Published:Updated:

'பேக்கரி' ஜூலியட்டின் வெற்றி ஃபார்முலா!

'பேக்கரி' ஜூலியட்டின் வெற்றி ஃபார்முலா!

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

 

கு.ராமகிருஷ்ணன்

'பேக்கரி' ஜூலியட்டின் வெற்றி ஃபார்முலா!

 எம்.இ. பட்டம் பெற்று, அதற்கேற்ற பணியில் அமர்ந்தும், மனம் அதில் ஒன்றாமல் போனதால் 'சுயதொழிலில் சாதிக்கலாம் நாம்’ என்ற திடமான முடிவோடு பேக்கரி தொழிலில் இறங்கி, ஓர் ஆண்டுக்குள்ளாகவே வெற்றிப் பாதையில் அடிஎடுத்து வைத்திருக்கும் ஜூலியட் வளர்மதி பற்றி, 'படித்தது எம்.இ... நடத்துவது பேக்கரி!’ என்ற தலைப்பில் கடந்த இதழில் பதிவு செய்திருந்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 இந்தத் தொழிலில் தான் சந்தித்த சவால்களையும், இதில் இறங்க நினைப்பவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களையும் தொடர்கிறார் இங்கு...

''என்னோட குழந்தைகள தினமும் சாயந்தரம் எங்க ஏரியாவுல உள்ள ஒரு பேக்கரிக்கு அழைச்சிட்டுப் போயி ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுப்பேன். 'நாம மட்டுமே ஒரு நாளைக்கு 80 ரூபாயிலயிருந்து 100 ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்கறோம்... மழை, வெயில்னு வருஷம் முழுக்க எல்லா சீஸன்லயும் இங்க கூட்டம் இருந்துட்டேதான் இருக்கு... இந்தத் தொழிலையே நாம செஞ்சா என்ன..?’னுதிடீர்னு ஒருநாள் க்ளிக் ஆச்சு! 'செய்வோம்’னு முடிவெடுத்தேன்.

'இதுல கடுமையான போட்டி இருக்கும். எல்லாராலயும் ஜெயிக்க முடியாது’னு என் மேல அக்கறை உள்ளவங்க எச்சரிச்சாங்க. 'தரமும் தனித்துவமும் இருந்தா, கண்டிப்பா மக்கள் நம்மகிட்ட வருவாங்க’னு உறுதியா நம்பினதையே அவங்களுக்கும் பதிலா சொன்னேன்'' என்பவருக்கு தொடக்கத்திலேயே பல தடைகள் காத்திருந்தன.

##~##

''இந்தத் தொழிலுக்கு பல லட்சம் ரூபாய் முதலீடு தேவை. அவ்வளவு பணத்துக்கு எங்க போறது? மாவட்ட தொழில் மையத்தை கைகாட்டினார், டிடீசியாவுல திட்ட இயக்குநரா இருந்த ராமசாமி தேசாய். அரசு மானியத்தோடு கடன் கிடைக்கும்னு அங்க அணுகினப்பதான், 'பேக்கரி சம்பந்தமா உங்களுக்கு என்ன தெரியும்?’னு கேட்டாங்க. 'ஏற்கெனவே இதுல அனுபவம் உள்ள மாஸ்டருங்கள வேலைக்கு வெச்சு சமாளிச்சுக்கு வேன்’னு சொன்னேன். 'இது ரொம்ப தவறு. நீங்க முதல்ல முழுசா தெரிஞ்சுக்கிட்டுதான் இறங்கணும்’னு சொன்னார், அங்க அதிகாரியாயிருந்த பாஸ்கரன். அது எனக்கு தாரக மந்திரமாவே பட்டுச்சு'' எனும் ஜூலியட், அதற்கான முயற்சிகளில் இறங்கியபோதே அலட்சியங்களையும் அவமானங்களையும் சந்திக்க வேண் டிய நிர்பந்தம்.

'பேக்கரி' ஜூலியட்டின் வெற்றி ஃபார்முலா!

'' 'ஆழம் தெரியாம காலை விட்டு மாட்டிக்காதே’னு பயமுறுத்தினார் எனக்குத் தெரிஞ்ச பேக்கரிக்காரர் ஒருத்தர். அதுவே, 'கண்டிப்பா இதுல சாதிச்சே தீரணும்’ங்கற வைராக்கியத்தை எனக்குள்ள விதைச்சுட்டுது. மனசை இன்னும் தீவிரப்படுத்திக்கிட்டு பேக்கரி பேக்கரியா படியேறி இறங்கினேன். யாருமே உதவ முன் வரல. மனச தளர விடாம, கும்பகோணத்துல உள்ள பேக்கரி இயந்திரங்கள் உற்பத்தி நிறுவனத்தின் உதவியோட, அங்க உள்ள ஒரு பேக்கரிக்குப் போனேன். அதோட உரிமையாளர் ரொம்ப நல்ல மனுஷன். கிச்சன் வரைக்கும் என்னை அனுமதிச்சார். நிறைய விஷயங்கள் சொல்லியும் கொடுத்தார். இதுக்காகவே பல நாட்கள் திருச்சியில இருந்து கும்பகோணம் போயிட்டு வருவேன்.

