பி.ஆரோக்கியவேல்

'சேர்த்த பணத்தை சிக்கனமா, செலவு பண்ண பக்குவமா, அம்மா கையில கொடுத்துப் போடு செல்லக்கண்ணு... அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு!’ என்று எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு தமிழனுக்குத் தெரிந்த உண்மை, ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் மும்பைக்குத் தெரிந்தது. அதனால் நைனா லால் கித்வாய், சந்தா கோச்சர் போன்ற பெண்மணிகள் நம் நாட்டு வங்கிகளின் தலைமைப் பொறுப்புகளுக்கு வந்தார்கள்.

இப்போது இந்த உண்மையை உலகமும் புரிந்து கொண்டிருக்கிறது. ஆம்... 187 உறுப்பு நாடுகளைக் கொண்ட 'இன்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்ட்' (IMF-International Monetary Fund) அமைப்புக்கு கிறிஸ்டியன் லகார்ட் என்கிற 55 வயது பெண் தலைவராகியிருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால்... உலகின் கொத்துச் சாவி, இனி இவர் கையில்!

வளரும் நாடுகள் பலவும் இந்நிறுவனம் கொடுக்கும் கடனை நம்பித்தான் இருக்கின்றன. ஆனால், இவர் இந்தப் பதவிக்கு வந்திருக்கும் சமயம் பார்த்து... மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் ஆட்சிக் கவிழ்ப்பு புரட்சிகள், விண்ணைத் தாண்டி எகிறிக் கொண்டிருக்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலை, நிலை குலைந்து போன அமெரிக்கப் பொருளாதாரம், கிரேக்கம், அயர்லாந்து, போர்ச்சுக்கல் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடி போன்றவை காரணமாக ஐ.எம்.ஃஎப்-பின் வேலை, சவால்கள் நிறைந்ததாக மாறியிருக்கிறது.

ஆனால், பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த இந்த நீச்சல் வீராங்கனைக்கு, எதிர்நீச்சல் போடுவது புதிய விஷயமில்லை. அரசியலில் ஆண்களோடு போட்டியிட்டு, பிரான்ஸ் நாட்டின் நிதியமைச்சராகும் அளவுக்கு உயர்ந்தவர், தன் நாட்டுக்கு என்று தனித்துவம் மிக்க பொருளாதாரக் கொள்கையை வகுத்து, அதில் ஜெயித்தும் காட்டினார்!

அதே எதிர்பார்ப்புடன், நம்பிக்கையுடன் இவரை கவனிக்க ஆரம்பித்திருக்கிறது சர்வதேச சமூகம்!

'இதோ வந்துவிட்டேன்...’ என்று தயாராகிவிட்டார் இரண்டு குழந்தைகளின் தாயான கிறிஸ்டியன்!