சுசரிதா பாலு

பட்டு.. அந்தக் காலம் தொட்டு!

மினி தொடர்

சீனா, தன் பட்டு ரகசியத்தை ஒரு 'அவளி'டம் கோட்டை விட்டதாகச் சொன்னேன் இல்லையா.. அந்த வரலாறு இதுதான்..

சீன தேசத்திலேயே பிறந்து, வளர்ந்த ஒரு இளவரசி, அயல்நாட்டு அரசன் ஒருவனை மணந்தாள். தனக்குப் பிரியமான பட்டை விட்டு விட்டுப் புகுந்த வீட்டுக்குப் போக அவளுக்கு மனமே இல்லை.

அவள் என்ன செய்தாளாம் தெரியுமா? யாருக்கும் தெரியாமல், தன் கொண்டைக்குள் பட்டு நூல்கண்டை வைத்து, அது வெளியே தெரியாமல் இருக்க, ஒரு தந்தச் சீப்பையும் தலையில் செருகிக் கொண்டு போனாளாம்! அதனால்தான், இன்றைக்கும் சீன, ஜப்பானியப் பெண்களின் கொண்டையில், 'சில்க்' இல்லாவிட்டாலும் சீப்பு இருக்கிறது.

முதல் முறையாக, பட்டு நூல் இப்படித்தான் சீன எல்லையைத் தாண்டியதாகச் சொல்வார்கள்.

சீனர்கள் பட்டுத் துணியை கன்னாபின்னாவென்று உபயோகித்திருக்கிறார்கள். ஆம்! கடிதங்கள் கூட, பட்டில் எழுதி, பட்டுவாடா செய்யப்பட்டிருக்கின்றன.

பழைய கிரேக்க நாட்டில் பைஸான்டியம் என்றொரு நகரம் இருந்தது! அதை ஜஸ்டிநியான் என்கிற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பட்டு பற்றிய ரகசியத்தைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால், பைத்தியமே பிடித்துவிடும் என்கிற நிலை..

இதற்காக இரண்டு புத்த மத குருக்களை சீனாவுக்கு அனுப்பி, ''எப்படியாவது பட்டு ரகசியத்தை அறிந்து வாருங்கள்.. இல்லையென்றால், தொலைந்தீர்கள்'' என்று மிரட்டி அனுப்பினான்.

சீன நாட்டுக்குப் பாத யாத்திரையாக வந்த, இந்த இரு மத குருக்களும், ஊர் திரும்பும்போது தங்களுடைய 'வாக்கிங் ஸ்டிக்'குக்குள் (இது மூங்கிலினால் ஆன குழாய்) பட்டுப் பூச்சிக் கூடுகளைத் திணித்துக் கொண்டு திரும்பினார்களாம்.

பாருங்கள்.. வல்லவனுக்கு வாக்கிங் ஸ்டிக் கூட ஆயுதம்தான். அந்த நாளிலேயே கடத்தல் இப்படித்தான் ஆரம்பமாகி இருக்கிறது..

இத்தனை சிரமப்பட்டு பட்டைக் கடத்தும் அளவுக்கு, அதன் மீது தீராத காதல் கொண்டிருந்தன அனைத்து நாடுகளும்!

ரோமானியர்கள், பட்டு ஒரு வகை மரப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் நார் என்று நம்பினார்கள். அதையே புத்தகங்களிலும் எழுதினார்கள். அழுத்தமாகவும் விஷமமாகவும் புன்னகைத்துக் கொண்டது சீன அரசு.

ஜப்பானுக்கு எப்படி வந்தது தெரியுமா பட்டு? பட்டு நெசவில் ஈடுபட்டிருந்த ஐந்து இளம் சீனப் பெண்களை சினிமா வில்லன்கள் பாணியில், கடத்திக் கொண்டு வந்து, 'மாங்கல்யம் தந்துனாநேனா' என்று தாலியும் (தாலியா, மோதிரமா.. அட, ஏதோ ஒன்று) கட்டி, தங்கள் சொந்தம் ஆக்கிக் கொண்டார்கள் ஜப்பானியர்கள். பிறகு அவர்களை கெஞ்சியும் கொஞ்சியும் சீன சாம்ராஜ்யத்தின் கௌரவச் சின்னமாக இருந்த பட்டு நூல் ரகசியத்தைத் தெரிந்து கொண்டார்கள்.

பட்டு நூல் ரகசியத்தைத் தெரிந்து கொண்ட மாத்திரத்திலேயே ஜப்பான்காரர்கள் பட்டு உற்பத்தியில் சீனாவை மிஞ்சி விட்டார்கள்!

அதற்குக் காரணம்.. சீனாவுக்கு பட்டு நூல் உற்பத்தியின் மூலம் தெரிந்திருந்ததே தவிர, உற்பத்தித் திறனை நவீனப்படுத்தி, சாகசங்கள் புரியக் கூடிய அளவுக்கு சாமர்த்தியம் இல்லை..அறிவுத் திறன் இல்லாத உழைப்பாளிகள் சீனர்கள். ஜப்பான்காரர்கள் அப்படி இல்லை.. அவர்களது மூலதனமே மூளைதான்.. பரபரவென யோசித்து, தூள் கிளப்பி விட்டார்கள்.

அதோடு, அதை ரகசியமாகவெல்லாம் பாதுகாக்காமல் மற்ற நாடுகளுக்கும் பொதுவுடைமையாக்கினது ஜப்பான். இங்கிருந்து இத்தாலிக்குப் பயணம் செய்த பட்டு, அந்த நாட்டு அரசர்கள், கன, தனவான்களை எல்லாம் பிரமிக்க வைத்தது. பட்டின் மென்மையிலும் தோற்றத்திலும் மயங்கித்தான் போனார்கள் இத்தாலிக்காரர்கள்.

''சீனாவுல சிப்பாய்கள் கூட பட்டுலதான் டிரஸ் போட்டுக்கறாங்களாம். நாம போட்டுக்கலையின்னா எப்படி..'' என்று இத்தாலியில் 'பட்டு', ஒரு கௌரவப் பிரச்னையாகவே ஆகிவிட்டது. முக்கிய விருந்துகளில் பட்டாடை அணியாமல் பங்கேற்பவர்களை யாரும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்கிற அளவுக்கு!

எல்லாம் சரிதான்.. நம் இந்தியாவுக்குள் பட்டு எப்படி வந்ததாம் தெரியுமா?

-பட்டுப் பயணம் தொடரும்..