உடன் பிறக்காத உறவுக்காரர்கள்!

''இந்த அபார்ட்மென்ட் வாழ்க்கையே வேதனைங்க.. ஒருத்தருக்கொருத்தர் போட்டி, பொறாமை, வயித்தெரிச்சல்னு நரகமா இருக்கு'' என்று அலுத்துக் கொள்கிறவர்கள், சென்னை, வளசரவாக்கத்தில் இருக்கிற 'ஜேட்' அபார்ட்மென்ட்வாசிகளைப் பார்க்க வேண்டும்! நிஜமான கூட்டுக் குடும்பம் என்றே நினைத்து ஏமாந்து போவார்கள்.

சமீபத்தில் மைசூருக்கு டூர் அடித்து விட்டுத் திரும்பிய 40 பேர் கொண்ட அந்தக் குடும்பத்தை நாம் காத்திருந்து வரவேற்றோம்.

''நியூ இயர், பொங்கல், தீபாவளி மாதிரியான விசேஷ தினங்கள்ல போட்டிகள் வைக்குறது, பரிசுகள் கொடுக்குறது, வெடி வெடிக்கிறது.. இதெல்லாம் எல்லா அபார்ட்மென்ட்கள்லயும் நடக்குறதுதான். ஆனா, நாங்க வருஷம் ஒருமுறை மட்டும் வர்ற இந்த விழாக்களுக்காகக் காத்திருக்குறது இல்ல. குட்டிப் பசங்களோட

பிறந்த நாள் பார்ட்டி, குடியிருக்கிறவங்களோட திருமண நாட்கள்னு சின்னதா ஒரு காரணம் கிடைச்சாலும் அமர்க்களப்படுத்திடுவோம். எதுவுமே கிடைக்கலையா? இருக்கவே இருக்கு பௌர்ணமி. அன்னிக்கு மொட்டை மாடியில நிலாச்சோறுதான்.. கொண்டாட்டம்தான்!'' என்ற அபார்ட்மென்ட் சங்கத் தலைவர், மைசூர் டூர் பற்றி விவரித்தார்..

''ஒருநாள் அசோஸியேஷன் மீட்டிங்ல குழாய் ரிப்பேர், குடி தண்ணீர் பிரச்னைனு பேசிக்கிட்டு இருந்தப்போ பேச்சு மெள்ள திசை திரும்புச்சு. 'சும்மா இன்டோர் கொண்டாட்டங்களாவே இருக்கே... ஒருநாள் அவுட்டோர் போகலாமா?'னு சின்ன பொறியாக் கிளம்புன பேச்சு.. 'மைசூருக்குப் போறோம்.. ரெண்டு நாள் டூர்'னு போய் நின்னுச்சு.. அந்த ஐடியாவை அப்படியே அபார்ட்மென்ட் பெண்கள்கிட்ட கொடுத்துட்டோம். அற்புதமா ஏற்பாடுகள் பண்ணிட்டாங்க!'' என்றவர் அங்கே நின்று கொண்டிருந்த பெண்கள் குழாமைக் கைகாட்டினார்.

(பெண்கள் அனைவருமே அவரவர் குழந்தைகளின் பெயர்களோடு 'அம்மா' சேர்த்துத்தான் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்கிறார்கள். நாமும் அப்படியே!)

முதலில் பேசத் தொடங்கினார் தீபன் அம்மா..

''இத்தனை பேர் சேர்ந்து டூர் கிளம்புறதுன்னா அதுல ஏகப்பட்ட சிக்கல்கள் வரும்தான். முதல் சிக்கல் எங்க வீட்டுலதான் வந்துச்சு.. எல்லாருமே பேசி முடிவு செஞ்சு அக்டோபர் 11, 12 டூர் கிளம்பலாம்னு தீர்மானம் பண்ணியாச்சு. ராத்திரி ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்த என் கணவர்கிட்ட தேதியைச் சொன்னதும், 'ஆஹா.. அன்னிக்கு எனக்கு ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்கே.. சரி, அவங்க எல்லாம் போயிட்டு வரட்டும். நாம, அடுத்த டூர்ல சேர்ந்துக்குவோம்'னு கூலா சொல்லிட்டுப் போயிட்டார். மனசுக்கு சங்கடமா இருந்தது.

அடுத்த நாள், பேச்சுவாக்குல இதை மத்தவங்ககிட்டே சொன்னேன். யாரும் எதுவும் சொல்லலை. ஆனா, மூணாம் நாள் 'டிக்கெட் புக் பண்றதுக்கு பேர், வயசெல்லாம் குறிச்சுக் கொடுங்க'னு ஒரு பேப்பர் அனுப்புனாங்க.. அதுல பார்த்தா, டூர் அக்டோபர் 18, 19-னு போட்டிருந்தாங்க. என்னனு விசாரிச்சா, இவருக்காகத்தான் தேதியை மாத்தியிருக்காங்கனு தெரிஞ்சது. நிஜமா சொல்றேங்க.. கண்ணுல தண்ணியே வந்திடுச்சு!'' என்று அவர் சொல்லி முடிக்க..
''என்ன தீபன் அம்மா.. இதெல்லாம் ஒரு மேட்டரா.. ரொம்ப ஃபீலிங் விடுறீங்க..'' என்று அவரை ஜாலியாக்கிவிட்டு நம் பக்கம் திரும்பினார் ஆர்த்தி அம்மா..

