உங்கள் கேள்வி.. - நிபுணர் பதில்!

சி.ஆர்.எஸ்.

பர்சனல் மட்டும்..

கே''நான் பள்ளியில் படித்த காலத்தில் ஒருவன் எப்போதும் என்னையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். என்னை உயிருக்குயிராகக் காதலிப்பதாகவும், நான் இல்லையென்றால் அவன் இறந்து விடுவதாகவும் ஒருநாள் நேரடியாகவே வந்து சொன்னான். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. 'நான் இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். இது மாதிரி நீ என் பின்னால் சுற்றுவதோ, என்னிடம் இப்படி பேசியதோ, என் வீட்டுக்குத் தெரிந்தால், என் படிப்பையே நிறுத்தி விடுவார்கள்' என்றேன்.

உடனே அவன், 'என்னால் உன் படிப்பு கெட வேண்டாம். உனக்காக நான் காத்திருப்பேன்' என்று சொல்லி, என் பின்னால் வருவதையே நிறுத்தி விட் டான். ஆனால், பள்ளிப் படிப்பை நான் வெற்றிகரமாக முடித்து நல்ல கல்லூரியில் சேர்ந்தவுடன் மீண்டும் அவன் தொல்லை ஆரம்பித்து விட்டது. 'இப்போதாவது என்னை ஏற்றுக்கொள். கண்ணியமாகக் காத்திருந்த என்னை ஏமாற்றாதே' என்றான். நான் தயங்கியபோது, விஷம் குடித்து சாகப் போவதாக சொன்னான். அந்தப் பதற்றத்தில், 'நானும் உன்னைக் காதலிக்கிறேன்' என்று அவனிடம் சொல்லிவிட்டேன். ஆனால், உண்மையில் எனக்கு அவன் மீது காதலெல்லாம் இல்லை. அவனை எப்படி தட்டிக் கழிப்பதென்றே எனக்குத் தெரியவில்லை. வழி சொல்லுங்களேன்..''

ப ''நீங்கள் செய்திருப்பது மிகப் பெரிய தவறு. செத்து விடுவேன் என்று அடிக்கடி மிரட்டுகிற ஒரு சென்சிடிவ்வான ஆசாமியிடம் பொய்யான சம்மதத்தைச் சொல்லி, ஆபத்தை இன்னும் பெரிது படுத்தி விட்டீர்கள். ஆரம்பத் திலேயே அவர் மேல் உங்களுக்குக் காதல் இல்லை என்று தெளிவாகச் சொல்லியிருந்தால் கூட, விளைவு சாதாரணமாகத்தான் இருந்திருக்கும். ஆனால், வெகு தூரம் அவர் ஆசையை வளர்த்து விட்ட பிறகு, அது இல்லை என்றானால், இப்படிப்பட்டவர்கள் கொலை போன்ற கொடூரச் செயலில் கூட இறங்கிவிட வாய்ப்புண்டு.

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. விவகாரம் இன்னும் சிக்கலாவதற்குள் அவரிடம் உண்மையைச் சொல்லிவிடுங்கள். 'நீங்கள் சாகக் கூடாது என்று நினைத்ததால்தான் அப்படிச் சொன்னேன். அந்த அளவுக்கு உங்கள் மீது எனக்கு அன்பு இருக்கிறது. அதைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்' என்று சாதுர்ய மாகப் பேசுங்கள். தேவைப்பட்டால் ஒரு மனநல ஆலோசகர் முன்னிலையில் இதைச் சொல்லுங்கள்.''

கே ''நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.ஏ படிக்கிறேன். ஐ.ஏ.எஸ் தேர்வுதான் என் கனவு. ஆனால் என் பெற்றோர் இந்த வருடமே எனக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்கின்றனர். முடியாது என்றால், நான் ஏதோ காதல் விவகாரத்தால் திருமணத்தைத் தள்ளிப் போடுவதாக நினைக்கிறார்கள். என் மனதை அவர்களுக்கு எப்படி நான் புரிய வைப்பது?''

ப ''இந்தக் காலத்துப் பெண்கள் சிலரின் நடவடிக்கைகளைப் பார்த்து, நீங்களும் அப்படி இருப் பீர்களோ என்று உங்கள் பெற்றோர் பயப்படுகிறார்கள்.. அவ்வளவுதான். திருமணத்துக்கு நீங்கள் சம்மதிக்கும் வரை அந்த சந்தேகம் மனதின் ஒரு ஓரத்திலாவது தொடரப்போவது நிச்சயம். நீங்கள் எடுத்துக் கொண்ட காரியத்தில்.. அதாவது படிப்பில் ஒரு சிறந்த சாதனையை நீங்கள் படைத் துக் காட்டும்போது மட்டும்தான் அந்த சந்தேகத்தை முற்றிலுமாகக் களைய முடியும். அதற்காக முயலுங்கள். வாழ்த்துக்கள்!''

இங்கே உங்களின் பர்சனல் கேள்விகளுக்கு பதில் தருகிறார் மனநல மருத்துவர் சி.ஆர்.எஸ். உங்கள் பர்சனல் கேள்விகளை அனுப்புங்கள்.. பெயரோ

முகவரியோ அவசியமில்லை.