நமசிவாயம்

திருவிளக்கை ஏற்றி வைப்போம்!

நரகாசுரனுக்கு முன்பே கொண்டாடப்பட்டிருக்கிறது தீபாவளிப் பண்டிகை.. ஒளி விழாவாக! ஆம்.. ஐப்பசி மாதம், தேய்பிறை சதுர்த்தசி நாளில் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இறைவனை வழிபட்டிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்! புண்ணியங்கள் பல தந்து, நரக வேதனையைத் தீர்க்கும் நாள் இது என்பதால் இந்தத் திருநாளை, 'நரக சதுர்தசி' என்றும் போற்றினர். நரகாசுரனின் வதமும் இந்த நாளிலேயே நிகழ்ந்தேற, தீபாவளிப் பண்டிகைக்கு அவனும் ஒரு காரணமாகி விட்டான்.

ஆக.. தீபாவளிப் பண்டிகையின் சிறப்பம்சங்களில் முதலிடம் பெறுவது தீப வழிபாடுதான். இன்னும் சில புராணக் கதைகளைப் படித்தால், இந்த தீப வழிபாட்டின் முக்கியத்துவத்தை நீங்களும் அறிந்து கொள்வீர்கள்.

திருமறைக்காடு

அம்மையும் அப்பனும் திருமணக் கோலத்தில் காட்சி தரும் திருத்தலம் இது. ஒரு நாள், திருக்கோயில் கருவறையில், சுடர் விட்டு எரிந்த தீபம் ஒன்று ஒளி குறைந்து, ஆடி அசைந்து, அணையும் தறுவாயில் இருந்தது. அப்போது, எங்கிருந்தோ வந்து சேர்ந்தது அந்த எலி. பாவம்.. அதற்கு சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை போலும்!

விளக்கருகே வந்த எலி, மெள்ள விளக்கின் மேல் ஏறி, எண்ணெயைக் குடிக்க முயற்சித்தது. அதன் அசைவால் திரி தூண்டப்பட, பிரகாசமாக எரிய ஆரம்பித்தது அந்தத் திருவிளக்கு தீபம்! இப்படி தன்னையும் அறியாமல் தீபத் தொண்டு புரிந்த அந்த எலிக்குக் கிடைத்த பலன் என்ன தெரியுமா? மறு பிறவியில் மகாபலிச் சக்ரவர்த்தியாகப் பிறந்தது!

திருவாரூர்

பரமானந்தத்துடன் பரமனை தரிசித்துக் கொண்டிருந்த ஏமாப்பூர் நமிநந்தி அடிகளுக்கு திடீரென்று ஓர் எண்ணம்.. 'அருட்பெருஞ்ஜோதியாம் ஆண்டவனை விளக்கேற்றி வழிபட்டால் என்ன?' தனது எண்ணத்தை செயலாக்க முற்பட்டவர், ஆலயத்தின் அருகில் இருந்த வீடுகளுக்குச் சென்று கோயிலில் விளக்கேற்ற எண்ணெய் தருமாறு வேண்டினார். அங்கிருந்தவர்கள் சமணர்கள். அவர்கள் எண்ணெய் தர மறுத்ததுடன், ''வேண்டுமானால் உமது இறைவனுக்கு தண்ணீர் ஊற்றி விளக்கேற்றும்!'' என்று எள்ளி நகையாடவும் செய்தனர்.

மனம் கலங்கிய நமிநந்தியடிகள், ஆலயம் சென்று இறைவனிடம், சமணர்களின் செயலைக் கூறி கண்ணீர் மல்க முறையிட்டார். அப்போது ஓர் அசரீரி.. ''நமிநந்திகளே.. அவர்கள் சொன்னது போலவே செய்யும். திருக்குளத்தில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி விளக்கேற்றும்!'' என்றது. அப்படியே செய்தார் நமிநந்தியடிகள். கோயில் விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. பல நாட்கள் தொடர்ந்த இந்தத் திருப்பணியால், சிவனருள் பெற்ற நமிநந்தியடிகள் நாயன்மார்களுள் ஒருவராகப் புகழடைந்தார்.

திருவொற்றியூர்

சென்னையின் வட பகுதியில் அமைந்திருக்கும் தலம் இது. முற்காலத்தில் இங்கு, 'சக்கரப் பாடி' என்றொரு பகுதி இருந்தது. இங்கு வசித்தவர் கலியநாயனார். இவர், எண்ணெய் எடுக்கும் தொழிலில் பெரும் பொருள் ஈட்டியவர்.

