர்வுதான் ஆப்டிடியூட்.

ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய நீங்கள் தகுதியானவரா என்று கண்டறியும் விதமாகத்தான் இதில் கேள்விகளை அமைப்பார்கள். எனவே, ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி ஆப்டிடியூட் டெஸ்ட் உண்டு. இந்த இதழில் கிளரிக்கல் போஸ்ட் (clerical post) க்கான கேள்விகளை இங்கே தந்திருக்கிறேன். படித்துப் பார்த்து விடையை குறித்து வையுங்கள். கடைசியாக, கீழே விடையோடு அதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

Q1 கீழே உள்ள எண் தொடர்களை கவனித்து, அடுத்து வரும் எண்ணைக் கூறவும்.

இதுதான் சரியான விடை.

படிப்பு என்பதும் கல்லூரி வாழ்க்கை என்பதும் வெறும் வேலைக்காகத்தான் என்று இந்தக் காலத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால், படிப்பின் மூலமாகக் கிடைக்கிற வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் அதில் தன்னிகரற்று ஜொலிக்கவும் உங்களுக்கு இன்னும் சில தகுதிகள் தேவை. அதுதான், அடுத்தவர்களோடு பழகும் தன்மை.

நல்ல படிப்பாளியாக இருக்கும் மாணவர்கள் பலர் இந்தத் தகுதியை கொஞ்சமும் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதால், பணிச்சூழலில் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். முதலில் வேலை பார்த்த அலுவலகத்தில் கிடைத்த அனுபவத்தால், அடுத்த அலுவலகத்தில் சற்று நல்ல விதமாக அவர்களால் பணி செய்ய முடிகிறது. இப்படி நான்கைந்து நிறுவனங்கள் மாறிய பிறகே இந்தக் கால இளைஞர்கள் பலர் செட்டில் ஆகிறார்கள். சிலருக்கு இதனால், வேலையே கிடைக்காமலும் போய்விடுவதுண்டு.

கல்லூரியில் படிக்கும்போதே நிறைய அனுபவங்களை சேகரித்துக் கொள்வதுதான் இதற்கான ஒரே தீர்வு. பலதரப்பட்ட மாணவ, மாணவியரிடம் பழகுவது.. அவர்களின் அணுகுமுறை, பழக்கவழக்கங்களைத் தெரிந்து கொள்வது.. கலை நிகழ்ச்சிகளுக்குக் குழுவாக சென்று வருவது.. தானே பொறுப்பேற்று ஒரு நிகழ்ச்சியை நடத்திக் காண்பிப்பது.. சமூகத்தால் நலிவடைந்தவர்களுக்கு உதவுவது.. ரத்த தானம் செய்வது.. விளையாட்டுப் போட்டிகளுக்காக கடுமையாக உழைப்பது.. என எண்ணற்ற அனுபவங்களை நமக்குத் தர கல்லூரி காத்திருக்கிறது. நாம் கற்கத் தயாராக இருக்கிறோமா? உங்களை நீங்களே கேட்டுக் கொண்டிருங்கள்.. இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களோடு..

-மீண்டும் சந்திப்போம்