"அம்மா.. தாயே.. சொந்த வீடு கட்டியிருக்கேன்மா.."

இதனால் சகலமானவர்களுக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால்..

'பிச்சைக்காரத்தனமா நடந்துக்கறியே' என்றோ,

'குளிக்காம பிச்சைக்காரி மாதிரி அலையாதே' என்றோ இனிமேல் யாரிடமும் நீங்கள் வார்த்தையை விடக் கூடாது.

அதுவும் சலேத் மேரியைப் பார்த்த பிறகு, 'பிச்சை' என்ற வார்த்தை மீதே ஒரு மதிப்பு.. ஒரு மரியாதை நமக்கெல்லாம் வந்தே தீர வேண்டும்.

பெரிதாக ஒன்றுமில்லை.. பெங்களூருவில், சுமார் ஐந்து லட்சம் செலவில் ஒரு அழகான தனி வீடு கட்டியிருக்கிறார் சலேத் மேரி. அத்தனையும் அவர் சுயமாக(!) பிச்சை எடுத்து சேகரித்த பணமாம்!

''ஆமாங்க! இதை சொல்லிக்கிறதுல என்னங்க அவமானம் இருக்கு?'' என்கிற சலேத் மேரி, பிறவியிலேயே கண்பார்வை இல்லாதவர். கொஞ்சமும் பெங்களூரு வாடையற்ற தமிழில் நம்மிடம் பேசுகிறார்..

''தர்மபுரி பக்கத்துல முத்தம்பட்டி கிராமம்தான் எனக்கு சொந்த ஊரு. வீட்டுல கோச்சிக்கிட்டு ஒரு நாள் திடீர்னு பெங்களூருவுக்கு பஸ் ஏறிட்டேன். பாஷையும் புரியாம, கண்ணும் தெரியாம நின்னேன். நாலு பேரு காசு போட்டுட்டுப்

போனாங்க. இது நல்லா இருக்கேனுதான் பிச்சை எடுக்க ஆரம்பிச்சுட்டேன்.

சும்மா சொல்லக் கூடாது. இங்க ஒரு நாள் முழுக்க பிச்சை எடுத்தா நானூறு ரூபா தேறும். அதை அப்படியே கடைகள்ல கொடுத்து நோட்டா மாத்தி கோணிப்பையில போட்டுக்குவேன். அதையே தலைக்கு வச்சு ரோட்டுல படுத்துக்குவேன். வயித்துக்கு சாப்பிட்டதைத் தவிர வேற எந்த செலவும் பண்ணினதில்ல'' என்று அவர் பேசப் பேச தலையே சுற்றுகிறது நமக்கு.

''அப்படி சிக்கனமா இருந்தா வீடு வாங்கிடமுடியும்ங்கறீங்களா?'' - நாம் பரிதாபமாக வினவினோம்.

''கண்டிப்பா! ஆறு வருஷமா நான் சேர்த்த பணத்தை எண்ணிப் பார்த்தப்போ, நாலு லட்சத்தி எழுபதாயிரம் ரூபா இருந்துச்சு. அதை அப்படியே ஒரு தொண்டு நிறுவனத்துல கொடுத்து, வீடு கட்டித் தரச் சொன்னேன். அவங்க நல்ல மனசால கிடைச்ச வீடுதான் இது'' என்கிற சலேத் மேரிக்கு, அந்தத் தொண்டு நிறுவனத்தின் மூலமாக ராஜப்பா என்பவரோடு பழக்கம் ஏற்பட, இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ராஜப்பாவும் கண்பார்வை அற்றவர்தான். காதல் பிறந்த பிறகும் சொந்த வீட்டில்தான் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருந்ததால் காலம் தாழ்த்தினாராம் சலேத் மேரி.

சரி, இப்போது இவர்கள் என்னதான் செய்கிறார்கள்?

''இல்லைங்க.. இப்பல்லாம் பழைய தெருப்பக்கம் போறதில்ல. மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் எல்லாம் பாக்கெட் பண்ணி கடைகள்ல கொடுக்குறோம். எங்க ரெண்டு பேருக்கும் இது போதும். நல்லா இருக்கோங்க. சந்தோஷமா இருக்கோம்னு எழுதுங்க'' தம்பதி சகிதமாக புன்னகை மாறாமல் விடை தருகிறார்கள் அவர்கள்.

சலேத் மேரிக்கு பிச்சை போட்டவர்களில் எத்த னையோ பேர் வாடகை வீட்டில் ஒண்டிக் கொண்டிருக்கலாம். அவர்களை நினைத்துப் பரிதாபப்படுவதா? சலேத் மேரியை நினைத்துப் பெருமைப்படுவதா?

புரியவில்லை நமக்கு!

-இரா.வினோத்