டாக்டர் விஜயராகவன்

டியர் டாக்டர்

கேன்சர்.. உங்கள் கவனத்துக்கு!

பிறந்ததிலிருந்து நாம் ஒவ்வொருவரும் எத்தனை விதமான துக்கங்களை சந்தித்திருப்போம்.. ஆனாலும் ஒவ்வொரு துக்கமுமே 'இது நிகழாமல் இருந்திருக்கக் கூடாதா' என்கிற ஏக்கத்தை உண்டாக்கும்தான். அப்படித்தான்..

கேன்சர் சிறப்பு நிபுணர்களாகிய எங்களுக்கும் ஒவ்வொரு முறையும் 'இது கேன்சர்தான்' என்பதை உறுதிப்படுத்தும்போது, மனசுக்குள் துக்கம் பந்தாக உருளும். கூடவே, 'இதுவாவது ஆரம்ப நிலையில் இருக்க வேண்டுமே' என்கிற பிரார்த்தனையும் மனதுக்குள் எழும். ஆனால், பெரும்பாலும்.. அதாவது 88% கேன்சர் நோயாளிகள், முற்றிய நிலையில்தான் எங்களிடம் வருகிறார்கள் என்பது நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.

இது ஏன்?

நான் ஏற்கெனவே சொல்லியிருப்பது போல, வெளியே யார் கண்ணுக்கும் தெரியாமல் சரசரவென பரவும் தன்மை கொண்டதுதான் கேன்சர். அதிலும், குறிப்பாக, இந்த கர்ப்பப்பை கேன்சர், மற்ற கேன்சர் வகைகளை விடவும் மிக மிக அபாயம் நிறைந்தது. இதன் காரணத்தைப் பார்க்கலாம்.

பொதுவாக, ஒரு கேன்சர் செல் வெடித்து, இரண்டு செல்களாக மாறுவதற்கு, குறைந்தபட்சம் 26 நாட்களும் அதிகபட்சமாக 260 நாட்களும் தேவைப்படுகின்றன. எல்லா வகை கேன்சர் செல்களிலும் இதுதான் நிலவரம் (ரத்தப் புற்றுநோய்க்கு இது பொருந்தாது). இந்த வளர்ச்சியைப் பொறுத்து, கேன்சரை ஸ்டேஜ் 1, ஸ்டேஜ் 2, ஸ்டேஜ் 3 என்று மூன்று நிலைகளாகப் பிரிக்கிறோம். ஸ்டேஜ் 1 என்பது,

வளர்ச்சியின் ஆரம்ப நிலை. ஸ்டேஜ் 2 அடுத்த கட்டம். ஸ்டேஜ் 3 என்பது இறுதிக் கட்டம்.

சில வருடங்கள் முன் வரையிலும் கர்ப்பப்பை கேன்சரையும் இந்த மூன்று நிலைகளை வைத்துத்தான் கணக்கிட்டு, வகைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், சமீபத்தில்தான் இந்த கர்ப்பப்பை கேன்சரில் மட்டும் வேறொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருப்பது தெரிய வந்தது. அதுதான் அந்த கேன்சர் செல்லின் வீரியம்!

வீரியத்திலும் ஏ, பி, சி என்று மூன்று வகை உண்டு. குறைவான வீரியம் கொண்டது ஏ, அடுத்த கட்டம் பி, மிகவும் வீரியம் கொண்டது சி.

'இதென்ன டாக்டர் நிலைங்கறீங்க.. வீரியம்ங்கறீங்க.. இன்னும் தெளிவா சொல்லுங்களேன்' என்கிறீர்களா? ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன்.

தண்ணீர்ப் பாம்பு, கட்டுவிரியன் இந்த இரு வகைப் பாம்புகளையும் பற்றி உங்களுக்குத் தெரியும். தண்ணீர்ப் பாம்பில் சில வகை மிகக் குறைவான வீரியம்.. அதாவது.. விஷம் கொண்டது. கட்டுவிரியன் மிக அதிக வீரியம்.. அதாவது விஷம் கொண்டது.

சின்ன சைஸ் தண்ணீர்ப் பாம்பு கொத்தினால், அது உயிருக்கெல்லாம் ஆபத்தாகாது. ஆனால், சின்ன சைஸ் கட்டுவிரியன் கொத்தினால்? அப்படித்தான் இந்த கர்ப்பப்பை கேன்சரும்!

