நம்பர் 19 ரங்கநாதன் தெரு..

தமிழ்நாட்டில் தி.நகருக்கும் ரங்கநாதன் தெருவுக்கும் அட்ரஸ் சொல்ல வேண்டுமா என்ன..? ஸ்டேட்டுக்கே.. ஏன் இந்த நாட்டுக்கே தெரிந்த அந்த ரங்கநாதன் தெருவில் நாம் குடித்தனம் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? ''யோசிக்காதீர்கள்'' என்று அலறுகிறார்கள் வாசு குடும்பத்தினர். ஆம்! தி.நகர் ரங்கநாதன் தெருவில் உயர உயரக் கட்டிய கடைகளுக்கு மத்தியில் ஒற்றை வீடாக 'ஓல்டு லுக்' தருகிறது இந்தக் குடும்பத்தினர் வாழும் வீடு.

''எங்கிட்ட கார் இருக்குங்க. இந்தத் தெருவுக்குள்ள அதைக் கொண்டு வர முடியாம பக்கத்துத் தெருவுல வாடகை கொடுத்து நிறுத்தி வைக்கிறேன். பிரைவேட் கம்பெனியில வேலை பார்க்குற நான், தினமும் ஆபீசுக்கே பஸ்சுலதான் போயிட்டு வர்றேன்'' என்று பரிதாபமாக ஆரம்பித்தார் குடும்பத் தலைவர் வாசு.

''வெளியூர் போயிட்டு வந்தாக் கூட பக்கத்துத் தெருவுல எறங்கி லக்கேஜை எல்லாம் தூக்கிக்கிட்டு நடந்துதான் வரணும். அது கூடப் பரவாயில்ல. என் தங்கை டெலிவரிக்காக இங்க வந்திருந்தப்போ, அவசரத்துக்கு எந்த வண்டியும் கிடைக்காதுங்கற ஒரே காரணத்துக்காக 'டெலிவரி டேட்'டுக்கு ரெண்டு நாள் முன்னாடியே அவளை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணினோம்'' என்று அவர் முடிக்க, அதே வேகத்தோடு ஆரம்பித்தார் அவர் மனைவி பானு..

''இங்க கடைகள் எல்லாம் திறக்குறதுக்கு முன்னாடி, காலையில ஏழு மணிக்கு இந்தத் தெருவுக்குத் தண்ணி லாரி வரும். எங்க வீட்டுப் பக்கத்துலதான் தண்ணி டேங்க் இருக்கு. இந்தத் தெருவுக்கே பொது வான டேங்க் அது. எங்களை மாதிரி இந்தத் தெருவுக்குள்ள எட்டு குடித்தனங்கள் இருக்குங்கறதே இங்க தண்ணி பிடிக்க வர்றவங்களைப் பார்த்துத்தான் தெரிஞ்சுக்க வேண்டி யிருக்கு. யார்கிட்டயும் நாங்க பேசிக் கிட்டது கிடையாது. எங்க வீடு வெளிப்படையா தெரியுது. ஆனா, அவங்க வீட்டுக்கெல்லாம் எந்தக் கடைக்குள்ள எந்தப் பாதை வழியா போகணுமோ.. அவங்க பாடு ரொம்ப கஷ்டம்'' என்று அவர் உச்சுக் கொட்டியவர்,

''இவ்வளவு கூட்டம் இருக்கு. ஆனா, ஏழாவது படிக்கிற எங்க பொண்ணு

பார்கவிக்கு வீட்டுப் பக்கத்துல பழகுறதுக்கோ பேச்சுத் துணைக்கோ கூட ஆள் இல்லைங்க.. பூராவும் கடைங்கதான்'' என்று புன்னகைத்து முடித்தார்.

வீட்டின் சீனியர் பாட்டி சரோஜாவிடமும் பேசினோம்.. ''70-கள்ல இந்த தெரு முழுக்க வீடுகள்தான் இருந்துச்சு. எங்க வீட்டு எதிர்ல ஒரு மாமரம் இருந்துச்சு. அப்போ இந்தத் தெருவுல காய்கறிகள்தான் விப்பாங்க. தொண்ணுறுகள்லதான் இந்த அளவுக்குக் கடைங்க பெருகிப் போச்சு'' என்று ஒரு பிளாக் அண்டு ஒயிட் தி.நகரை.. ஸாரி, மாம்பலத்தைக் கண்முன் விரிக்கிறார் பாட்டி!

வெளியே.. கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது மக்கள் வெள்ளம்!

-வே.பா.ஐஸ்வர்யா
படங்கள் எம்.மாதேஸ்வரன்