ரேவதி கிருபாகரன்

சிங்க நடை போட்டு..

ஒருநாள்.. என் அத்தையின் பழைய போட்டோ ஒன்றை எடுத்துப் பார்த்து பிரமித்துப் போனேன். ''அத்தை நீங்களா இது!'' - காதில் அழகிய வளையம், அதன் கீழே சிறுசிறு முத்துக்கள், காதை மறைத்து லூஸாக விடப்பட்டிருந்த தலைமுடி.. பேரழகியாக இருந்தார்.

''நான் பி.யூ.சி-யில் சேருவதற்கு முன்னாலேயே அம்மா காதுல போட்டிருந்த வளையத்தைக் கழற்றிட்டாங்க. பிறகு, நான் அந்த வளையத்தைப் போட்டுகிட்டுதான் காலேஜ் போனேன்!'' - ஐம்பது வயதான என் அத்தை பெண் சிரித்துக் கொண்டே சாவதானமாக என்னிடம் சொன்னார்!

ஒரு துவக்கப்பள்ளியின் ஆசிரியரான என் அம்மாவுக்கு நல்ல நீளமான அடர்ந்த தலைமுடி. 'நீளமுடி டீச்சர்' என்ற பட்டப் பெயரே உண்டு. இன்று நினைத்துப் பார்க்கிறேன். நான் மேல்நிலை முதலாண்டு (ப்ளஸ் ஒன்) சேருவதற்கான ஆயத்தங்களில் இருந்தபோதே அம்மாவின் நீண்ட முடி கொண்டையாகிவிட்டது. மகள் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டால், இப்படியெல்லாம் தங்களை மாற்றிக் கொள்வது அன்று இயல்பாக இருந்தது! இது ஒன்றும் கட்டாய சட்டமல்ல. பெண்ணடிமைத்தனமோ, மூடத்தனமோ பிற்போக்குத்தனமோ இதற்குக் காரணமல்ல. அந்தக் கால பெண்கள் தங்கள் அனுபவங்களின் வழியே பெற்றுக் கொண்ட 'எழுதப்படாத சட்டங்கள்' இவை.

ஆனால், இந்தக் காலத்தில்.. அம்மாவும் பெண்ணும் சேர்ந்தே பியூட்டி பார்லர் போகும் அளவுக்குக் காலம் மாறிவிட்டது.. அம்மாக்கள் மாறி விட்டார்கள். அம்மாவுக்கு பயந்து பயந்து குட்டைக் கை ஃபேஷனுக்கு ஆதரவு தந்த காலம் போய், இன்று மாராப்பு போடாத கட்சோளிகளும், உடலை இறுக்கிப் பிடிக்கும் சுடிதார்களும் நகர்ப்புறங்களில் சக்கைபோடு போடுகின்றன. அம்மாக்களே மகள் களுக்கு காஸ்ட்யூம் டிசைனர்களாக இருக்கிறார்கள். ஆனால், இந்த மாற்றம் நல்லதுதானா?

ஆடையையும் அணிகலன் களையும் நம் எண்ணங்களின் வெளிப்பாடாகத்தான் மற்றவர்கள் பார்க்கிறார்கள். நீர்க்குமிழி போல் தோன்றி மறையும் ஒரு ஃபேஷனுக்காக நிரந்தரமான நம் மதிப்பை, மரியாதையை இழக்கத் தயாராகலாமா? இந்தச் சமூகம் பெண்ணிடமிருந்து 'கேட்வாக்'-கை எதிர்பார்ப்பதை விட 'லயனஸ் வாக்' (Lioness walk)-கைத்தான் அதிகம் எதிர்பார்க்கிறது. அந்த சிங்க நடையின் கம்பீரத்தை வருங்கால சந்ததிக்கு நாம் கொடுக்கிறோமா?