கேன்சர் செல்லின் வளர்ச்சி ஸ்டேஜ் 1-ல் இருந்தா லும் அதன் வீரியம் 'சி'யாக இருந்தால், அது சின்ன சைஸ் கட்டுவிரியன் பாம்பு கொத்தியதுபோலத்தான். மிக மிக அவசரமாக அதைக் கவனிக்க வேண்டும்.

சிலருக்கு வளர்ச்சி ஸ்டேஜ் 3-ல் இருக்கலாம். ஆனால், வீரியம் 'ஏ'யாக இருந்தால், அது பெரிய சைஸ் தண்ணீர்ப் பாம்பு கொத்தியதைப் போன்றதுதான். ரொம்பவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இந்த விஷயம் வாசகிகளாகிய உங்களுக்கு மட்டுமில்லை.. மகப்பேறு மருத்துவர்கள் பலருக்குமே கூடத் தெரியாத விஷயம்தான். இதை நான் சொல்லவில்லை.. சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ஒரு மருத்துவக் கருத்தரங்கில் நான் கலந்து கொண்டபோது, அங்கிருந்த 'அவள்' வாசகிகளான மகப்பேறு மருத்துவர்கள் பலரும் என்னிடம் தெரிவித்த கருத்துதான் இது.

அதற்கு நான் இப்படி பதில் சொன்னேன்.. ''திருடன் எங்கே இருப்பான்.. எப்படி, எந்த வழியாக வருவான் என்பது அவன் மனைவிக்குத் தெரியாது. ஆனால், போலீசுக்குத் தெரியும். காரணம், அவன் மனைவியைப் பொறுத்தவரையில் அவன் திருடன்தான் என்றாலும், அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்கிற புருஷன்.

அப்படித்தான்.. இந்த கர்ப்பப்பையோடு மிக அதிகத் தொடர்பு வைத்திருக்கிற மகப்பேறு நிபுணர்களாகிய உங்களுக்கு 'இதில் கேன்சர் வரலாம்' என்பது தெரிந்தாலும், அதைப் பற்றிப் பெரிதாக யோசிப்பதில்லை. மாறாக, அதன் சந்தோஷ பக்கமான 'சீக்கிரம் இந்த கர்ப்பப்பையில் ஒரு குழந்தை உண்டாக வேண்டுமே' என்பது பற்றியோ, 'கர்ப்பப்பையில் குழந்தை நன்றாக வளர்கிறதா..' என்பது பற்றியோதான் அதிகம் யோசிக்கிறீர்கள்.

ஆனால் நாங்களோ, 'கேன்சர் என்கிற அந்தத் திருடன் எப்படியெல்லாம் நுழைவான்.. எந்த வழியில் எல்லாம் பரவுவான்..' என்பதைப் பற்றியே 24 மணி நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் பிடிபட்டு விடுகிறான். நீங்களும் எங்களை மாதிரி மாறினால், பல திருடன்களும் தொழிலில் கில்லாடிகளாக மாறும் முன்பாகவே பிடிபட்டு விடுவான்கள்'' என்றேன்.

ஆம்! பொதுவாக, பெண்கள் தங்களுக்குப் பிரச்னை என்று முதலில் போவது மகப்பேறு மருத்துவர்களிடம்தான். கர்ப்பப்பை தொடர்பான பிரச்னை என்றாலே கேன்சரையும் சந்தேகித்து, தேவைப்பட்டால், அதற்கான பரிசோதனையும் செய்து, அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால், எத்தனையோ நோயாளிகளின் வாழ்க்கையில் சந்தோஷத்தைத் தர முடியுமே! அது மட்டுமா? அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது நம் தமிழக கேன்சர் வரலாற்றில் ஒரு இனிமையான பதிவாக அமையும்.

இந்த கர்ப்பவாய் கேன்சருக்கான சிகிச்சை பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்.

- தொடரும்..

"சொந்தத்தில் திருமணம் சோகத்தில் விடுமா?"

''என் மகளுக்கு நான்கு வயதாகிறது. அவள் இரண்டு மாதக் குழந்தையாக இருந்தபோது அவளை சின்னம்மை நோய் தாக்கியது. என் குடும்பத்தினர் அப்போது அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. சில நாட்களில் நோய் குணமாகி விட்டாலும், அந்தத் தழும்புகள் இன்னும் மறையவில்லை. அவற்றை எப்படி நீக்குவது?''

