ஜி.எஸ்.எஸ்.

தஞ்சம்மா.. மஞ்சம்மா!

"துணிகளைக் காய வைக்க வெயில் தேவைப்படுது.. ஆனா, அதிக நேரம் வெயில்ல இருந்தா, துணியோட கலர் வெளுத்துடுதே.. அது ஏன் தஞ்சம்மா?"- புத்திசாலித்தனமான கேள்வியுடன் தொடங்கினாள் மஞ்சம்மா.

"அது ஒண்ணுமில்ல மஞ்சம்மா.. துணிகள்ல உள்ள சாயங்கள்ல கெமிக்கல் கலந்திருக்கு. சூரிய ஒளியில இருக்குற புற ஊதாக் கதிர்களோட சக்தி அந்த கெமிக்கல்களை போக்கிடுது. அதனாலதான் துணி வெளிறிப் போயிடுது'' என்றாள் தஞ்சம்மா. வழக்கத்துக்கு மாறாக துணைக் கேள்வியை வேறு வீசினாள் மஞ்சம்மா.. ''வெயில்ல இருந்தா துணி வெளுத்துடுது.. ஆனா, மனுஷங்க நாம மட்டும் ஏன் வெயில்ல இருந்தா கறுத்துப் போறோம்?''

தோழியை மெச்சுவது போலப் பார்த்த தஞ்சம்மா, ''தோலுக்கு சூரிய ஒளியால பாதிப்பு வரக்கூடாதுனு தான் நம்ம தோலோட கீழ்ப் பகுதியில 'மெலனின்'னு ஒரு பொருள் தங்கியிருக்கு. நம்ம உடம்பை சூரிய ஒளி தாக்கினதும் அந்த மெலனின் வெளிய வருது. அதனாலதான் தோல் கறுப்பாயிடுது'' என்றாள்.

''அச்சச்சோ, வெயில் எம்மேல படுதே'' என்றபடி வீட்டுக்குள் ஓடினாள் மஞ்சம்மா.

''ஒட்டகம், அதோட முதுகுல தண்ணியை சேர்த்து வச்சுக்குமாமே.. எவ்வளவு தண்ணியை அப்படி வச்சிருக்கும்?"என்று கேட்டாள் மஞ்சம்மா. 'கிடையவே கிடையாது' என்று தலையசைத்து மறுத்தாள் தஞ்சம்மா.

"ஒட்டகத்தின் முதுகுல இருக்குற மேடான பகுதி யில அது தண்ணியை சேமிச்சி வச்சுக்குதுனு சில பேரு தப்பா நினைச்சுக்கறாங்க. உண்மையில அந்த இடத்துல கொழுப்பைத்தான் ஒட்டகம் சேமிச்சு வைக்குது. பாலைவனத்துல போகும்போது சரியா தீனி கிடைக்கலைன்னா, அந்தக் கொழுப்பைக் கரைச்சு உடம்புக்குத் தேவையான சத்துக்களை எடுத்துக்குது. கொழுப்பு கரைஞ்சதும் ஒட்டகத்தோட திமில் அடங்கிடும். அப்புறம் நல்ல தீனியும் ஓய்வும் கிடைச்சுட்டா, பழைய மாதிரி ஆகிடும்'' என்று விளக்கம் சொல்லி முடித்தாள் தஞ்சம்மா.

''மனுஷங்களுக்கு இப்படி ஒரு வரம் கிடைக்கலை பாரு..'' என்று புலம்பிக் கொண்டே போனாள் மஞ்சம்மா.