அனுராதா ரமணன்

பேசி ஜெயிக்கலாம் வாங்க!

சரளா வைத்தியநாதன் மாதிரியான அழுந்தினச் சமர்த்துகள் அலுவலகத்தில் இப்படி இருப்பது ஒருவிதத்தில் நல்லதுதான். தேவையில்லாத பேச்சுக்களை குறைத்து வேலையைப் பெருக்கலாம். ஆனால், வீட்டிலுமா தன்னை ஒரு அதிகாரியாகவே பாவித்துக் கொள்வது? சரளா அப்படித்தான்!

அதாவது, 'இதோ.. இதோ.. நம் ஜோக்கைக் கேட்டு, சரளா சிரிக்கப் போகிறாள்' என்று திருவாளர் வைத்தியநாதன் ஆவலோடு காத்திருந்தால் 'இதுக்கு நான் சிரிக்கணுமாக்கும்' என்று கேட்டு விட்டு நகர்ந்து விடுவாள்.

ஒரு தடவை வைத்தியநாதன் ஹோட்டலில் இடம் பிடிக்கப் பாய்ந்ததில் குப்புற அடித்து விழுந்தார். இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு முதலில் சிரித்தது சரளாதான்.

ஆனால், இந்தப் பெண்டாட்டி தாசன் சொன்னது என்ன தெரியுமா?

''சரளா சிரிக்கறாள்னா நான் எத்தனை தடவை வேணுமானாலும் குட்டிக்கரணம் போடத் தயார்மா..''

சரளாவுக்கு, கணவரின் தியாக மனப்பான்மை எல்லாம் தெரியாது.

ஆபீஸில் யாராவது அசிஸ்டென்ட் கிளார்க்குக்கு லீவு வேண்டுமானால், ''மேடம்.. மேடம்..'' என்று அவள் பின்னாலேயே சுற்ற வைப்பாளே.. அதேபோல, வைத்தியநாதன் தன் அக்கா, தங்கை வீட்டுக்குப் போக வேண்டுமென்றாலும் ''சரளா.. சரள்.. சரூ..'' என்றெல்லாம் இவள் எதிரில் காவடி எடுக்க வேண்டும்.

லேசில் பதில் வராது. என்னவோ அப்போதுதான் இந்தியா - அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தத்தில் தான் கையெழுத்திட வேண்டும் என்பதுபோல மோட்டு வளையைப் பார்ப்பாள்.. கொஞ்ச நேரம் கம்ப்யூட்டர் மவுஸை நகர்த்துவாள்.. ஏதோ ஒரு லோன் சாங்ஷன்.. 'எப்படி கொடுக்கப் போயிற்று?' என்று மானேஜரிடம் போனில் கேட்கத் துவங்கி விடுவாள்.

''சரள்.. என் தங்கை வீட்டுக்குப் போகலாம்னு இருக்.. ஸாரி.. போகலாமா?''

''அவ நாலஞ்சு நாளாக் கூப்பிட்டுக்.. அவ பேரனோட 'பர்த் டே'க்குக் கூட நாம போகல..''

''ஆமா.. இங்கே இருந்த புத்தகத்தை எங்கே காணும்?''

''சமையற்கார மாமி எடுத்தாப்பல இருக்கு. இரு.. நான் போய் வாங்கிட்டு வர்றேன்..''

வைத்தியநாதன், சின்னப் பையன் மாதிரி 'குடுகுடு'வென சமையலறைக்கு ஓடிப் போய், கையில் புத்தகத்துடன் திரும்பி வருவார்.

''மைதிலி.. அதான் என் தங்கை.. அவகிட்ட போன்ல நீயே பேசிடறியா.. வேணாம்.. உனக்கு எதுக்கு வீண் சிரமம்? நானே பேசிடறேனே.. சாயந்திரம் டின்னருக்கு சரவணபவனுக்கு வரச் சொல்லி.. இல்லேயில்லே.. உன் இஷ்டம்..''

சரளா ஒரு கையில் காபி டம்ளருடன் பத்திரிகையை ஆரம்பம் முதல் கடைசி வரை அலசுகிற வரையில் வைத்தியநாதன் கால் மாற்றிக் கால் வைத்துத் தவிப்பார். அடிக்கடி, மனைவி எந்தப் பக்கத்தை ஊன்றிப் பார்க்கிறாள் என்று கழுத்தை நெம்பிப் பார்ப்பார்.