'உடம்பை 'ட்ரிம்'மா வச்சுக்கோ; கொழுப்பு சேர விடாதே! ஃபிட் னெஸ் சென்டர் போ!' என்று அறி வுறுத்தும் அம்மாக்களே! முதலில் உங்கள் மகள்களின் மனசும் சிந்தனையும் செயல்களும் ட்ரிம்மாக இருக்க சொல்லித் தாருங்கள். வீடும் கல்விக்கூடமும் அலுவலகமும் கூட ஃபிட்னெஸ் சென்டர்கள்தான். இங்கும் பயிற்சி கட்டாயம் தேவை. அதையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

சமீபத்தில் ஒரு பெண்மணியை சந்தித்தேன்.. ''எம் பொண்ணுக்கு 21 வயசு ஆகிடுச்சு.. மாப்பிள்ளை பார்க்கத் துவங்கணும்.. நீயும் தெரிஞ்ச இடத்துல நல்ல பையன் இருந்தால் சொல்லு. கூடுமானவரை மாப் பிள்ளைக்கு அம்மா இல்லாத இடமா பாரேன். அவளும் அதைத்தான் விரும்புறா!'' என்றார்.

எனக்கு என்னவோ போல் இருந்தது. மனிதர்களை நேசிக்கும், அனுசரிக்கும் குணம் ஒரு பெண்ணுக்குத் தேவையில்லை.. மாமியார் இல்லாத வீட்டில் வாழ்க்கை அமைந்தால் போதும் என்பது சரியான படிப்பினையா? எனக்குப் புரியவில்லை.

தமிழில் ஒரு நல்ல சொற்றொடர் உண்டு..

'குணமுள்ள பெண், ஒருவனின் கருத்தில் ஒளி வீசுகிறாள்;
புத்திசாலியான பெண், ஒருவனின் கவனத்தைக் கவருகிறாள்
அழகான பெண், ஒருவனை மயக்குகிறாள்;
ஆனால்,
பரிவும், பாசமும் உடைய பெண்ணே அவனை தன்னுரிமை ஆக்கிக் கொள்கிறாள்!'

யோசித்துப் பார்ப்போம்! நாகரிகம் மட்டுமா வாழ்க்கை? புறத்தோற்றத்தை மேம்படுத்தும் பொருத்தமான உடைகளும் வளையல்களும் காதணிகளும் கைப்பையும் வருங்கால சந்ததிக்குப் போதுமா?

சவாலான உறவுகளை, பிரச்னைகளை லாகவமாகக் கையாள்வது.. முரண்பாடான மனிதர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது.. சுய மதிப்பீடுகளை மேம்படுத்துவது.. மனக் கவர்ச்சிகளில் மயங்கி விடாதிருப்பது.. இறுக்கங்களை தளர்த்தி மகிழ்ச்சியாக, மலர்ச்சியாக இருப்பது.. இப்படிப்பட்ட இயற்கையான ஆபரணங்களையும் பெண்கள் அணியத்தானே வேண்டும்? எல்லோரையும், எப்பொழுதும் வசீகரீக்கும் நகைகளாயிற்றே அவை!

நம் முன்னோர்களின் வாழ்க்கை நடப்புக்கு பொருந்தாத கட்டுப்பட்டித்தனமாகத் தெரியலாம். ஆனால், அதை உதறி விட்டு நாம் போடும் இந்தப் பீடுநடை, எந்த அடிமை வாழ்க்கையை நோக்கி?' - சிந்தியுங்கள்!

சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகவும், மக்கள் தொடர்பு அலுவலராகவும் பணியாற்றுகிற ரேவதி கிருபாகரன், ஒரு பேச்சாளரும் கூட. தினம் தினம் இன்றைய இளம் தலைமுறையினரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்ற இவர், அவர்களுடைய மனவியல் சங்கடங்கள் பற்றியெல்லாம் அவ்வப்போது நமக்குக் கருத்துக்களை தெரிவிப்பவர். இன்றைய அம்மாக்கள் பற்றி அவர் நமக்கு எழுதியிருந்த கட்டுரை இது!