'பேக்கரி' ஜூலியட்டின் வெற்றி ஃபார்முலா!

தொழிலைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டோம்கிற நம்பிக்கை பிறந்ததும்.. மறுபடியும் லோனுக்கு படையெடுத்தேன். இந்தத் தொழிலுக்கு 16.5. லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்பட்டுச்சு. ஏற்கெனவே அக்கவுன்ட் வெச்சுருந்த 'சவுத் இந்தியன் வங்கி'யில ஒப்புதல் தெரிவிச்சு கடிதம் கொடுத்தாங்க. அதை மாவட்ட தொழில் மையத்துக்கு அனுப்பினேன். ஒரு மாசம் கழிச்சி கலெக்டர் ஆபீஸ்ல நேர்முகத் தேர்வு. சுமார் முந்நூறு பேர் வந்திருந்தாங்க. வரிசையில காத்திருந்து, கிட்ட போனதும், 'தேசிய வங்கிகள் மூலமா தான் கடன் கொடுப்போம்’னு அதிகாரிகள் சொல்ல, ரொம்பவே ஏமாற்றம்.

பாரத ஸ்டேட் வங்கிக்கு போனா... 'எங்க ஏரியா லிமிட்ல நீங்க இல்லை’னு சொல்லிட்டாங்க. கடைசியா, ஐ.ஒ.பி. பேங்க்ல 'ஒ.கே’ சொன்னாங்க. இயந்திரங்கள் வாங்குறதுலயும் ஏகப்பட்ட பிரச்னைகள்...''

- எல்லாவற்றையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்றிருந்த ஜூலியட், சரியான தேர்வாக கோவை மற்றும் பெங்களூருவிலிருந்து இயந்திரங்கள் வாங்கி, தொழிலை துவக்கியிருக்கிறார்.

'பேக்கரி' ஜூலியட்டின் வெற்றி ஃபார்முலா!

''அனுபவம் ஒரு ஆசான். அதைப் பார்த்து பயந்துடக்கூடாதுனு ஆரம்பத்துலயே உணர்ந்தேன். கோயம்புத்தூர்ல இருந்து மைதா, டால்டா உள்ளிட்ட மூலப்பொருட்களை மொத்தமா வாங்கி ஒரு மாசத்துக்கு ஸ்டாக் பண்ணினதால ஏகப்பட்ட நஷ்டம். அப்பப்ப தேவைக்கு ஏற்ப வாங்க ஆரம்பிச்சதும், ஃப்ரெஷ்ஷா மூலப்பொருட்களைப் பயன்படுத்த முடிஞ்சுது. புதுசு புதுசா பல அயிட்டங்களைத் தனித்துவத்தோட உருவாக்கிக்கிட்டே இருந்தேன். வாரத்துக்கு ஒரு தடவை மத்தவங்களோட பேக்கரிக்கு கஸ்டமர் மாதிரி போய் சாப்பிட்டுப் பார்ப்பேன். அவங்க கொடுக்குற அதே அயிட்டத்தை இன்னும் தரமா வேற சுவையில மாத்தி, எங்க பேக்கரியில கொடுப்பேன். மத்தவங்களவிட, நம்மகிட்ட விலை குறைவா இருக்கணும்ங்கறதில்ல உறுதியா இருப்பேன்!''

- இப்படி இன்னும் பலப்பல வெற்றி ஃபார்முலாக்களை உருவாக்கிதான் குறுகிய காலத்துலயே இத்தொழிலில் நிலைத்திருக் கிறார் ஜூலியட்.  

''இப்ப எங்க பேக்கரியில இருபது பேர் வேலை பார்க்கறாங்க. வர்ற கூட்டத்தை சமாளிக்க கொஞ்சம் திணறித்தான் போறோம். மாசம் எண்பதாயிரம் ரூபாய் லாபம் பார்க்கறேன். அடுத்தடுத்த திட்டங்கள் மனசுல ஓடிட்டேதான் இருக்கு. அதைச் செயல்படுத்தற சூழ்நிலைகள உருவாக்க உழைச்சுட்டே இருக்கேன்...''

- நனவாகப் போகும் கனவுகள் கண்களில் மின்ன முடித்தார் ஜூலியட் வளர்மதி!

- சாதனைகள்  தொடரும்...

படங்கள்: ‘ப்ரீத்தி’ கார்த்திக்