''உம். என்ன கேட்டீங்க...''

''யாரு.. நானா.. நான் ஒண்ணுமே கேட்கலையே சரள்..''

''என்னமோ.. மைதிலி கூப்பிடுறான்னீங்க..''

''அ.. ஆமா.. போகலாமா.. எங்கே வரச் சொல்ல.. சரவணபவனா.. சங்கீதாவா..''

''டின்னரை முடிச்சிட்டு, நீங்க மைதிலியோட அவ வீட்டுக்குப் போங்க. நான் வீட்டுக்குத் திரும்பிடறேன்..''

''அய்யோ.. ஏன் சரள்?''

''என்ன, ஏன் சரள்.. உங்களை ஜெனரல் செக்-அப்புக்கு இந்த வாரம் டாக்டர் வரச்சொல்லி இருக்கார் இல்லையா.. மைதிலி வீட்டுக்குப் பக்கத்துலதானே டாக்டரோட கிளினிக்? அப்பிடியே போயிட்டு வந்துடுங்க..''

வைத்தியநாதன் முனி அடித்தாற்போல நிற்பார். சரளாவைக் கல்யாணம் செய்து இத்தனை வருடங்களாகிறது. அவள் எதை நிஜமாகச் சொல்கிறாள்.. எதை வேண்டுமென்றே கிண்டலாகச் சொல்கிறாள் என்பதை இன்னமும் அவரால் புரிந்து கொள்ள முடியாது.. நாத்தனார் வீட்டுக்குப் போவதில்தான் இத்தனை இடியாப்பச் சிக்கல் என்றில்லை..

சாதாரணமாக சமையல்கார அம்மா, சரளாவைப் பார்த்து ''பொரியல் என்ன பண்ணட்டும்?'' என்று கேட்டால்..

''என்னைக் கேட்டா? அவரைக் கேளுங்க..'' என்பாள்.

வைத்தியநாதன் இந்த வார்த்தையையே தனக்கு அளிக்கப்பட்ட மலர்க் கிரீடமாக நினைத்துக் கேட்பார்..

''என்ன காய் இருக்கு?''

''கொத்தவரை...''

''பேசாம பருப்புசிலியா பண்ணிடுங்க..''

சரளா, சட்டென வெடிப்பாள்.

''நாலு நாள் முந்திதான் பருப்புசிலி..''

''அப்ப... கூட்டா பண்ணிடச் சொல்லேன் சரள்..''

''ஒரு கரண்டிதான் செலவாகும். மிச்சமெல்லாம் வேலைக்காரிக்குத்தான்..''

''அப்படின்னா..''

''கொத்தவரங்காய தேங்கா, பருப்பு போட்டு கறியா பண்ணச் சொல்லுங்க..''

''ஓ.. ஆமாமா.. பச்சை பசேல்னு.. பிரமாதமா இருக்கும்..''

வைத்தியநாதன் இதற்கும் குழந்தை மாதிரி குதூகலிப்பார். அந்த அல்ப சந்தோஷத்தைக் கூட அனுபவிக்க விடமாட்டாள் சரளா..

''கொத்தவரங்காய் கறியில், இவருக்குத் தேங்காயே சேர்க்காதீங்க.. வெறுமே உப்பு போட்டு வேக வச்சா போதும். தேங்காய்ல கொலஸ்ட்ரால் இருக்கு..''

பரிதாபத்துக்குரிய வைத்தியநாதன் இந்த அழுந்தினச் சமர்த்தினால், தினம் தினமும், 'நான் சிரிக்கிறேன்.. சிரிக்கிறேன்.. சிரிப்பு வல்லே.. நான் அழுகிறேன்.. அழுகிறேன்.. அழுகை வல்லே..' - இப்படி நடிகர் திலகம் ரேஞ்சில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால்...

இந்த சரளாவையும் மிரள வைக்கிற ஒரு பிரஜை உண்டு..

''அய்யோ.. அவ கிட்டப் பேசி ஜெயிக்கவே முடியாது..''

- இப்படி சரளா யாரைப் பார்த்து, பாத்ரூம் கதவுக்கு இடுக்கில் ஒளியும் கரப்பான் பூச்சி போலப் பதுங்குவாள் என்றால்..

அவள்தான் அவர்கள் வீட்டு சமையற்கார அம்மாள் சம்பூர்ணம்!

இவளைப் பற்றியும் பேசவேண்டாமா?

-பேசுவோம்..