Published:Updated:

வெற்றி, தோல்வியை மட்டுமா தருகின்றன போட்டிகள்! செல்லமே செல்லம் #GoodParenting

வெற்றி, தோல்வியை மட்டுமா தருகின்றன போட்டிகள்! செல்லமே செல்லம் #GoodParenting

வெற்றி, தோல்வியை மட்டுமா தருகின்றன போட்டிகள்! செல்லமே செல்லம் #GoodParenting

வெற்றி, தோல்வியை மட்டுமா தருகின்றன போட்டிகள்! செல்லமே செல்லம் #GoodParenting

வெற்றி, தோல்வியை மட்டுமா தருகின்றன போட்டிகள்! செல்லமே செல்லம் #GoodParenting

Published:Updated:
வெற்றி, தோல்வியை மட்டுமா தருகின்றன போட்டிகள்! செல்லமே செல்லம் #GoodParenting

அன்புள்ள தோழி புனிதாவிற்கு,

நலம். ஹரிசாய் மற்றும் கார்த்திக் நலமா? ஹரிசாய் பள்ளியில் சுற்றுச்சூழல் சம்பந்தமான போட்டியில் அவன் சமர்ப்பித்த ப்ராஜெக்ட் சிறப்பாக இருந்ததா?

கடந்த வாரம் குழலியை, பள்ளிகளுக்கு இடையே நடந்த ஒரு போட்டிக்கு அழைத்துச் சென்றேன். நம் பள்ளி நாட்களில் நாம் மற்ற பள்ளிகளுக்குச் சென்று போட்டிகளில் கலந்துகொண்டு மேடையேறியது நினைவுக்கு வந்தது. அற்புதமான அனுபவங்கள் அவை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் குழலியை அழைத்துச் சென்ற நிகழ்வில், கவிதை சொல்லுதல், திருக்குறள் கூறுதல், ஒளவையார் பாடல்கள் பாடுதல், தனி நபர் நடிப்பு, ஓவியப்போட்டி, கதை சொல்லுதல், மாறுவேடப்போட்டி என  குழந்தைகளுக்கு சுமார் 10 போட்டிகள், வேறு வேறு அறைகளில் நடத்தப்பட்டன. வெற்றி, தோல்வி என பிரிக்கும் போட்டிகளின் பின்னால் நாம் நம் பிள்ளைகளை ஓடவைக்க வேண்டாம் என நினைத்தாலும், அதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்ளும் அனுபவம் குழலிக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆர்வத்துடன் சென்றோம். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியது.

ஒரு போட்டியில் கலந்துகொள்வது என்பது, திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்று பரிசு பெறுவதற்கு மட்டுமல்ல. அதனுடன் ஏராளமான விஷயங்கள் உள்ளடங்கி இருக்கின்றன.  ஓவியப்போட்டியில் கலந்துகொள்வதன் நோக்கம், ஓவியம் வரைந்து சமர்ப்பித்துவிட்டு வருவது மட்டுமல்ல. அந்தப் போட்டியில் பங்குபெரும் மற்ற பள்ளி மாணவர்களுடனான அறிமுகம் கிடைக்கும், அவர்கள் என்ன வரைகிறார்கள், என்ன விதமான கருத்தினை தங்கள் ஓவியம் மூலம் வெளிப்படுத்துகிறார்கள், அதற்காக அவர்கள் என்னென்ன பயிற்சிகளை மேற்கொண்டார்கள் என மாணவர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதற்கான சூழல் கிடைக்கும். ஆனால் அங்கோ, இதற்கெல்லாம் வாய்ப்பே அளிக்கப்படவில்லை. மற்ற குழந்தைகளின் ஓவியங்களைப் பார்க்கக்கூட ஏற்பாடு செய்யப்படவில்லை. சம்பிரதாயத்துக்காகப் போட்டிகள் நடத்தினார்களே தவிர, அது குழந்தைகளின் ஆன்மாவை தொட முயற்சிக்கவில்லை.

பேச்சுப் போட்டியில், ஒரு குழந்தை பேசிவிட்டு வெளியே வருகிறது. அதன் தாய் சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் அதனிடம், 'வீட்ல எவ்வளவு நல்லா சொன்ன? இங்க வந்து இப்படி கேவலமா சொல்ற. உன்னை எல்லாம்...' எனக் கடுமையாக, சத்தமாக கடிந்துகொள்கிறார். அந்தக் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்? தன் நண்பர்கள் முன்னிலையில் இந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியுமா? அந்தக் கலையில் மேலும் முன்னேறும் முனைப்புதான் அதற்குக் கிடைக்குமா? 'இனி நமக்கு போட்டியும் வேண்டாம், திட்டும் வேண்டாம்' என்ற முடிவுதான் அதன் மனதில் தோன்றும்.

