பிரீமியம் ஸ்டோரி

'ஆடை அலங்கார நிபுணர்’ அனுராதா பிஸானி
மாடல்: கல்பனா

 '' 'நாம கொஞ்சம் ஃபேட்டா இருக்கிறோமோ..'ங்கற எண்ணம் எனக்குள்ள எப்பவுமே உண்டு. அதனாலேயே வெரைட்டியான டிரெஸ்ஸெல்லாம் போட ஆர்வமே இருக்கறதில்ல. ஆனா, 'நாளைக்கு ஒரு பார்ட்டிக்குப் போகணும். அழகா ஒரு டிரெஸ் போட்டுட்டு வாடி’னு ஃபிரெண்ட் கட்டாயப்படுத்தறா... எனக்கு எந்த மாதிரியான டிரெஸ் போட்டா நல்லா இருக்கும்?'’ என்றபடி வந்த கல்பனாவை... சற்றே அனுராதா திருத்தி அமைக்க... 'அட' என்று நாம் அசந்தே போனோம்!

டிரெஸ்ஸிங் ரூம் !
##~##

கல்பனாவுக்கென ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்த அனுராதா, அவரைப் போல கொஞ்சம் ஃபேட்டாக இருப்பவர்களுக்காக கொடுத்த கூடுதல் டிப்ஸ்....

''இந்த உடல்வாகு உள்ளவர்களுக்கு டைட்டான டி-ஷர்ட்ஸ் போட்டால் இன்னும் கொஞ்சம் ஃபேட்டாக காட்டும். இடையோடு மட்டும் அணியக்கூடிய ஷார்ட் ஷர்ட்ஸ் அணிவதைத் தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால், ஷார்ட்டாக இருக்கும் ஷர்ட்... தொடைப் பகுதியைப் பெரிதுபடுத்திக் காட்டும். எனவே, எப்போதும் கால்முட்டி வரை இறக்கமாக உள்ள ஆடை வகைகளை அணிவதுதான் கல்பனா போன்ற உடல்வாகு உள்ளவர்களுக்கு அழகு! இதுதான்... 'ஆள் பாதி, ஆடை பாதி'க்கு உதாரணம்!'

இங்கே கல்பனா அணிந்துள்ள கிரீன் கலர் டாப்ஸ், இவரை ஒல்லியாக, அழகாகக் காட்டுகிறது. இது கேஷ§வலாக போடக்கூடிய உடை. இவருக்கு வலது கையில் ஸ்டைலான, தடிமனான ஒற்றை வளையல் அணிந்தால் நன்றாக இருக்கும். இடது கையில் கடிகாரம் அணியலாம். பெரிய ஹேண்ட் பேக் வகைகளைப் பயன்படுத்தலாம். ஆடையின் டிசைன்களைப் பொறுத்து கழுத்து மாலைகள் அணியலாம். ஒரு இன்ச் ஹீல்ஸ் இருக்கக்கூடிய மார்டன் காலணிகளை அணியலாம்.

டிரெஸ்ஸிங் ரூம் !
டிரெஸ்ஸிங் ரூம் !

இந்த பிளாக் கலர் பார்ட்டிவேர். இவரை ஒல்லியாக காட்டும். ஃபுல் ஸ்லீவ் இருப்பதால், கைகளில் வளையல்கள் அணியத் தேவை இல்லை. வலது கையிலோ அல்லது இடது கையிலோ பெரிய ஒற்றை மோதிரம் போடலாம். நார்மல் ஹீல்ஸ் அணியலாம்.

இங்கே, இவரின் ஹேர் ஸ்டிரெய்ட்டனிங் காக இருப்பதால்... காதணிகள் தேவையே இல்லை.

- ஜொலிக்கும்...

படங்கள்: வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு