நல்ல 'காரியம்'!

''துணிச்சல்ங்கற வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சுக்கணும்னா இந்த ஆறு பெண்களைப் பாருங்க'' என்று கோவை மாவட்டமே அவர்களை புகழ்ந்து தள்ளுகிறது. அப்படி என்ன துணிச்சல் என்று குழம்பிய நம்மிடம் லதா என்பவரின் செல்போன் எண்ணைக் கொடுத்தார்கள்.

''பெருசா ஒண்ணுமில்லீங்க.. இந்த கவர்மென்ட் ஆஸ்பத்திரியில சேர்ந்துடுற அநாதைப் பிணங்களை எடுத்துட்டு வந்து அடக்கம் பண்றோம். விளக்கமா பேசணும்னா கவர்மென்ட் ஆஸ்பத்திரி மார்ச்சுவரிக்கு வந்துடுங்களேன்'' என்று அவர் சாவதானமாக சொல்லி முடிக்க நாம் விக்கித்து நின்றோம்.

நம்மிடம் பேசிய லதாவோடு பூங்கொடி, புஷ்பவல்லி, பெனாசீர், ரஷிதா பேகம், சங்கீதா என்று அந்தப் பெண்கள் குழுவே மார்ச்சுவரியில் பரபரப்பாக நின்றிருந்தது. ''இந்த நல்ல காரியத்துக்கு எங்களை அழைச்சுக்கிட்டு வந்ததே லதாக்காதான்'' என்று மற்றவர்கள் கைகாட்ட, அவரே பேச ஆரம்பித்தார்..

''எங்க வீட்டுக்காரருக்குப் பூ வியாபாரம்ங்க. அவரும் அவரோட ஃப்ரெண்ட்ஸ் நாலு பேரும் எப்பவும் கோயம்பத்தூர் ஜி.ஹெச்-க்குப் போய் ரத்தம் குடுப்பாங்க. அப்போ, பக்கத்துல இருக்குற மார்ச்சுவரியில இருந்து கெட்ட வாடை வீசுதுனு புலம்புவாங்க. 'ஏன் அப்படி வாடை வருது?'னு ஒருதடவை விசாரிச்சப்போ, மார்ச்சுவரியில அளவுக்கு அதிகமா அநாதைப் பிணங்கள் சேர்ந்ததுதான் காரணம்னு சொன்னாங்க.

'இதையெல்லாம் நீங்களே அடக்கம் பண்ணக் கூடாதா?'னு அங்க வேலை செய்றவங்ககிட்ட கேட்டப்ப, 'எத்தனையைத்தான் நாங்க பார்ப்போம். எங்களைக் கேக்கறீங்களே.. நீங்களே அதைச் செய்யக் கூடாதா?'னு திருப்பிக் கேட்டிருக்காங்க. 'கண்டிப்பா செய்யறோம்'னு உடனடியா எங்க வீட்டுக்காரரும் அவர் ஃப்ரெண்டுங்களும் சேர்ந்து ஒரு அமைப்பை ஆரம்பிச்சாங்க. 'தோழர் அறக்கட்டளை'னு அதுக்குப் பேரு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் போலீஸ் உதவியோட, ஆஸ்பத்திரி ஆதரவோட அநாதைப் பிணங்களை கொண்டு வந்து முறைப்படி அடக்கம் பண்றது அந்த அமைப்போட வேலை.

தொழில் பண்ற ஆம்பளைங்களுக்கு இதுக்கெல்லாம் தனியா நேரம் ஒதுக்க

முடியாது இல்லியா? அதனால, நீயும் இதைச் செய்யேன்'னு எங்க வீட்டுக்காரரு சொல்லிக்கிட்டே இருந்தாரு. எனக்குத்தான் பிணத்தைப் பார்த்தாலே, பயமா இருக்கும். ஆனா, ஒருமுறை பிணத்தை அடக்கம் பண்ற அன்னிக்கு எங்க வீட்டுக்காரரையும் சேர்த்து மூணு பேர்தான் இருந்தாங்க. வேற வழியில்லாம நானும் ஒரு ஆளா தோள் கொடுத்தப்போ பயமெல்லாம் போயிடுச்சு'' என்கிற லதாதான் மற்ற பெண்கள் எல்லோரையும் 'தோழர் அறக்கட்டளை'யின் உறுப்பினர் ஆக்கியிருக்கிறார். இப்போது இந்தப் பெண்கள் படை வேலை நாட்களில் கூட இந்த சேவையைத் தொடர்கிறது.

