டீன் அனுபவம்

செமயோசிதம்!

அப்போது நான் திருச்சியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு

முறை எங்கள் பள்ளி சார்பாக சபா ஒன்றில், 'ஒளவையார்' நாடகம் போட்டிருந்தோம். அதில் நான் இளவயது ஒளவையாக நடித்தேன். நாடகத்தின்படி, நான் பிள்ளையாரிடம் 'எனக்கு இந்த இளமைப் பருவம் வேண்டாம்' என்று வேண்ட வேண்டும். உடனே மேடையில் பெரும்புகை ஏற்பட்டு, எல்லோரையும் மறைத்துவிடும். நான் உள்ளே ஓடிச் சென்றுவிட, வயதான ஒளவை வேடத்தில் நடிக்கும் மற்றொரு பெண் அவ்விடத்தில் வந்து உட்காரவேண்டும் என்பதாக ஏற்பாடு.

புகை ஏற்பாடெல்லாம் சரியாகத்தான் நடந்தது. ஆனால் புகையும், இருட்டும் செய்த குழப்பத்தில் ஒளவையார் என நினைத்து அடுத்த காட்சிக்காக நின்றிருந்த அரண்மனை சேடிப் பெண்ணை, ஒரு ஆசிரியர் மேடையில் தள்ளி விட்டுவிட்டார். புகை மறைந்து பளிச்சென சேடிப் பெண்ணின் முகம் தெரிய.. எங்களுக்கெல்லாம் ஒரே ஷாக்!

ஆனால், ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அந்தப் பொண்ணோ சமயோசிதமாக, ''பிள்ளையாரப்பா.. முதுமைக் கோலம் கொடு என்றால், நீயோ சேடிப் பெண்ணாக மாற்றி விளையாடுகிறாய். எனக்கு வேண்டியது முதுமைக் கோலம்தான். அதைக் கொடுத்துமே அருள்புரிய வேண்டும்'' என்று மறுபடி

வேண்ட, மேடை அமைப்பாளர் உடனே சரசரவென திரையைப் போட்டு மறைக்க, வயதான ஒளவையார் வந்து மேடையில் உட்கார, நல்லபடியாக நாடகம் நடந்து முடிந்தது. அப்போது அது என்னவோ சிரிப்பாகப் போய்விட்டது. வளர வளரத்தான், டீன்-ஏஜ் பருவத்திலேயே அந்தப் பெண்ணுக்கு இருந்த சமயோசித புத்தி எனக்கு வியப்பைத் தந்தது. அத்தனை புத்திசாலிப் பெண்ணுக்கே சேடிப் பெண் வேடம்தான் கிடைத்தது என்ற வாழ்க்கை விநோதமும் உறைத்தது!

- லஷ்மி கோபாலகிருஷ்ணன், திருச்சி-5

உங்கள் டீன்-ஏஜ் அனுபவங்களையும் எழுதி அனுப்புங்கள்.. பிரசுரமாகும் அனுபவங்களுக்கு சிறப்புப் பரிசு உண்டு.

பரிசுபட்டர்ஃப்ளை கேஸ் ஸ்டவ்