சுரேஷ்-பாலா

காதல் கல்வெட்டுகள்!

காதலுக்குக் கிடைத்த நோபல் பரிசு!

'காற்று வாங்கப் போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்..' என்பது போல, ஆராய்ச்சி செய்யப் போய், காதல் வாங்கி வந்தவர் விஞ்ஞானி மேரி கியூரி!

போலந்து நாட்டின் வார்ஸா நகரில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார் மேரியா ஸ்க்லோடௌவ்ஸ்கா. இளம் வயதிலிருந்தே பௌதிகம், ரசாயனம் முதலிய துறைகளில் பெரும் ஆர்வம் கொண்டிருந்த மேரியைப் படிக்க வைக்கக்கூட அவருடைய பெற்றோரால் முடியவில்லை. பகலெல்லாம் படிப்பு, இரவில் பல பகுதி நேர வேலைகள்.. என்று கஷ்டப்பட்டுப் படித்த மேரி, மிக நல்ல முறையில் பட்டம் பெற்றுத் தேறினார்.

'இனி, நல்ல வேலையைத் தேடிக் கொண்டு, சுகமாக வாழலாம்' என்று நினைக்கவில்லை அவர். கற்ற கல்வியைக் கொண்டு மனித குலத்துக்குப் பயன்படுமாறு வாழும் வாழ்க்கையே அவரது லட்சியமாக இருந்தது.

கனமான உலோகமான இரும்பில் இருந்த காந்த ஈர்ப்பு சக்தியைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த மேரி, அதற்காக ஒரு ஆய்வுக் கூடம் கிடைக்குமா என்று தேடி அலைந்தபோதுதான், காதலைக் கண்டெடுத்தார்.

பாரிஸில் ஆய்வுக் கூடம் ஒன்றை நிறுவி, அதில் ஆராய்ச்சிகள் செய்து வந்தார் இளம் விஞ்ஞானி பெர்ரி கியூரி. அவருடைய ஆய்வுக் கூடத்தில் போய் நின்றார் மேரி. முதல் சந்திப்பில் அவர்கள் என்னவோ பௌதிகம், ரசாயனம், ஆராய்ச்சி, மனித குலம்.. என்றெல்லாம்தான் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது விழிகளும் இதயங்களுமோ காதல் என்ற ரசாயனச் சேர்க்கையில் ஆர்வம் காட்டத் தொடங்கின.

விஞ்ஞானத்துக்கே வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்கும் திட நோக்கத்தில் ஒரு பாறையைப் போல இறுக்கமாக இருந்த மேரிக்குள்ளும் காதல் பூ பூத்தது!

இருபத்து நான்கு மணி நேரமும் ஒரே இடத்தில் இருந்து ஆராய்ச்சியில் ஈடுபட, ஈடுபட.. ஒருவர் மேல் மற்றவர் கொண்டிருந்த அன்பும் நேசமும் வளர்ந்து கொண்டே சென்றதே தவிர, இம்மியேனும் குறையவில்லை. 'தங்களை ஈர்த்தது வெறும் உடல் கவர்ச்சி அல்ல, காதல் என்ற ஆழமான பேருணர்வுதான்' என்ற உண்மை அவர்களுக்குப் புரிந்தது. 1895-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

மற்ற புதுமணத் தம்பதிகளைப் போல, காதல் மொழி பேசித் திரிவதற்கு, அவர்களுக்கு நேரமும் இல்லை.. மனமும் இல்லை! அறிவியல் நூல்களைப்

படிப்பதும், ஆராய்ச்சியின் தினசரி முன்னேற்றங்களில் உள்ளம் நிறைவதுமாக.. சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத அற்புதமான காதல் வாழ்க்கையில் திளைத்துக் களித்தனர். அந்த மகிழ்வின் விளைவாக இரு அழகிய பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்தனர்.

ஆராய்ச்சிக்கு ஆகிற செலவுகளை சந்திப்பதற்காக கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணி செய்தார் மேரி. அதில் கிடைத்த ஊதியத்தை ஆராய்ச்சிக்குச் செலவிட்டனர் இருவரும். 'யுரேனியம்' என்ற மூலப் பொருளின் (element) கதிர்வீச்சுத் தன்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மேரி தீவிரம் காட்ட, அதற்கு முழுமையாக உதவினார் பெர்ரி கியூரி.

