Published:Updated:

ஆட்டிச நிலை குழந்தைகளின் பெற்றோர் செய்ய வேண்டியவை என்னென்ன?

ஆட்டிச நிலை குழந்தைகளின் பெற்றோர் செய்ய வேண்டியவை என்னென்ன?
ஆட்டிச நிலை குழந்தைகளின் பெற்றோர் செய்ய வேண்டியவை என்னென்ன?

ஆட்டிச நிலை குழந்தைகளின் பெற்றோர் செய்ய வேண்டியவை என்னென்ன?

லகின் இயல்பான நிலையுடன் தங்களை இணைத்துக்கொள்ள முடியாத குழந்தைகள் பல வகைப்படுகிறார்கள். அவர்களில், மூளை வளர்ச்சிக் குறைபாடு, புற உலகு அறியாமை, மூளை முடக்கு வாத நோய், கவனக் குறைவு நோய், வளர்ச்சி நிலைகள் சரியானபடி அமையாதது போன்ற நிலைகள் உண்டு. இவர்கள், ஜாலியாகச் செய்யும் விஷயங்கள், மற்றவர்களுக்கு எரிச்சலூட்டக் கூடும். அவர்கள், ஆட்டிச நிலைக் குழந்தைகளின் உலகத்தை அறிந்துகொள்ளும்வரை.
  
இதுபோன்ற பிரச்னை எப்போது வேண்டுமானாலும் வரலாம். குழந்தை பிறந்தவுடனோ அல்லது சில வருடங்கள் கழித்தோ வரலாம். நமக்கு இப்படி ஆகிவிட்டதே என்கிற அதிர்ச்சியும், நம் பிள்ளைக்கு இப்படி ஒரு கோளாறு வந்துவிட்டதே என்ற குற்றஉணர்ச்சியும், பிறர் தம் குழந்தையின் குறை பற்றிக் கூறினால், அதை முற்றாக மறுத்து, 'யார் சொன்னது? என்குழந்தை நல்லாத்தானே இருக்கிறான்' என்று ஏற்றுக்கொள்ளாத மனநிலையும் பெற்றோர்களை அலைக்கழிக்கும். இதனால், எவ்வளவு செலவானாலும் சரி, குணமாக்கிவிடலாம் என, பல வழிகளில் முயற்சிசெய்வார்கள். இதற்காக யாருடைய ஆலோசனையையும் கேட்கத் தயாராக இருப்பார்கள். கடந்த காலத்தில் நடந்த வேறு வேறு நிகழ்வுகளே பிள்ளையின் இந்த நிலைக்குக் காரணம் என்றும் புலம்புவார்கள்.

தனக்கு இன்னொரு பிள்ளை வேண்டும் என்கிற நினைப்பையே விட்டுவிடுவார்கள். இதனால்,

தனக்கான  சின்னச்சின்ன சந்தோஷங்களைக்கூட அனுபவிக்க முடியாமல், தன் பிள்ளை அதைச் செய்திடுவானோ, இதைப் பண்ணிடுவானோ என்று நினைத்துக் கவலைப் படுவார்கள். அதோடு, டாக்டர்களைப் பார்க்க ஆகும் செலவுகள், அதற்காக எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியன நடுத்தரக் குடும்பங்களைச் சிக்கலாக்கும். இன்னும் கவலை அதிகமாகும். தன் பிள்ளைக்காகவே தமது சந்தோஷங்களைத் தவிர்க்கும் பெற்றோர்கள், மற்றவர்களைப்போல சந்தோஷமாக இருக்க ஆலோசனை தருகிறார், மனநல மருத்துவர் செந்தில்வேலன். 


 
பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?:

1. உங்கள் பிள்ளையின் நிலையைச் சரி செய்வது ஈஸி என்ற நம்பிக்கை மனதுடன் இருக்கவும்.
2. இதுபோன்ற குழந்தைகளை எப்படிப் பாத்துக்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லும் புத்தகங்களைப்  படித்து, மன அழுத்தம்கொள்ளாமல், இவர்களை எளிதாக எடுத்துச் செல்லலாம்.
3. நமக்கு இப்படியான பிள்ளை பிறந்துவிட்டது. இவன் இப்படித்தான் இருப்பான் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு, அடுத்த குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம்.
4. பிள்ளைக்காக அதிக நேரத்தைச் செலவிடும் நீங்கள், அதில் உங்களுக்காக என்று ஒரு நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்.
5. பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லத் தயங்க வேண்டாம். அங்கு ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம்.


6. நீங்கள், எப்போதும் பிள்ளைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள். வீட்டில் இருப்பவர்களுடனும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடனும் பேசுங்கள். நன்றாகச் சாப்பிடுங்கள். ஓய்வெடுங்கள்.
7. பிடித்தமான பொழுதுபோக்குகளுக்கென சிறிது நேரம் ஒதுக்கி, மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ளலாம்.
8. தேவையில்லாமல் செலவு செய்வதையும் அலைச்சலையும் விட்டுவிடுங்கள்.
9. உங்களைப்போல அன்பாக இருக்கும் வீட்டில் உள்ளவர்களிடம் குழந்தையைப்  பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, கோயிலுக்கு போய் வரலாம்.
10.  உங்கள் பிள்ளையை ஏற்றுக்கொள்பவர்களிடம் நட்பாக இருங்கள். ஆட்டிஸ நிலையில் உள்ள பிற குழந்தைகளின் பெற்றோர்களுடன் சேர்ந்து, குழுவாக இருந்து விஷயங்களைப் பரிமாறிக்கொள்ளலாம். அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்குச் சென்று வரலாம்.

பிள்ளைக்காகவே வாழும் வாழ்க்கையில், உங்களுக்காகவும் வாழ வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள்!

-கே.ஆர்.ராஜமாணிக்கம்

அடுத்த கட்டுரைக்கு