கான(னா)க் குயில்!

கானா பாடல்..

என்றதும் நமக்கெல்லாம் என்ன ஞாபகத்துக்கு வரும்?

சென்னை மாநகரத்தின் குடிசைப் பகுதிகள்.. குப்பை மேடுகள்.. கூவம் நதி.. சுடுகாட்டு நெடி.. துண்டு பீடி.. சாராயக் கடை.. இதெல்லாம்தானே?

படிய தலை வாரி பாந்தமாக நம் முன் வந்து நிற்கும் அந்த 30 வயது இல்லத்தரசியையும் கானா பாடலையும் நம்மால் இணைத்துப் பார்க்கவே முடியவில்லை.

''நீங்க வேணா பாத்துக்கினே இருங்களேன்.. உ(இ)ன்னும் கொஞ்ச நாள்ல கானான்னா எல்லாருக்கும் எம்மூஞ்சிதான் மனசுல வரும்'' என்று தன்னம்பிக்கையைத் தவழ விடும் தமிழ்ச்செல்விதான் சென்னையின் முதல் மற்றும் ஒரே கானா பாட'கி'!

''கானான்னாலே மூஞ்சத் திருப்புறவங்க இன்னும் இருக்குறாங்க.. அது தப்பே இல்ல. ஏன்னா, இன்னிக்கு பொம்பளைங்கள கேவலமா பேசுறதும் சாராயம் குடிக்கிறதுக்கு வக்காலத்து வாங்கறதும்தான் கானா பாட்டுனு ஆயிடுச்சு. ஆனா, உண்மையில அப்படி இல்லீங்க. நாட்டுப் பொ(பு)றத்துலல்லாம் தெம்மாங்கு பாடறாங்கல்ல.. அந்த மாதிரி சென்னையோட தெம்மாங்குதாங்க கானா. அது மூலமா, 'குடிக்காதே.. தண்ணியை வீணாக்காதே'னு நெறைய நல்ல விஷயங்களையும் சொல்ல முடியும். அதத்தான் நான் பண்றேன். கானாவோட கெட்ட பேரையே மாத்தப் போறேன் பாருங்க'' என்கிற தமிழ்ச்செல்வியை சின்ன வயதிலேயே பாட்டு தன் பக்கம் ஈர்த்திருக்கிறது.

''சென்னை சோழவரத்தாண்ட இருக்குற ஒரக்காடுதான் நாம் பொறந்த ஊரு. அப்பா கண்டக்டர்.. சுமாரான குடும்பம். நான் ஒரே பொண்ணுங்கிறதால ஏகப்பட்ட செல்லம். எங்க ஆயா(பாட்டி) தெருக்கூத்து பாட்டுப் பாடுவாங்க. மழைக்குக் கூட இஸ்கூலு பக்கம் போவாத ஆயா, சொந்தமா வார்த்தை போட்டு மெட்டுக் கட்டிப் பாடுறப்போ அசந்து போயிடுவேன். எங்க ஆயா மாதிரி பாட்டுப் பாடுற வயசானவங்களை எங்க பார்த்தாலும் அவங்க பின்னாடியே சுத்துவேன். அவங்க பாட்டை நோட்டுல எழுதி வச்சுப் பாடுவேன். இஸ்கூலு லீவு வுட்டா இதே வேலைதான்.

நான் பத்தாங்கிளாஸ் படிக்கும்போது, எங்க கிராமத்துல 'தானிய சேமிப்பு இயக்கம்'னு ஒரு அமைப்போட சார்புல, விழிப்பு உணர்வு முகாம் நடத்தினாங்க. முகாம் முடியறப்ப, 'யாராவது கலைநிகழ்ச்சி நடத்துங்க'னு சொன்னாங்க. என் பாட்டை நம்பி நானும் பேர் குடுத்தேன். கயிறுல சோடா பாட்டில் மூடியக் கட்டி, குச்சி வச்சுத் தட்டிக்கினே அந்த முகாம்ல நான் பாடின பாட்டை எல்லாரும் பாராட்டினாங்க. அதுக்கு அப்புறம் 'தானிய சேமிப்பு இயக்கம்' எங்கே நிகழ்ச்சி நடத்தினாலும் அவங்க சார்பா என்னையும் கூட்டிக்கினு போனாங்க. அதுதான் எனக்கு ஆரம்பம்.

இஸ்கூலு படிப்பு முடிஞ்சு, பாரதி ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்தேன். அங்க எதுக்கெடுத்தாலும் பாட்டுதான். காலேஜுக்கு பஸ்ல போகும்போது, பொண்ணுங்களைப் பத்திக் கேவலமா பாடுற பையன்களுக்கு பதிலடி கொடுக்கறதுக்காக அங்கயே கானா எடுத்து விடுவேன். என்னோட கிராமத்துப் பாட்டு, கானாவா மாறுனது இப்படித்தான்!'' என்கிற தமிழ்ச்செல்வி, சினிமாத் துறையில் நுழையவும் முயன்று சில கசப்பான அனுபவங்களை சம்பாதித்திருக்கிறார்.

''கானா பாட்டுக்கு நெறைய ஸ்டேஜ் கிடைச்சுதுங்க. கல்யாணமாயி ரெண்டு கொழந்தைங்க பொறந்தப்புறமும் நான் பாடுறதை விடல. வெளிநாடு வரைக்கும் போய் புரோக்ராம் பண்ணிருக்கேன். நெறைய விருதுகள் வாங்கியிருக்கேன். நல்லாதான் போயிக்கினுருந்துச்சு. சினிமாவுல கானா சக்கைப்போடு போட்டுக்கினிருந்த சமயம்.. நானும் அதுல சான்ஸ் கிடைக்குமானு அலஞ்சேன்.. என்னோட பாட்டு சில படங்கள்ல வந்துச்சே தவிர, என் பேரு வரல. இன்னும் சில பேர் என்னோட மெட்டை மட்டும் எடுத்துக்குனு அதுக்கு அவங்களே அசிங்கமா பாட்டு எழுதிக்கினாங்க. அப்போதான் படம் வியாபாரம் ஆவும்னு காரணம் சொன்னாங்க.

சரி, நான் மீட் பண்ணின ஆளுங்க சரியில்லனு நானே நினைச்சுக்கினு கொஞ்ச நாள் விலகி இருந்தேன். ஆனா, இப்போ சினிமாவுல டைம் நல்லாருக்கு. திரும்பவும் உள்ள வந்திருக்கேன்.. ஒரு படத்துல கோ-டைரக்டராவும் வேலை பார்க்கறேன்.. பாட்டும் எழுதியிருக்கேன்.. காமெடி கேரக்டர்ல நடிக்கவும் செஞ்சிருக்கேன். நல்லா வருவேன்'' என்கிறார் தமிழ்ச்செல்வி.

அவர் பாடிக் காட்டிய கானாவில் இரண்டு வரிகள் நம் மனமெங்கும் ரீங்காரமிட்டன.

''மும்முரமா நின்னு
முயற்சியப் பண்ணு..
பண்ணாட்டா நீ மண்ணு..
பண்ணாட்டா நீ மண்ணு..''

- லாவண்யா
படம் எம்.உசேன்