சிவபக்தியில் சிறந்த இந்த அடியவர், திருவொற்றியூர் படம்பக்கநாதர் ஆலயத்தில் விளக்கேற்றி திருத்தொண்டு புரிந்து வந்தார். இவரது பக்தியைச் சோதிக்க எண்ணிய இறைவன் இவரை வறுமைக்குள்ளாக்கினார். எனினும் திருவிளக்கேற்றும் பணியை கைவிடாமல் தொடர்ந்தார் கலியநாயனார். செக்கடிகளில் பணிபுரிந்து அதன் மூலம் கிடைக்கும் பொருளைக் கொண்டு விளக்கேற்றி, ஈசனை வழிபட்டு வந்தார்.

நாளடைவில் இதற்கும் சோதனை வந்தது. தனது மனைவி - மக்களை அடிமைகளாக விற்றேனும் விளக்கேற்றும் திருப்பணிக்குப் பொருளீட்ட முயன்றார். ஆனால் முடியவில்லை.

ஒரு நாள்.. வீட்டில் சிறிதளவு எண்ணெய் மட்டுமே இருந்தது. அதை எடுத்துக் கொண்டு ஆலயம் சென்றார். இருக்கும் எண்ணெயை ஊற்றி தீபங்கள் ஏற்றியவர், இறைவனை ஏறிட்டார்..

''ஒற்றீயூர் இறைவா.. எண்ணெய் தீர்ந்து இந்த விளக்குகள் அணையுமாயின், என் உதிரத்தைக் கொண்டு தீபமேற்றுவேன்!'' என்று சூளுரைத்தார். கால் நாழிகை கடந்திருக்கும்! ஒரு விளக்கில் எண்ணெய் தீர்ந்து, திரியில் பற்றிய தீபம், அணையும் நிலைக்கு வந்தது. சட்டென்று குறுவாளைக் கையில் எடுத்த கலியநாயனார் தன் கழுத்தை அறுத்து, விளக்கில் உதிரம் ஊற்ற முற்பட்டார். மறு கணம், இறைவனின் திருக்கரம் அவரைப் பற்றித் தடுத்தது. கலியநாயனாரை தம் திருவடியில் சேர்த்து பேரின்ப பெருநிலை அளித்தார் சிவபெருமான்.

சிதம்பரம்

தில்லை சிதம்பரத்தின் மாடவீதி.. தலையில் புல்லுக் கட்டைச் சுமந்தபடி சோர்வுடன் நடை போட்டார் கணம்புல்லர் என்கிற அடியவர். தலை பாரத்தைக் காட்டிலும், மனதின் பாரம், அவரை அதிகம் வருத்தியது!

எப்போதும் சீக்கிரம் விற்றுத் தீர்ந்து விடும் புல்லுக் கட்டு! இன்று ஏனோ இன்னும் விற்றபாடில்லை! புல் விற்றால்தான் காசு; காசு கிடைத்தால்தான் புலீச்சரம் பெருமானுக்கு விளக்கேற்ற முடியும்! 'ஈஸ்வரா இது என்ன சோதனை?' பரிதவிப்புடன் அடுத்த தெருவுக்குப் பயணித்தார். அங்கும் புல் வாங்குவார் எவரும் இல்லை! கவலையுடன் திரும்ப யத்தனித்தவரை, புலீச்சரம் கோயிலின் மணியோசை ஈர்த்தது. அவருடைய கால்கள் அனிச்சையாய்.. அந்த ஆலயம் நோக்கிப் பயணித்தன.

புல்லுக் கட்டுடன் ஆலயத்தின் உள்ளே சென்ற வர், புற்களைப் பிரித்தார். அவற்றையே திரியாக விளக்கில் இட்டார். தீபம் ஏற்றினார். சடுதியில் புல் கட்டு காலியானது!

'அதனால் என்ன.. இதோ என் தலை முடி இருக்கிறதே.. அதைக் கொண்டு விளக்கேற்றுவேன்!' என்று தனது சடைமுடியை அரிந்து விளக்கிலிட்டு எரித்தார். இவரது தளராத பக்தியைக் கண்ட சிவபெருமான், கணம்புல்லருக்கு வீடுபேறு அளித்தார்!

சைவம் மட்டும் இல்லை.. வைணவமும் போற்றுகிறது விளக்கு வழிபாட்டை! முதல் ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் பாசுரங்களால் விளக்கேற்றி திருமாலை வழிபட்டிருக்கிறார்கள்.

இப்போது புரிகிறதா தீப வழிபாட்டுக்கு எவ்வளவு மகிமைகள் என்று! இதனால்தான் புராணங்களும் ஞான நூல்களும் தீபாவளி, திருக்கார்த்திகை போன்ற தீப விழாக்களையும், தீப வழிபாட்டையும் போற்றிக் கொண்டாடச் சொல்கின்றன! விழாக் காலங்களில் மட்டுமல்ல.. நாள்தோறும்கூட வீட்டில் விளக்கேற்றி வழிபடச் சொல்கின்றன சாஸ்திரங்கள். அதன்படி விளக்கேற்றினால் தினம் தினம் தீபாவளிதான்!