''ஒருதடவை கவர்மென்ட் ஆஸ்பத்திரியில பிணத்தைத் தூக்கிக்கிட்டு லதாக்கா போய்க்கிட்டிருந்ததைப் பார்த் தேன். அவங்களோட துணிச்சல்தான் எனக்கெல்லாம் இன்ஸ்பிரேஷன்'' என்கிற சங்கீதா, கல்லூரியில் படித்துக் கொண் டிருந்தபோதே இந்த அமைப்பில் இணைந்து விட்டாராம்.

''நான் பத்தாவது படிக்கும்போதே சேர்ந்துட்டேன். இப்போ படிச்சு முடிச்சுட்டு வேலை பார்க்கறேன். இதோ என் தங்கச்சி பெனாசீர்.. இப்போ பத்தாவது படிக்கிறா இவதான் இப்போ இந்த அமைப்புல ரொம்ப சின்னவ'' என்ற ரசிதா பேகம்,

'' 'பர்தா போட்டுக்கிட்டு வீட்டுக்குள்ள இருக்கற உங்களை வெளியே பார்க்கிறதே கஷ்டம். இதுல மத்த மதத்துக்காரங்க பொணத்தைத் தூக்கறீங்களே'னு என்கிட்ட நிறைய பேர் கேட்டிருக்காங்க. ஆனா, கடவுளுக்குப் புரியும்ங்க எங்க மனசு'' என்றார் நிறைவான வார்த்தைகளில்

லதாவின் பூக்கடையில் வேலை பார்க்கும் புஷ்பவள்ளியும், சர்ச் வாசலில் மெழுகுவர்த்தி கடை வைத்திருக்கும் பூங்கொடியும் கூட 'தோழர் அறக்கட்டளை'க்குத் தோள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ''ஆம்புலன்ஸ், பூமாலை, வெட்டியானுக்குக் காசுனு இதுக்கு ஆகுற செலவை எங்க அமைப்புல இருக்கறவங்களே பங்கிட்டுக்குவோம். மார்ச்சுவரியில இருக்கற பிணங்களை மட்டுமில்ல.. இந்த ஏரியாவுல அடக்கம் பண்ணக் காசு இல்லாம வறுமையில இருக்கறவங்க எங்க அமைப்புக்கு போன் பண்ணினா, அதையும் எங்க அமைப்பு செலவுலயே அடக்கம் செய்யறோம்.

இதைக் கேவலமா நினைக்கிறவங்க எங்களை ஏளனமா பார்க்கறாங்கதான். ஆனா, நாங்க அதையெல்லாம் பெருசா எடுத்துக்கறதில்ல. ஏன்னா, இறந்தவங்களுக்கு இறுதிக்கடன் செஞ்சா புண்ணியம்னு சொல்லுவாங்க. தினம் தினம் அதைத்தான் நாங்க பண்ணிக்கிட்டிருக்கோம். இதுவரைக்கும் எவ்வளவு புண்ணியம் எங்க கணக்குல சேர்ந்திருக்கும் பாருங்க. இது கிடைக்குமா அவங்களுக்கு?'' - பூக்கடை வைத்திருக்கும் பூங்கொடிதான் இப்படிப் பேசுகிறார்.

நமக்கோ, ஞான குருவிடம் தீட்சை பெறுவது போலவே தோன்றுகிறது!

-லாவண்யா, படங்கள் தி.விஜய்