குழந்தையை போட்டி, கலை நிகழ்ச்சி என ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள வைக்கும் அடிப்படையை பெற்றோர்களும், பள்ளி நிர்வாகமும் புரிந்துகொள்வதில்லை என்பது வருத்தமானது. கையில் வாங்கி வரும் பரிசு, சான்றிதழ் மட்டுமல்ல அதன் நோக்கம். வெற்றி, தோல்வி, சக போட்டியாளர்களை மதிப்பது, அவர்களிடம் நட்பு ஏற்படுத்திக்கொள்வது மற்றும் அவர்களிடம் உள்ள சிறந்த விஷயங்களை தாங்கள் கற்றுக்கொள்வது என... அந்த அனுபவம்தான் வென்று வாங்கிவரும் பரிசைவிடப் பொக்கிஷம். ஆனால், இங்கு நடக்கும் போட்டிகளிலோ, வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்தை குழந்தைகளிடம் திணித்து, தோல்வியுற்றால் வசைபாடி... என குழந்தைளின் உள்ளே சுடர்விட ஆரம்பிக்கும் தன்னம்பிக்கையை  முற்றிலுமாக அழிக்கும் வேலைதான் பெரும்பாலும் நடக்கின்றது.

கதை சொல்லுதல் போட்டி, மிக இயல்பாக நடக்க வேண்டிய ஒன்று. அது குழந்தைகளின் கற்பனைகளை தட்டிவிட வேண்டும். அதற்கு நாம் குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களையும் அறிமுகப் படுத்த வேண்டும். போடிகளிலில் நடுவர் அருகே சென்று அவர் காதினில் மட்டுமே கதை சொல்லப்பட்டது. மேலும், அவ்வறையில் கதை சொல்லும் போட்டிக்கான போட்டியாளர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டிருந்தனர். அதிகபட்சம் 4-5 பேர். இது எந்தவித திறமையையும் வளர்த்துவிடாது. அடுத்தகட்ட நகர்தலுக்கு ஒரு பயனும் அளிக்காது. மேலும், போட்டியின் தலைப்பு – நீதிக்கதைகள். குழலி ஒரு ஃபேன்டசி கதை கூறினாள். ' 'குழந்தைகளுக்கான கதைகளில் கட்டாயமாக நீதி இருக்க வேண்டும் என்று அவசியமில்லை' எனக்கூறி கடைசியில் முடி' எனச் சொல்லி அவளை அனுப்பியிருந்தேன். ஆனால் 'ஒரு போட்டியில் பங்கேற்பதே முக்கியம், வெற்றி பெறுவதல்ல' என்ற நீதியுடன் முடித்தாள் அவள்.

மீண்டும் நம் பால்யத்தை, போட்டிகளுக்குச் சென்ற நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். குழந்தைகளுக்கான போட்டி நிகழ்வுகளில், போட்டியைவிட அதனைச் சார்ந்து கிடைக்கும் அனுபவங்கள் அலாதியானவை என்பதை நேரடியாக உணர்ந்தவர்கள் நாம். போட்டி நடக்கும் இடத்தினை தேடிச்செல்வது, அங்கே பெயரை பதிவது, அந்த பள்ளி /இடத்தை சுற்றிப்பார்ப்பது, புதிய நண்பர்களை கண்டெடுப்பது, நாம் பயிலும் கலையில் மற்ற மாணவர்களின் நிலை அறிவது, ஆளுமைத்திறன் வளர்ப்பது, ஒரு விழாவை எப்படி நடத்த வேண்டும் என்று கற்றுக்கொள்வது என... எத்தனை அனுபவங்கள் பெற்றோம்? அவையெல்லாம் நம் பால்யத்தின் பெரும் நினைவுகள் இல்லையா? அது இன்றைய தலைமுறை குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டாமா?

பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் இதனைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப குழந்தைகளுக்கான போட்டிகளை நெறிப்படுத்த வேண்டும்.

புனிதா, உன்னுடைய கம்பீரமான மேடைப்பேச்சுகள் இன்னும் பசுமையாக நினைவிருக்கின்றது. ஹரிசாய் செய்த ப்ராஜெக்டினைப் பற்றி அவனே விளக்கிச் சொல்லி ஒரு வீடியோ எடுத்து அனுப்பி வைக்கவும். அவனுக்கு அன்பும் ப்ரியமும்!

அன்புடன்,
விழியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism