பாரததேவி

இப்படியும் சில கிராமங்கள்!

நத்தத்துப்பட்டி கிராமம் செல்வதற்காக சிவகாசியிலிருந்து பேருந்தில் ஏறியபோது சூரியன் நடுவானத்தில் அனலாய் தகித்துக் கொண்டிருந்தான்.

'குளுகுளு கிராமத்துக்குத்தானே போகிறோம்' என்று என்னையே நான் சமாதானப்படுத்திக் கொண்டு அனல் காற்றை சகித்தபடி காத்திருக்க, ''நத்தத்துப்பட்டி எல்லாம் எறங்குங்க'' என்று கண்டக்டர் விசில் ஊதிய இடம், ஒரு அத்துவானக் காடு.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை காக்கைகளும் குருவிகளும்தான் பாரதியை நினைவுபடுத்தியபடி பறந்தன. நகர்ந்த பேருந்தை நிறுத்தி, கண்டக்டரிடம்தான் வழி கேட்டேன்.

என்னையும் புகைப்படக்காரரையும் ஏற இறங்கப் பார்த்தவர், ''இப்பிடியே ரெண்டு பர்லாங் நடந்தீங்கனா ஊரு வரும்'' என்று சொல்லி, ''ரைட்.. ரைட்ட்டேய்..'' என்று விசில் ஊதினார். பேருந்தும் போன பிறகு நாங்கள் மட்டும் ஒருவருக்கொருவர் துணையாக பேசிக் கொண்டே அந்தக் கரிசல் காட்டு வண்டிப் பாதையில் நடந்து ஊருக்குள் நுழைய, எங்களை வழிமறித்தார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.

''யாருங்க நீங்க? எதுக்காவ எங்க ஊருக்கு வாரீக?'' என்று அவர் கேட்க, ''சும்மாதேன். உங்க ஊர சுத்திப் பாத்துட்டுப் போகலாமின்னு வந்தோம்'' என்று நான் சாதாரணமாகத்தான் சொன்னேன். அதற்கு அவர் இப்படி சத்தம் போடுவார் என்று எதிர்பார்க்கவில்லை

''இதென்ன பட்டணமா? ஊர சுத்திப் பாக்குறதுக்கு? நீங்க ஆரு? இந்தத் தம்பி ஆரு? எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்'' என்று அவர் பெருங்குரலெடுத்துப் பேச, பெரும் கூட்டம் ஒன்று சேர்ந்து விட்டது.

''பத்திரிகை..'' என்று எடுத்துச் சொல்லி, பெரியவரின் உஷ்ணத்தைக் குறைத்தேன். அதற்குள் சில பெண்கள் வந்து என்னை அழைத்துச் செல்ல, ''உங்க ஊர்ல வெளியூர் சம்பந்தமே கிடையாதாமே. பெண் எடுக்குறது, பெண் கொடுக்குறது.. எல்லாமே உள்ளூருக்குள்ளதான் பண்ணுவீங்களாமே. ஏன் அப்படி?'' என்று நேரடியாகவே விஷயத்துக்கு வந்தேன்.

''நாங்க பெத்த புள்ளைக எப்பவும் எங்க கூடவேதேன் இருக்கணுமின்னு பிரியப்படுதோம். அதனாலதேன் வெளியே சம்பந்தம் பண்ணுறதில்ல. எனக்கு

ரெண்டு ஆம்பளப் புள்ளைக.. ரெண்டு பொம்பளப் புள்ளைக எல்லாரையும் உள்ளூருக்குள்ளயேதான கொடுத்திருக்கேன்! என்றார் வீரலட்சுமி என்ற பெண். அருகில் இருந்த அவர் மகள் மாரியம்மாளின் முகத்தில் பெருமை பூத்திருந்தது.

ஊருக்குள் ஒரு வலம் வந்தால், ஒரு வீட்டுக்குள் போய் வந்த மாதிரியே இருக்கிறது.

''மதினி.. நேத்து நீ குடுத்த சுண்டக்கா கொழம்பு அம்புட்டு ருசியாம். எங்க வூட்டுக்காரரு 'எந்தங்கச்சி கைமணம்'னு ரொம்பத்தேன் புகழ்றாரு'' - பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார் ஒரு பெண்!

''ஏ சித்தி.. நேத்து குழாயடியில குடத்த வெச்சிட்டு வந்துட்ட.. இந்தா.. எங்கம்மா குடுத்து விட்டுச்சு..'' என்று கொடுத்து விட்டு ஓடுகிற சிறுமியை இழுத்துப் பிடித்து ஒழுகும் அவள் மூக்கைத் துடைத்து விடுகிறாள் அந்தச் 'சித்தி'!