''ஸ்ரேயா அப்பா ரயில்வேயில வேலை பார்க்கிறார். அவர், டிக்கெட் விவகாரங்களை கவனிச்சுக்கிட்டார். அஸ்வின் அப்பாவுக்கு மார்க்கெட்டிங் வேலை.. மைசூர்ல ரூம், சுத்தறதுக்கு வண்டி எல்லாம் அவர் ஏற்பாடு செய்துட்டார்.. சனியும் ஞாயிறும் எப்படியும் ஓட்டல்லதான் சாப்பிடப் போறோம்.. ஆனா, வெள்ளிக்கிழமை ரயில்ல சாப்பிடுற ராத்திரி சாப்பாட்டுக்கு அஸ்வின் அம்மா பிரியாணி, சுபிக்ஷா அம்மா சப்பாத்தி, பிரவீன் பாட்டி இட்லினு ஆளுக்கொரு வெரைட்டி செஞ்சு அசத்திட்டாங்க.. ரயில்ல ஒரு கேட்டரிங் சர்வீஸே நடந்துதுன்னா பார்த்துக்கோங்க..'' என்று கலகலத்தார் அவர்.

''கூட்டுக் குடும்ப சிஸ்டமே கலைஞ்சிட்டு வர்ற இந்தக் காலத்துல உங்க அபார்ட்மென்ட் கதையைக் கேட்டா ஏதோ மாயாஜாலப் படம் மாதிரி இருக்கு. நம்பவே முடியலை!'' என்று நாம் ஆச்சர்யமாக..

''இதென்னங்க பிரமாதம்.. டூர் போன இடத்துல ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவங்களுக்கு மட்டும் லாட்ஜ் ரூம் ரொம்பச் சின்னதா மாட்டிக்கிடுச்சு. அவங்க வீட்டுல பெரியவங்களே நாலு பேர்.. வேற ரூமும் கிடைக்கலை. 'சரி, நாங்க எதிர்ல இருக்கற லாட்ஜுக்குப் போயிடறோம்'னு சொன்னாங்க. ஒண்ணா சேர்ந்து டூர் வந்துட்டு ஒருத்தவங்க மட்டும் தனியா தங்குறதுல எங்க யாருக்குமே விருப்பம் இல்ல. ரூம் வாடகை கொஞ்சம் அதிகம்னாலும் பரவாயில்லைனு எல்லாருமே வேற லாட்ஜுக்கு மாறிட்டோம்'' என்று அஸ்வின் அம்மா சொல்ல..

''நாங்க 'யாரை விட யார் பெரியவங்க?'னு போட்டி போடுறதில்ல. அடுத்தவங்க மேல அன்பா இருக்குறதுலதான் போட்டி போடுறோம். அதுதான் எங்களை ஒற்றுமையா வச்சிருக்கு'' என்றார் பிந்து அம்மா.

''மைசூர்லயும் எங்களைப் பார்த்தவங்க எல்லாரும் 'ஒரே குடும்பமா?'னுதான் கேட்டாங்க. கோயில், அரண்மனை, பிருந்தாவன்னு எங்க போனாலும் குழந்தைகளோட குழந்தைகளா நாங்களும் ஆட்டம் போட்டோம். ஊருக்குக் கிளம்புற அன்னிக்கு சாயந்திரம் குழந்தைகளுக்காக ஒரு பார்க்குக்கு விசிட் அடிச்சு, சறுக்கு மரம், ஊஞ்சல், கபடினு பெரியவங்களும் புகுந்து 'விளையாடி'ட்டோம்..'' என்று பூரித்துப் போனார்கள் ஸ்ரேயா அம்மாவும் சுபி அம்மாவும்.

இப்போது 'ஜேட்' அபார்ட்மென்ட் பெண்கள் ஜெட் வேகத்தில் ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்களாம் அடுத்த டூருக்கான ப்ளானை!

இங்க பக்கத்துல பூசணிக்காய் கிடைக்குமா?

- எம்.எஸ்.தீபதர்ஷினி

பின் குறிப்பு இந்த டூரில் கிடைத்த முக்கியமான நன்மை 'வாக்கிங் கிளப்'. இதுவரையில் அபார்ட்மென்ட்டில் பெண்கள் மட்டுமே நெருக்கமாக இருந்த நிலை மாறி, ஆண்களும் 'நீங்க எங்கே வேலை செய்றீங்க?' 'உங்களுக்கு பிசினஸ்தான் மெயினா?' என்றெல்லாம் குசலம் விசாரித்திருக்கிறார்கள். இப்போது ஆண்கள் சார்பில் வாக்கிங் கிளப் ஒன்றும் ரெடியாகி விட்டதாம்.