டாக்டர் சுப்ரமணியன்

டீன் -ஏஜ்

துள்ளித் திரியும் பள்ளிப் பருவம்!

''பரு உண்டாவதால்தான் இதைப் 'பரு'வ வயது என்கிறார்களோ?''

- ஒருமுறை என் டாக்டர் நண்பர் ஒருவர் என்னிடம் இப்படி வேடிக்கையாகக் கேட்டார். பருவ வயதில் ஆண், பெண் இரு பாலருக்குமே ஏற்படுகிற மாபெரும் பிரச்னை இந்தப் பரு!

இப்போதாவது பரவாயில்லை.. ''டாக்டர்.. என் பொண்ணு முகத்துல பரு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. இதை எப்படி சரி செய்யலாம்?'' என்று எங்களிடம் பிள்ளைகளை அழைத்து வந்து கேட்கிறார்கள் அம்மாக்கள். சில காலம் முன்பு வரை முகத்தில் பரு ஏற்பட்டாலே பிள்ளைகளை சந்தேகப்படுவார்கள் பல அம்மாக்களும். ஆம்! காதல்வயப்படுகிற பெண்களுக்கு.. அல்லது பையன்களுக்குத்தான் பரு வரும் என்கிற நம்பிக்கையெல்லாம் இன்னும்கூட சில கிராமப்புறங்களில் உண்டு.

வளர் இளம் பருவத்தில் ஏற்படுகிற உடல் ரீதியான மாற்றங்களில் ஒன்றுதான் பரு ஏற்படுவதும்! வியர்வை சுரப்பிகள் வியர்வையை சுரப்பதுபோல, நம் உடலுக்குள் இருக்கிற செபேஷியஸ் சுரப்பிகள் 'செபம்' எனப்படும் எண்ணெய்ப் பசை நிறைந்த திரவத்தை சுரக்கின்றன. இந்தத் திரவமும் வியர்வை மாதிரியே நம் உடலை விட்டு வியர்வைத் துவாரங்களின் வழியாக வெளியேறுகிறது. இப்படி வெளியேறுகிற திரவத்தால் முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரிக்கும். இதனால்தான் சிலருக்கு எப்போதும் முகத்தில் எண்ணெய் வழியும்.

இப்படி எண்ணெய் வழிவதைக் கட்டுப்படுத்துவதற்காக பவுடர், கிரீம் போன்றவற்றை முகத்தில் பூசுவதாலோ, தூசியாலோ சில சமயம் இந்த வியர்வைத் துவாரங்கள் அடைபட்டு விடும். இதனால், இந்தத் திரவம் வெளியேற முடியாமல் உள்ளேயே தங்கி விடும். வெளியேற வேண்டிய ஒரு கழிவுப் பொருள் உள்ளே தங்கினால் என்ன நடக்கும்? உங்கள் எண்ணம் சரிதான். பாக்டீரியாக்கள் அதில் நன்றாக வளர்ந்து பருவாக மாறும். முதலில் கரும்புள்ளி போல சிறியதாக இருக்கிற பரு, நாளடைவில் முதிர்ச்சியடைந்து வெள்ளை நிறப் பருவாக மாறுகிறது.

இளம் வயதினர் பலரையும் மனதளவில் முடக்கிப் போடுகிற விஷயம் இந்தப் பரு. எப்படியாவது இதை உடனடியாகத் துரத்தி விட வேண்டுமென்று துடிப்பார்கள். ஆனால், பருவை விரட்ட நினைத்து இவர்கள் எடுக்கிற முயற்சிகள் பலவும்தான் பருவை அதிகமாக்கி விடும்.

ஆம்! உண்மையில் இந்தப் பருக்கள் தானாகத் தோன்றி சில நாட்களில் தானாகவே மறைந்து விடும். ஆனால், உடனடியாக இந்தப் பருக்களை ஒழிக்க வேண்டும் என்கிற அவசரத்தில் இந்தப் பிள்ளைகள் அதை நகங்களால் கிள்ளி விடுவார்கள். இதனால் அங்கு கிருமித் தொற்று அதிகரிப்பதுடன், அந்த இடத்தில் கரும்புள்ளி போன்று வடு தோன்றும். இன்னும் சிலர் அடிக்கடி முகத்தை சோப்பு போட்டுக் கழுவி, பருக்கள் இருக்கும் இடத்தைத் துணியால் அழுத்தித் துடைப்பார்கள். அது பருக்களின் அளவை தற்காலிகமாகக் குறைத்துக் காட்டினாலும், இப்படி செய்வது முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தி பருக்களை அதிகரிக்கச் செய்யும். தவிர, பருக்களில் உள்ள நீர் மற்ற இடங்களில் படுவதால் அந்த இடங்களுக்கும் பரவ வாய்ப்பு இருக்கிறது.

