நிம்மதிக்கு ஒரு மேடை!

"பார்வதி.. என்னைப் பாரடி!"

சிறு வயது முதலே ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் படித்தவள் நான். பையன்களுடன் சகஜமாகப் பழகும் என் குணம், கல்லூரி வந்த பிறகும் தொடர்ந்தது. ஆனால், கல்லூரியில் எனக்குக் கிடைத்த அருமைத் தோழி பார்வதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இதற்கு அப்படியே நேரெதிர். தான் பிறந்த கிராமத்து மணத்தை இன்னும் மஞ்சள் பூசி பாதுகாப்பவள். பையன்களிடம் மட்டுமல்ல.. பெண்களிடமே அவள் அதிகம் பேச மாட்டாள்.

கிண்டலாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் கூட அவள் முகம் சுருங்கிப் போய்விடும். குழந்தை போல நடந்து கொள்ளும் அவள் குணமும் பரிசுத்தமான மனதும்தான் என்னை ஈர்த்தது. ஒருவரை ஒருவர் பிரியாத அளவுக்கு நாங்கள் நெருக்கமான தோழிகளானோம். அப்படிப்பட்ட தோழிக்கே நம்பிக்கை துரோகம் செய்த பாவியாகிவிட்டேன் நான்.

ஆம்.. ஒருநாள் எங்கள் வகுப்பு மாணவ, மாணவிகள் சிலரோடு நான் அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது, ''உன் ஃப்ரெண்ட் பார்வதி ஏன் இப்படி இருக்கா?'' என்று ஒரு விசாரணை என்னை நோக்கி எழுந்தது. அதை சீரியஸாக எடுத்துக் கொண்ட நான், அவள் குடும்ப சூழ்நிலையை அவர்களிடம் விளக்கிச் சொன்னேன்.

வரிசையாகப் பெண் குழந்தைகள் பிறந்ததால், வீட்டை விட்டே எங்கோ போய் விட்ட அப்பா.. ஆண் துணை இல்லாததால் மிகுந்த கட்டுப்பாடுகளோடு பெண்களை வளர்த்திருக்கும் அம்மா என்று எனக்கு மட்டுமே தெரிந்த அவள் குடும்ப ரகசியங்களையும் உளறிவிட்டேன்.

சத்தியமாகச் சொல்கிறேன்.. அவள் நிலைமையைப் புரிந்து கொண்டு, அவளுக்கு ஆதரவாக எல்லோரும் இருப்பார்கள் என்ற நல்ல எண்ணத்தில்தான் அதைச் சொன்னேன். அந்தத் தகவல்களை வைத்தே எங்கள் வகுப்பு மாணவர்கள் அவளைக் கிண்டலடிக்கத் தொடங்குவார்கள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

'நாட்டுப்புறம்' என்று அழைத்தாலே அழுதுவிடுபவள் அவள். ''உன் முகத்தைப் பார்த்த உடனே உங்க அப்பா ஓடிட்டாராமே'' என்ற வார்த்தையைத் தாங்குவாளா? இரண்டு வாரங்களாக வகுப்புக்கே வராமல் ஹாஸ்டல் ரூமில் அழுதபடி கிடந்தாள். அழைத்து வர நான் நேரில் சென்ற போது, என்னை நிமிர்ந்து பார்க்கக் கூட அவள் தயாராக இல்லை. இதற்கெல்லாம் காரணம் நான்தான் என்று அவளுக்குத் தெரியும்.

அவளை கேலி பேசிய மாணவர்கள் எல்லோரையும் இப்போது நான் தூக்கி எறிந்துவிட்டேன். பார்வதியின் நட்பு மட்டும் எனக்குப் போதும். மறுபடி சரி செய்ய முடியாத தவறு ஒன்றைச் செய்துவிட்டேன் என்று எனக்குப் புரிகிறது. அதனால்தான் பார்வதியிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்க என்னால் முடியவில்லை. உங்களிடம் கேட்கிறேன்.. என்னை மன்னிப்பீர்களா?

- தவிப்புடன் ஒரு மாணவி

இந்தப் பகுதியில் உங்கள் மனபாரத்தையும் இறக்கி வைக்க விரும்புகிறீர்களா?

'காலேஜ் கேம்பஸ்', அவள் விகடன், 34, கிரீம்ஸ் சாலை, சென்னை - 600006 என்ற எங்கள் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். எங்கள் இணையதளமான www.vikatan.com-ன் முகப்பு பக்கத்தில் உங்கள் மனதைப் பகிர்வதற்காகவே சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் நீங்கள் உங்கள் சுமையை இறக்கி வைத்து இளைப்பாறலாம். உங்கள் பெயர், முகவரி எதையுமே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.