ஒவ்வொரு காட்சியையும் நான் ஆசையோடு பார்க்க, ''இந்த ஒத்துமைக்குக் காரணம் எங்க பளக்கந்தேனம்மா. வெளியூர்க்காரவுகள ஊருக்குள்ள விட்டமின்னா, அவுக ஊருப் பளக்கத்தை மட்டுமில்ல.. பகையையுமில்ல கொணாந்துடுவாக.. நாங்க தாயா, புள்ளயா பளகுரது கெட்டுப் போகுமில்ல..'' என்றார் அந்த ஊரில் டீக்கடை வைத்திருக்கும் பாலு.

''அதுக்காக பெரிய அரசாங்க உத்தியோகத்தில இருக்கிறவங்க வந்து உங்க பொண்ண கேக்குறாங்கன்னு வச்சிக்கோங்க. அப்பக்கூட கொடுக்கமாட்டீங்களா?''

நான் கேட்க, ''கண்டிப்பா கொடுக்க மாட்டோம்'' என்று அடித்துச் சொன்னார் பாலு.

''அப்ப உங்க பொண்ணு வசதியா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலே. அப்படித்தானே?'' கிடுக்கிப் பிடி என்று நினைத்துத்தான் போட்டேன். ஆனால், மனிதர் நச்சென்று பதில் சொன்னார்..

''நீங்க வசதின்னு எதச் சொல்லுறீக? மொகமறியாத மனுசனுக்கு பணத்த மட்டுமே நெனச்சி வாக்குப்பட்டு, ஒத்தையா கிடக்கிறதா வசதி? அதை விட, பெத்தவுககூடயும், பொறந்தவுககூடயும் இருக்கிறதே ஒரு வசதிதானுங்க. இன்னைக்கு ஒரு ராவம் (லாபம்) நட்டம் வந்தாலும் தன் குடும்பத்துக்காரக கூட பேசி தீத்துக்கிறது எப்படி?

மேலுக்கு சேட்டமில்லன்னு (உடம்பு அசௌகரியம்) வச்சிக்கோங்க.. அந்தப் பொண்ணோட ஆத்தா, அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பிக, அவுக பொண்டாட்டிகளோட வீடு நிறைய வந்து கஞ்சி காச்சி குடுக்கிறதும், கசாயம் போட்டுக் கொடுத்து மேலு, கால அமுக்கிவிட்டு குளுச்சியா (குளிர்ச்சியாக), நாலு வாத்த (வார்த்தை) பேசுறதையும் பாத்தீகன்னா அந்நியப்பட்ட உங்களுக்கே கண்ணு கலங்கிரும்'' என்று அவர் சொன்னபோது என்னால் பேச முடியவில்லை.

''அது மட்டுமா? இன்னைக்கு ஒரு அவசர வேல வந்துருச்சின்னு வையுங்க. அய்யய்யோ பொழுது அடைஞ்சிருச்சே.. புள்ளைக பட்டினியா கிடக்குமேங்கிற விசாரம் (கவலை) ஆருக்கும் கிடையாது. ஏன்னா ஒருத்தரு வீட்டு அடுப்புல உல ஏத்தாட்டாக்கூட அவள சேந்த தாயீ, புள்ளைக வீட்டுல காய்ச்சி, கலக்கி

வச்சிருப்பாக. யாருக்கு எங்க சாப்பிட பிரியமிருக்கோ அங்க சாப்புட்டுக்கிடுவாக.

ராத்திரியில அவுக, அவுக வீட்டுல காய்ச்சுன சோறு, கொழம்போட ஒன்னா ஒரே முத்தத்தில உக்காந்துக்கிட்டு, நிலா வெளிச்சத்துல கதையும் நொடியும் போட்டுக்கிட்டு ஒருத்தரு சாப்பாட்ட ஒருத்தருக்கு அள்ளிக் கொடுத்து சாப்புடுவோம் பாருங்க.. அதவிடவா வேற வசதியும் சொகமும் வேணுமின்னு நீங்க நினைக்கிறீக?'' என்று அவர் கேட்டபோது, நாமும் அந்த ஊரில் பிறக்கவில்லையே என்று ஏக்கமாக இருந்தது.

வெளியில் பெண் கொடுப்பதையும் எடுப்பதையும் கிராமத்தில் யாராவது ஒருவர் கூடவா விரும்பாமல் இருப்பார்கள்?