பல ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு 'பொலோனியம்', 'ரேடியம்' என்ற இரு புதிய அபூர்வ மூலப் பொருட்களைக் கண்டுபிடித்து, பெரும் வெற்றி அடைந்தார் மேரி. ரேடியம் பல நோய்களை, குறிப்பாக புற்றுநோயைத் தீர்க்கும் அருமருந்தாகப் பயன்படும் என்ற உண்மை, அவர்களது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை உலகுக்கு அறிவித்தது.

1903-ல் பாரிஸ் பல்கலைக்கழகத்தால் டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்ட மேரி, 'பிரான்ஸ் தேசத்தின் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்' என்ற கௌரவத்தைப் பெற்றார். அதே ஆண்டு, பௌதிகத்துக்கான நோபல் பரிசு, காதல் ஜோடிகளான மேரி கியூரிக்கும் பெர்ரி கியூரிக்கும் ஒரே நேரத்தில் அளிக்கப்பட்டது.

நிஜமாகவே ஈருடலும் ஓருயிருமாக வாழ்கிற தங்களின் காதலுக்குக் கிடைத்த கௌவரமாகவே இதைக் கருதினர் தம்பதியர். ஆனாலும், பரிசைப் பெறுவதற்காக அயல்நாடான ஸ்வீடனுக்குச் சென்றால், தங்களது நேரம் வீணாகுமே என்று அஞ்சியவர்கள், பரிசளிப்பு விழாவுக்கு நேரே செல்லக்கூட மறுத்து விட்டனர்! ஆராய்ச்சியின் மீது அத்தனை ஈடுபாடு! அவ்வளவு அர்ப்பணிப்பு!

ஆனால், அந்த அற்புதத் தம்பதியின் ஆனந்தம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. திருமணமாகி பதினொரு வருடங்களில், ஒரு மழை நாளில் வெளியே சென்ற பெர்ரி, சாலையில் வழுக்கி விழ, அவர் மேல் குதிரை வண்டி ஏறியதில், அந்த இடத்திலேயே அகால மரணமடைந்தார்.

தன் பலம் முழுவதும் தன்னை விட்டு நீங்கி விட்டதாக உணர்ந்த மேரி, முடிவில்லா சோகத்தில் ஆழ்ந்தார். அப்போது அவரை ஆற்றித் தேற்றியது ஆராய்ச்சிதான்! காதல் கணவரின் நினைவில் ரேடியம் ஆராய்ச்சி ஸ்தாபனம் ஒன்றை உருவாக்கி, நேரம், காலம் பார்க்காமல் உழைத்தார் மேரி.

பேரும் புகழும் மீண்டும் அவரை நாடி வந்தன. 1911-ம் ஆண்டு அவருக்கு மீண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.. இம்முறை ரசாயனத் துறைக்காக. இதன் மூலம் 'இரு முறை நோபல் பரிசு பெற்ற ஒரே பெண்மணி' என்ற புகழையும், 'இரு வேறு துறைகளில் பரிசு பெற்ற முதல் விஞ்ஞானி' என்ற பெருமையையும் பெற்றார் மேரி. இந்தப் பெருமைகள் அனைத்தையும் தன் கணவருக்கே அர்ப்பணித்தார் மேரி.

இத்தனை தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கியிருந்த மேரி, தன்னை அறியாமலேயே ஒரு விபரீத விளையாட்டில் ஈடுபட்டிருந்தது தாமதமாகத்தான் தெரிந்தது. ஆம்! ரேடியத்திலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு, ஒருபுறம் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதாக இருந்தாலும், தகுந்த பாதுகாப்பின்றி பல காலம் அதனுடன் தொடர்பு கொண்டிருந்தால், அதுவே புற்றுநோய்க்கு வழி வகுக்கும் என்கிற கசப்பான உண்மை மேரியின் வாழ்வின் மூலமே வெளிப்பட்டது. ரேடியத்தின் பாதிப்பினால் புற்றுநோய்க்கு ஆளானார் மேரி.

மனித குல மேம்பாட்டுக்காகவே தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட மேரி கியூரி, 1934 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து வெளியேறினார்.

காதலில் பல ஆராய்ச்சிகள் உண்டு. ஆனால், ஆராய்ச்சியையே தங்களின் காதலாக மாற்றிக் கொண்டு, மண்ணுலகத்துக்கு சேவை செய்திருக்கும் கியூரி தம்பதிகளின் வாழ்க்கை, ஒரு மகத்தான சரித்திரம்தான்!

- சரித்திர காதல் தொடரும்..