என் டைரி-185

பெற்றவர்களுக்கும் கணவருக்கும் இடையே சிக்கித் தவிக்கிற அபலைப் பெண் நான்.

என் பெற்றோருக்கு நான் ஒரே மகள். பாசத்தைக் கொட்டித்தான் என்னை வளர்த்தார்கள் என் பெற்றோர். என் தாய்மாமன் மகனுக்கே என்னை திருமணமும் செய்து கொடுத்தார்கள். 30 பவுன் நகை போடுவதாகப் பேசிய என் தந்தை அப்போது 20 பவுன் போட்டு, மீதி 10 பவுனை பிறகு போடுவதாக வாக்குக் கொடுத்தார். ஆனால், அதையெல்லாம் என் கணவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் மீது காதலைப் பொழிந்தார்.

இந்த சமயத்தில்தான் எங்கள் நிம்மதியைக் குலைத்துப் போட்ட அந்த சம்பவம் நடந்தது. என் அப்பா செய்து கொண்டிருந்த தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு, பிரச்சினையாகி, விஷயம் போலீஸ் வரை சென்றது. நொந்து போயிருந்த என் தந்தைக்கும் தாய்க்கும் அந்த நேரத்தில் பெரும் ஆறுதலாக இருந்தவர் என் கணவர்தான்.

என் நகையிலிருந்து 15 பவுனை எடுத்து என் அப்பாவுக்குக் கொடுத்தார். மேலும், அவர்கள் தனியே இருப்பது நல்லதல்ல என்று சொல்லி, என் பெற்றோரைத் தன் பெற்றோருடைய வீட்டின் அருகில் குடியேறச் செய்தார். (நானும் என் கணவரும் மட்டும் அருகிலேயே இருக்கிற இன்னொரு ஊரில் குடியிருக்கிறோம்.)

இந்த நேரத்தில்தான், ஒரு செய்யக் கூடாத காரியத்தை செய்து விட்டார் என் தந்தை. யாரோ என் கணவருடைய நடத்தை பற்றித் தவறாகச் சொன்னதை நம்பி, அவருடைய உறவினர் ஒருவரிடமே அவரைப் பற்றித் தப்பும் தவறுமாகப் பேசிவிட்டார்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு கடும் கோபம் கொண்ட என் கணவர், என் தந்தையை தகாத வார்த்தைகளால் நேரடியாகவே திட்டினார். இதில் வார்த்தைகள் தடித்து, என் அப்பா என் கணவரை ''செருப்பால் அடிப்பேன்'' என்று சொல்ல, என் கணவர் நிஜமாகவே அப்பாவை செருப்பால் அடிக்க, பிரச்னை பெரிதாகி விட்டது.

அதன் பிறகு, அந்த 15 பவுன் நகைகளையும் இன்னும் தர வேண்டிய 10 பவுன் நகைகளையும் தரச் சொல்லி என் பெற்றோரைத் திட்டிக் கொண்டேதான் இருப்பார் என் கணவர்.

என் பெற்றோரிடம், ''ஏன் இப்படிச் செய்தீர்கள்?'' என்று கேட்டால், ''நாங்கள்

பேசியதை விடவும் மோசமாகத்தான் அவன் நடந்து கொண்டு விட்டானே.. பிறகென்ன?'' என்கிறார்கள். கடந்த சில வருடங்களாக இப்படியே பிரச்னை தொடர்கிறது.

எங்களுக்குக் குழந்தையும் இல்லை. மருத்துவரிடம் சென்று பல பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறோம். ''இருவர் உடலிலும் ஒரு குறையும் இல்லை. உன் மனம் சந்தோஷமாக இருந்தால்தான் நமக்குக் குழந்தை பிறக்கும்'' என்கிறார் என் கணவர்.

இதற்கிடையே சமீபத்தில் என் தாய் வீட்டுக்கு வந்த நான் மீண்டும் என் கணவர் வீட்டுக்குப் போகவில்லை. காரணம், என் அம்மா வீட்டு உறவினர் ஒருவருக்கு போன் செய்த என் கணவர், என் அம்மாவையும் என்னையும் பற்றி மிகவும் கீழ்த்தரமாகப் பேசியதாக அந்த உறவினர் சொன்னதுதான்.

இதனால், என் கணவர் மீது ரொம்பவும் கோபமான நான் அவருக்கு போன் செய்யவில்லை. அவரும் என்னிடம் பேசவில்லை. உறவினர்களை வைத்து சமாதானம் பேசலாம் என்றால், அனைவரும் பிரச்னையைப் பெரிதுபடுத்துகிறார்கள்.

மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். விவாகரத்து எண்ணமும் தற்கொலை எண்ணமும் என்னை ஆட்கொண்டுள்ள நிலையில், குழம்பிப் போய்த் தவிக்கிற எனக்கு சரியான ஆலோசனை வழங்குங்கள் தோழிகளே..

- பெயர் வெளியிட விரும்பாத 'அவள்' வாசகி

சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

என் டைரி 184-ன் சுருக்கம்

''எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. என் சுபாவமே.. எதையும்

மனதில் வைத்துக் கொள்ளத் தெரியாததுதான். திருமணமான ஆரம்ப நாட்களிலேயே என் பிறந்த வீட்டு உறவுகள் பற்றிய எல்லா விஷயங்களையும் என் கணவரிடம் ஒப்பித்து விட்டேன். ஒருமுறை என் அம்மா வீட்டில் உறவுகள் கூடி சிரித்து பேசிக்கொண்டிருக்கும்போது நான் அவர்களைப் பற்றி சொன்ன விஷயங்களை வைத்து என் கணவர் தப்பாகக் கிண்டலடித்து விட்டார். இதனால் விஷயம் விபரீதமாகி, உறவுகளின் மனக்கசப்புக்கும், கோபத்துக்கும் ஆளாகித் தவிக்கிறேன். உறவுகளுடன் ஒன்று சேர நான் என்ன செய்ய வேண்டும்?''

