'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்!

அக்டோபர் 15-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை

மேஷம் யதார்த்தமான பேச்சால் ஈர்க்கும் நீங்கள் இன, பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் எளிமையாகப் பழகுவீர்கள். குருவும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் சவால்களில் வெற்றி அடைவீர்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். 7-ம் வீட்டில் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் கணவருக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். குடும்ப ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். சகிப்புத் தன்மையால் சாதிக்கும் காலமிது.

ரிஷபம் அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பாத நீங்கள், உழைப்பால் உயர்ந்தவர்கள். சுக்கிரன் வலுவாக இருப்பதால் கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். உடல் அசதி, சோர்வு நீங்கும். அரசு வேலைகள் விரைந்து முடியும். 6-ம் வீட்டில் முக்கிய கிரகங்கள் மறைந்திருப்பதால் தாயார், கணவரின் உடல் நலத்தில் கவனம் அவசியம். மாமியார், நாத்தனார் வகையில் பொறுமை காப்பது நல்லது. பிள்ளைகள் நல்லபடியாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். கமிஷன் மூலம் பணம் வரும். உத்யோகத்தில் தவறுகளை அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். திறமைகள் வெளிப்படும் வேளையிது.

மிதுனம் 'உலகம் ஒரு சந்தை மடம்' என்பதை உணர்ந்த நீங்கள், அதிகம் ஆசைப்பட மாட்டீர்கள்.. யாருக்காகவும் அஞ்சவும் மாட்டீர்கள். குருவும் சனியும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் செல்வாக்கு கூடும். வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். சுக்கிரன் மறைந்திருப்பதால், கணவருடன் கருத்து மோதல் வரலாம். உடல் உபாதைகள் வந்து நீங்கும். வாகன, வீடு பராமரிப்புச் செலவு கூடும். மாமனார் உதவுவார். மச்சினருக்கு நல்ல மணப்பெண் அமைவார். வியாபாரத்தில் புது முதலீடுகளை யோசித்து செய்வது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். உணர்ச்சி வசப்படக் கூடாத நேரமிது.

கடகம் காலங்களும் காட்சிகளும் மாறினாலும் கலாசாரத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்களே! 5-ம் வீட்டில் நிற்கும் சுக்கிரனால் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். கணவருடன் இருந்த கருத்து வேறுபாடு குறையும். 4-ம் வீட்டில் நெருப்பு கிரகங்கள் நிற்பதால் அலைச்சல், செலவு இருக்கும். பாதச் சனி நடைபெறுவதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். மருந்து, உணவு வகைகளால் லாபம் வரும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. உத்யோகத்தில் மற்றவர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். தெய்வ பலத்தால் முன்னேறும் நேரமிது.

சிம்மம் மனித நேயம் மிக்க நீங்கள், தன்னை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டீர்கள். குருவின் திருவருள் தொடர்வதால் ஜன்மச் சனியால் ஏற்படும் தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் பரவாயில்லை. புதன் சாதகமாக இருப்பதால் சமயோஜிதபுத்தியால் சாதிப்பீர்கள். கணவர் பாசம் காட்டுவார். பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் தாமதம் ஏற்படும். உங்கள் ராசிநாதனை சனி பார்ப்பதால் உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். அரசியல்வாதிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் தருணமிது.

கன்னி மற்றவர்களின் மனம் கோணாமல் பேசும் நீங்கள், சாதிக்கத் துடிப்பவர்கள். 15-ம் தேதி முதல் 17-ம் தேதி காலை 9.30 மணி வரை முன் யோசனையுடன் பதற்றப்படாமல் செயல்படுவது நல்லது. சுக்கிரன் வலுவாக இருப்பதால் தன்னம்பிக்கை துளிர்விடும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். ராசிக்கு 2-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம். வாகனச் செலவு வரும். வியாபாரத்தில் மறைமுக போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் வேளையிது.