இன்னும் சிலர் கடைகளில் விற்கும் கிரீம்களை வாங்கிப் பூசுவார்கள். மருத்துவர்களின் ஆலோசனையின்றி இப்படி கிரீம்களை பூசுவது தவறானது. அவை பல பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பருக்கள் மிகவும் அதிகரித்து, அதனால் எரிச்சல் கூடினால் மட்டும் தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

சில பிள்ளைகள், இந்தப் பருக்களால் மனரீதியிலான பாதிப்புக்குள்ளாவார்கள். மற்றவர்கள் சாதாரணமாக ஏதாவது பேசினால் கூட, தனக்கு முகத்தில் பரு இருப்பதால்தான் தன்னை அவமானப்படுத்துகிற மாதிரி பேசுவதாக நினைத்துக் கொள்வார்கள். பருக்களால் தங்களது அழகு முற்றிலுமாகக் குறைந்து விட்டதாக நினைத்து அதற்காக எப்போதும் கவலைப்படுவார்கள். குடும்ப விழாக்களுக்கோ, வெளியேயோ செல்லத் தயங்குவார்கள். இதெல்லாம்கூடப் பரவாயில்லை. மிகச் சில பிள்ளைகள் முகத்தில் பருக்கள் இல்லாதவர்களைக் கண்டால் அவர்கள் மேல் எரிச்சலும் கோபமும் பொறாமையும் கொள்வார்கள்.

இந்தத் தருணத்தில் அவர்களுக்குத் தேவை பெற்றோரின் அரவணைப்பும் ஆறுதலும்தான். 'பரு ஏன் ஏற்படுகிறது' என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொல்வது பெற்றோரின் கடமை. அதோடு, ''புறத் தோற்றம் என்பது முதல் பார்வைக்குத்தான்.. உன் மனம் அழகாக இருந்தால் உன் தோற்றம் பற்றியெல்லாம் யாரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள்'' என்று பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

'அதிகமாக சாப்பிடுவதால்தான் முகத்தில் பருக்கள் தோன்றுகிறது' என நினைத்து சில பிள்ளைகள் சாப்பிடாமல் பட்டினி கிடப்பார்கள். ''உணவுக்கும் பருக்கள் தோன்றுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்பதை எடுத்துச் சொல்வதும் பெற்றோரின் கடமைதான்.

இந்த வயதில் ஏற்படுகிற இன்னொரு முக்கியமான பிரச்னை பற்றி..

- அடுத்த இதழில் பார்க்கலாம்..

"அடிச்சாளே அந்தர்பல்டி!"
அப்போது நான் திருவிடைமருதூரில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என்னோடு படித்த ருக்மணி என்ற பெண் மிகவும் அழகாக இருப்பாள். யாரிடமும் பேசக்கூட பயப்படுவாள்.

திடீரென்று அவள் சில நாட்களாக பதற்றமாகத் தெரியவும் அவளைக் கட்டாயப்படுத்தி, அவளுடைய பிரச்னையை தெரிந்து கொண்டேன். அவள் வீட்டுக்குச் செல்கிற வழியில் பாலு என்ற முரட்டுப் பையன் அவளை வம்பிழுப்பதாகவும் அசிங்கமான சைகைகளை செய்வதாகவும் சொன்னாள். அந்த பாலுவை ஒரு நாள் எனக்குக் காட்டவும் செய்தாள். அவனும் எங்கள் பள்ளி மாணவன்தான்.

'எனக்கு ரொம்ப பயமா இருக்கு. பேசாம படிப்பையே நிறுத்திடலாமானு தோணுது'' என்று சொல்லி அவள் அழவும் எனக்கு அவளைப் பார்க்க ரொம்பப் பாவமாகப் போய்விட்டது.

அடுத்த நாளே என் வகுப்பாசிரியையிடமும் தலைமை ஆசிரியையிடமும் அந்தப் பையனைப் பற்றிப் புகார் செய்ய, அவன் வரவழைக்கப்பட்டான். ஆசிரியைகள் இருவரும் அவனை பயங்கரமாகத் திட்ட, ''நான் எதுவும் தப்பு செய்யலையே.. என் மேல இப்பிடி அபாண்டமா பழி போட்டது யார்னு தெரியலையே'' என்று அழுதிருக்கிறான் அவன்.

உடனே ருக்மணியையும் என்னையும் கூப்பிட்டு விட்ட ஆசிரியைகள், ''பயப்படாம சொல்லு ருக்மணி.. நீ தினம் வீட்டுக்குப் போகும்போது இவன் கலாட்டா செய்றானா.. இல்லையா?'' என்று கேட்க, ஒருமுறை நிமிர்ந்து அவனைப் பார்த்த ருக்மணி ''இல்லையே! அப்படியெல்லாம் எதுவும் செய்யலையே'' என்று அந்தர்பல்டி அடித்தாளே பார்க்கலாம். எனக்கு தூக்கிவாரிப் போட்டது!

ஆசிரியைகள் இருவரின் கோபமும் அப்படியே என் மீது பாய்ந்தது.. ''உனக்கு அந்தப் பையன் மேல ஏதோ கோபம்ங்கிறதுக்காக இப்படில்லாம் அபாண்டமா குற்றம் சாட்டக் கூடாது. இதுவே உனக்கு முதலும் கடைசியுமான எச்சரிக்கை!'' என்று அவர்கள் என்னைக் கடுமையாகத் திட்ட, நான் நொந்து போனேன்.

அந்த டீன்-ஏஜில் நான் கற்றுக் கொண்ட பாடம்.. 'அடுத்தவர் விஷயத்தில் தலையிடவே கூடாது' என்பதைத்தான். இந்தக் கொள்கையை இந்த 75 வயது வரை கடைப்பிடித்தும் வருகிறேன்.

- ஆர்.ராதா, சென்னை-33

கேள்வி-பதில்

Click to Enlarge