என் டைரி 184-க்கான வாசகிகள் ரியாக்ஷன்..
''அதிகம் கேள்.. குறைவாகப் பேசு'' என்பார்கள் பெரியவர்கள். அது உன் வாழ்க்கையில் தலைகீழாக நடந்திருக்கிறது.
இப்போது நீ செய்ய வேண்டியவை மூன்று காரியங்களைத்தான்! முதலில் உன் சகோதரியிடம் மனம்விட்டுப் பேசி, மன்னிப்புக் கேள். உடன் பிறந்தவராயிற்றே! நிச்சயம் மன்னித்து சகஜ நிலைக்கு வந்து விடுவார். இரண்டாவதாக, உன் கணவரிடம் அவர் இப்படி எல்லோர் முன்னிலையிலும் பிறரை மட்டம் தட்டுவது தவறு என்பதை எடுத்துச் சொல்லி, அதற்கு முற்றுப் புள்ளி வை. மூன்றாவதும் முக்கியமானதும் என்ன தெரியுமா? நீ அளவோடு பேச வேண்டும் என்பதுதான். அப்புறமென்ன... இனி.. வாழ்க்கையே இனிமைதான்!

- கு.சி.கோமதி, கொங்கணாபுரம்

மணமகளுக்குக் கூறும் அறிவுரைகளில் 'புகுந்த இடத்தில் பிறந்த இடத்தைப் புகழக் கூடாது' என்று அதற்கே வரையறை சொல்வார்கள். அப்படி இருக்க, தனிப்பட்ட ரகசியங்களையும் குறைகளையும் சொல்லலாமா..?

தவறு உன்னிடம் இருப்பதால், 'நீ அந்த விஷயங்களை தமாஷாகத்தான் சொன்னாய்' என்பதை உறவுகளிடம் அன்பாக எடுத்துச் சொல்லி, 'இருந்தும் என் செய்கை உங்களை காயப்படுத்தியிருந்தால் தயவுசெய்து மன்னித்து விடுங்கள்' என்று தாழ்மையுடன் மன்னிப்பும் கேள். நீர் அடித்து நீர் விலகாது. உறவுகள் புதுப்பிக்கப்படும். உன்னவரும் குடும்பத்தில் புது உறுப்பினர் என்பதால், உன் அணுகுமுறையில் உறவினர்களும் நிச்சயம் உன்னைப் புரிந்து, சுமுகமாகி விடுவார்கள்.

- எஸ்.ஜானகி, உடுமலை.

வாய் ஒரு சிறிய உறுப்பாக இருந்தாலும் பெரும் தீமைகளை அது கொண்டு வந்து விடும் என்பதை இப்போதாவது புரிந்து கொண்டீர்களே. நாவை மட்டும் அடக்கினால் நான்கு உலகங்களையும் வெல்லலாம். இந்தப் பிரச்னையையே ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, 'இனி யாரைப் பற்றியுமே பாஸிடிவ் ஆன விஷயங்களை மட்டுமே பேசுவது' என்று சங்கல்பம் எடுங்கள். இதை நீங்கள் தொடர்ந்து பின்பற்றினாலே ஊரும் உறவும் உங்களை மதிக்கும். உங்கள் கணவர், அவர் வீட்டார், உங்கள் வீட்டார் என்று அனைவருடைய அன்பையும் பெறுவீர்கள்.

- டி.வசந்தா, திண்டுக்கல்

நிபுணர் சொல்கிறார்..

வி.கோபால்பிள்ளை, மனநல ஆலோசகர், மதர் சேவை நிறுவனம், திண்டிவனம்

'' 'யாகாவாராயினும் நாகாக்க..' என்னும் வள்ளுவரின் குறளுக்கேற்ப, உறவுகளைப் பற்றிப் பேசும்போது அது அவர்களை பாதிக்காத வண்ணம் பேசியிருக்க வேண்டும். பரவாயில்லை.. உங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்து விட்டது. இப்படி நடந்து விட்டதற்காக நீங்கள் படுகிற வேதனையை உங்கள் உறவுகளிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள்.

அவர்கள் உங்களைப் பற்றிப் பெருமைப்படும்படியான நல்ல செயல்களில் இனியாவது ஈடுபடுங்கள்.

உங்கள் கணவரிடம், பெற்றோர் உங்களை வளர்க்க சிரமப்பட்ட விதம், உறவுகள் உதவிய விதம் பற்றியெல்லாம் பேசுங்கள். இதனால், உங்கள் கணவருடைய மனதில் உங்கள் குடும்பம் பற்றிய நல்ல இமேஜ் உருவாகும்.

நடந்ததையே நினைத்துக் குழம்பாமல், உங்களுக்குப் பிடித்த செயல்களில் கவனம் செலுத்துங்கள். மனம் தெளிவாகும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதும் புரியும்.

எப்போதுமே பேசும்போது, நிதானமாக சிந்தித்து, சமயோசித புத்தியுடன் பேசுங்கள். இப்படிச் செய்வது இதுபோன்ற பிரச்னைகளை முற்றிலும் தவிர்க்கும்.''