டாக்டர் ஸ்ரீராம், தோல் நோய் சிறப்பு மருத்துவர், சேலம்

''உங்கள் மகளுக்கு இப்போது நான்கு வயதுதான் ஆகிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். சின்னம்மை நோய் தாக்கியபோது ஏற்பட்ட தழும்புகள் இன்னும் மறையவில்லை என்றால், நீங்கள் குறிப்பிடும் தழும்புகள் தோலில் ஏற்பட்ட நிற மாறுதலாகக்கூட இருக்கலாம். அப்படி இருந்தால் அது சில வருடங்களில் தானாகவே மறைந்து விடும்.

ஒருவேளை தோலில் சற்று பள்ளமாக தழும்புகள் ஏற்பட்டு இருந்தால் உங்கள் குழந்தைக்கு பதினாறு வயது ஆகும்வரை பொறுத்திருந்து பார்க்கலாம். ஏனெனில், பதினாறு வயதில்தான் குழந்தைகளின் தோல் அமைப்பு ஒரு முழுமையான வடிவத்துக்கு வரும்.

ஒருவேளை பதினாறு வயதுக்குப் பிறகும் உங்கள் குழந்தையின் உடலில் தழும்புகள் இருந்தால், லேசர் சிகிச்சையின் மூலம் அவற்றை முழுமையாக நீக்கிவிட முடியும். கவலையை விடுங்கள்!''

''எனக்குத் திருமணமாகி சரியாக ஒரு வருடம் ஆகிறது. என் தாய்மாமன்தான் என் கணவர். மணமான இரண்டு மாதங்களிலேயே கருவுற்றேன். ஐந்தாம் மாதம் ஸ்கேன் செய்து பார்த்ததில் 'குழந்தைக்கு பிறவிக் கோளாறுகள் (Hydrop Fetales) இருப்பதால், கருவைக் கலைக்க வேண்டும்' என்று டாக்டர் சொன்னார். ஐந்தாவது மாதத்தில் அபார்ஷன் செய்து கொண்டேன். நான் இரண்டாவது முறை கருத்தரிக்கும்போதும் இதே பிரச்னை வருமா? சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட பிரச்னையா இது? மிகுந்த வேதனையில் இருக்கும் எனக்கு நல்ல பதில் கூறுங்களேன்..''

டாக்டர் ஆர்.நிர்மலா, மகப்பேறு மருத்துவர், தஞ்சாவூர்

''நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'ஹைடிராப் ஃபீட்டலிஸ்' பிரச்னை எதனால் ஏற்பட்டது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். கணவன், மனைவி இருவருக்கும் ரத்தப் பரிசோதனை, மரபணு பரிசோதனை, 'டார்ச் இப்ஃபெக்ஷன் ஸ்கேனிங்' (TORCH Infection Scanning) போன்றவற்றைச் செய்வதன் மூலம் அதன் காரணத்தைக் கண்டறியலாம்.

நீங்கள் கவலைப்படுகிறபடி, உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் சொந்தத்தில் திருமணமானதால் வந்த மரபணு குறைபாடு இருந்தால், இந்தப் பரிசோதனைகள் அதைக் காட்டிக் கொடுத்து விடும்.

அப்படியே மரபணு குறைபாடு இருந்தாலும் அதற்காகக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க நவீன மருத்துவத்தில் நிறைய வழிகள் உள்ளன. மகப்பேறு மருத்துவரின் தொடர்ந்த சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் ஆலோசனையோடு அடுத்த கருத்தரிப்புக்காக நீங்கள் காத்திருக்கலாம். ஒருவேளை, உங்கள் பிரச்னை மரபணு குறைபாடு அல்ல.. கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட கிருமித்தொற்று போன்ற வேறு காரணங்கள்தான் என்பது அந்தப் பரிசோதனையில் தெரியவந்தால், கவலையை விடுங்கள். முறையான கவனிப்பும் எச்சரிக்கை உணர்வும் இருந்தால், அடுத்த குழந்தைக்கு இதே பாதிப்பு ஏற்பட கண்டிப்பாக வாய்ப்பே இல்லை.''