துலாம் தன்மானம் அதிகம் கொண்ட நீங்கள், நெறிமுறைகளை மீற மாட்டீர்கள். ராசிக்கு 2-ம் வீட்டில் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். கணவர் உங்களை பாராட்டுவார். நாத்தனார், கொழுந்தனார் மதிப்பார்கள். 17-ம் தேதி காலை 9.30 மணி முதல் 19-ம் தேதி நண்பகல் வரை உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவீர்கள். உடல் நலம் பாதிக்கப்படலாம். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வந்து சேரும். வியாபாரத்தில் பழைய பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். உயரதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கையால் சாதிக்கும் நேரமிது.

விருச்சிகம் மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்படும் நீங்கள், பிறர் செய்யும் தவறைத் தட்டிக் கேட்க தயங்க மாட்டீர்கள். உங்கள் ராசிக்குள் சுக்கிரன் வலுவாக இருப்பதால் குடும்பத் தில் சந்தோஷம் நிலைக்கும். கணவர் உங்களுக்கு உதவுவார். மகளுக்கு கல்யாணம் நடக்கும். 2-ல் இருக்கும் குருவால் பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். 19-ம் தேதி நண்பகல் முதல் 21-ம் தேதி மதியம் 2.30 மணி வரை எதிலும் நிதானம் தேவை. அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். தைரியமாக புதிய பாதையில் பயணத்தைத் தொடங்கும் காலமிது.

தனுசு தடைகள் பல வந்தாலும் தயங்காமல் எடுத்த வேலையை முடித்துக் காட்டும் நீங்கள், சொன்ன சொல் தவறாதவர்கள். உங்களின் பாக்யாதிபதி சூரியன் 17-ம் தேதி முதல் லாப வீட்டுக்குள் நுழைவதால் சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். ஆனால், சூரியன் நீசமாவதால் மருத்துவச் செலவு வந்து போகும். பணப் பற்றாக்குறை அகலும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். குழந்தை பாக்கியம் உருவாகும். 21-ம் தேதி மதியம் 2.30 மணி முதல் 23-ம் தேதி மாலை 6 மணி வரை முன்கோபம், டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். நல்ல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பழைய பிரச்னைகள் தீரும். புது பொறுப்பும் வாய்ப்புகளும் கதவைத் தட்டும் நேரமிது.

மகரம் பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிந்து அகற்றுவதில் வல்லவர்களான நீங்கள், பெரியோர்களை மதிக்கத் தவற மாட்டீர்கள். சுக்கிரன் லாப வீட்டில் வலுவாக இருப்பதால் மனச்சோர்வு விலகும். இழுபறியாக இருந்த காரியங்கள் கைகூடும். கணவர் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். 23-ம் தேதி மாலை 6 மணி முதல் 25-ம் தேதி வரை அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மறைமுக அவமானங்கள் நீங்கும். புதிய பொறுப்புகளை உயரதிகாரி உங்களிடம் ஒப்படைப்பார். சிக்கல்களில் இருந்து விடுபடும் நேரமிது.

கும்பம் அநீதியைக் கண்டால் சிங்கத்தைப் போல் சீறிப் பாயும் குணம் கொண்டவர்களான நீங்கள், பந்த பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள். 11-ம் வீட்டில் குரு தொடர்வதால் பிரபலங்களின் நட்பு கிட்டும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். ஆனால், அதிகம் செலவு செய்வீர்கள். உடல் உபாதைகள் வந்து நீங்கும். 26, 27 ஆகிய தேதிகளில் காரியத் தடைகள் வரக்கூடும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். இறக்குமதி வகைகளால் லாபம் பெருகும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மறைமுகத் தொந்தரவு வந்து விலகும். சகிப்புத்தன்மை தேவைப்படும் நேரமிது.

மீனம் தலைமைப் பதவியில் அமர வைத்தாலும் தடம் மாறாத நீங்கள், பொது உடைமைச் சிந்தனை அதிகம் கொண்டவர்கள். சுக்கிரன் வலுவாக இருப்பதால் புது சிந்தனைகள் தோன்றும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வரக் கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை. பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். ஆடம்பரச் செலவுகளை குறையுங்கள். 28-ம் தேதி சந்திராஷ்டமம் தொடங்குவதால் முன் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியைப் பற்றிய விமர்சனம் வேண்டாம். தட்டு தடுமாறி கரை சேரும் காலமிது.