''ரெண்டு மூணு பேர் அப்பிடி பேச்சு வார்த்த நடத்துறது தெரிய வந்துச்சு. ஒடனே, அவுக முறக்காரக சண்டைக்கு வந்ததோட, அப்பவே பஞ்சாயத்தயும் கூட்டிட்டாக.

பஞ்சாயத்துலயும் என்ன சொன்னாக? 'பொட்டியத் தூக்கி சட்டிய மூடுன மாதிரி' ஒண்ணுக்குள்ள ஒண்ணு சம்பந்தம் பண்ணிக்கிட்டு உள்ளங்கையும், பெறங்கையுமா இருந்துட்டு போகாம..'னு அவுக பேசினப்போ யாராலயும் எதுவுமே பேச முடியல..'' மீசையை முறுக்கியபடி சொன்னார் பாலு.

இன்னொரு வழக்கமும் இந்தக் கிராமத்துக்கு மட்டுமே உரித்தான ஆச்சரியம்! இங்கு அக்கா மகளைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்களாம்!

''ஒரே ஊருக்குள்ள கல்யாணம் முடிக்கிறமே தவுத்து ரத்த சொந்தத்துக்குள்ள பொதுவா முடிக்க மாட்டோம். அதே சமயம், வெளிய (ஊருக்குள்ளேயேதான்.. ஆனால், ரத்த உறவாக இல்லாமல்) வாக்குப்பட்டு போன பொண்ணு, தன் மகள தன்னோட அத்த மகனுக்குக் கொடுத்துக்கிடுவா..'' என்றார் பழனி என்பவர்.

கீரை விற்பதுதான் இவர்களின் முக்கிய தொழில்.

''உள்ளங்கையளவு இடம் இருந்தாக்கூட அதுல கீரை விதைச்சிருவோம். முதல் நாளே பொழுதூர (சாயங்காலம்) அறுத்து வச்சிருந்து, மறுநாளு இருக்கன்குடி, சாத்தூரு.. இப்பிடி எல்லா ஊர்லயும் கொண்டுபோயி எங்க வீட்டுப் பொண்ணுக வித்துட்டு வந்துருவாக!'' என்றவர், ''இந்தப் பாட்டி இந்த ஊருக்கே சொந்தக்காரப் பாட்டி'' என்று கிருஷ்ணம்மாள் பாட்டியை அறிமுகப்படுத்திச் சென்றார்.

''இந்தா.. ஒரு தெரு வழி போயி மறு தெரு வழி வாரேன்.. எத்தன புள்ளைக, பொண்ணுக, பேரன், பேத்திக.. 'வா பாட்டி! இந்தா இத சாப்புட்டுப் போ, அத சாப்புட்டுப் போ'ன்னு வீட்டுக்கு வீடு கூப்புடுதாக. 'கொடிய தூக்குனா கோடி சனம்.. செடிய தூக்குனா சேன தளமின்னு' நாங்க ஒக்களும், மக்களுமாத்தேன் இருக்க விரும்புதோம்.

முக்கியமா எங்க ஊருல மாமியா - மருமவ சண்ட கெடையாது தாயீ. அதே மாதிரி வயசானவுகளுக்கு சாவுற முட்டும் மரியாத உண்டு. இதயெல்லாம் எளுது தாயீ..''

உரத்த குரலில் கிருஷ்ணம்மாள் உத்தரவிட, கடைசியாக அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாதுதான்! ஆனாலும் கேட்டேன்..

''சரி எங்கள மாதிரி ஆளுகளுக்கு வீடுகள வாடகைக்காவது விடுவீகளா?''

பழுத்துச் சிவத்த அந்தப் பாட்டியின் முகத்தில்தான் எத்தனை கோபம்!

''ஆத்தாடீ.. வாடகைக்கு வீடு விட்டா சந்துக்குள்ள பூந்து இஞ்சி வெதச்சிர மாட்டீக.. எங்க ஊருக்குள்ளயே ஆரையும் விட மாட்டமே. பாவம் நீங்க.. எந்த ஊரோ, என்னமோ! காபித் தண்ணி தாரோம். குடிச்சிட்டு, அந்தா தெரியுதில்ல முக்கு.. அதப் பாத்து நடங்க. பஸ்சு வரும். ஏறிப் போங்க'' என்றார் 'அன்போடு'.

பேச்சில்லாமல் திரும்பி நடந்தோம் இருவரும். நிலவு மெள்ள எட்டிப் பார்த்தது.. அந்த ஊருக்குள் தன் ஒளியைப் பாய்ச்சலாமா.. வேண்டாமா.. என்று பயந்த மாதிரி!

-இன்னொரு கிராமத்தில் சந்திப்போம்..
படங்கள் ஆ.வின்சென்ட் பால்