நாச்சியாள்

'நேஷனல் அவார்ட்' நிச்சயம் என்று எதிர்பார்க்கப்பட்ட படம்... 'மைனா'. ஆனால், தற்போது 'விஜய் டி.வி-யின் அவார்ட்ஸ்'களோடு திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறது 'மைனா' டீம்!

சிறந்த கதை, திரைக்கதை: இயக்குநர் பிரபு சாலமன், சிறந்த புதுமுக நடிகை: 'மைனா’வாக வாழ்ந்த அமலா பால்; சிறந்த புதுமுக நடிகர்: 'சுருளி’யாக மனதைத் தொட்ட விதார்த், சிறந்த துணை நடிகர்: தம்பி ராமையா... உச்சகட்டமாக 'பெஸ்ட் டீம்’ அவார்டும் அள்ளியிருக்கிறது 'மைனா' டீம். அந்த டீமை நாம் அள்ளினோம்... 'காபி ஷாப் கலாய்ப்பு'க்காக.

அசோக் நகர் 'காபி ஷாப்'பில் இயக்குநர் பிரபு சாலமன், இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் சுகுமாறன் என 'மைனா' டீம் வந்து அமர... அவர்களை எதிர்கொண்டனர்... சென்னை, எத்திராஜ் கல்லூரி டீன்ஸ்... நிஷாந்தினி, ப்ரீத்தி, வைஷ்ணவி, கலைஸ்ரீ, ராது.

ஆவலாக முதல் கேள்வியைக் கேட்பதற்கு ப்ரீத்தி தயாராக... முந்திக் கொண்ட பிரபு சாலமன், ''எதுக்கு இந்த விஸ்காம் கோர்ஸ் படிக்கறீங்க? எந்தளவுக்கு இந்த கோர்ஸ்ல எக்ஸ்போஷர் கிடைக்குது? படிச்சிட்டு என்ன பண்ணப் போறீங்க?’' என்று வரிசையாக கேள்விகளைப் போட்டு... கேர்ள்ஸ் அனைவரையும் அதிர வைத்தார்.

''சார், நாங்கதான் உங்களை இன்டர்வியூ பண்ண வந்திருக்கோம். இதை ஒரு இன்ஃபர்மேஷனுக்காகச் சொன்னேன்'' என்று கலாய்ப்புக்கு பிள்ளையார் சுழி இட்டார் வைஷ்ணவி.

''அதெல்லாம் அப்புறம். முதல்ல பதில் சொல்லுங்க...'' என்று இமான் ஆர்டர் போட,

''நான் டைரக்டர் ஆகணும் படிக்கிறேன்'' என்றார் வைஷ்ணவி.

''நான் கிராஃபிக்ஸ்ல கலக்கணும்னு படிக்கிறேன்'' என்று சின்ஸியர் சிகாமணியாக பதில் தந்தார் கலைஸ்ரீ.

''சார், நான் கல்யாணப் பத்திரிகையில பந்தாவா போட்டுக்கறதுக்காக படிக்கிறேன்'' என்று ராது சொல்ல... 'மைனா' டீம் கொஞ்சம் ஜெர்க் ஆனது.

''இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!'' என்று பாராட்டினார் சுகுமாறன்!

''சரி... சரி... நாங்க எங்க வேலையை ஆரம்பிக்கிறோம்'' என்று கனைத்துக் கொண்ட ப்ரீத்தி, ''டைரக்டர் சார், உங்களுக்கு நேஷனல் அவார்ட் கிடைக்கலேனு வருத்தமில்லையா?'' என்று கேட்க... அதை அப்படியே திருப்பிப் போட்டார் பிரபு சாலமன் இப்படி-

''மைனாவுக்கு அவார்ட் கிடைக்கலேனு உங்களுக்கு வருத்தமா இருந்துச்சா?''

''ஆமாம் சார்'' என்று ஏக குரலில் சோக கீதம் பாடின... எத்திராஜ் டீன்ஸ்!

''ஃபேஸ்புக், ட்வீட்டர், பீச், வீடுனு எல்லா இடத்திலயும் ஒரே கேள்விதான்... 'ஏன் மைனா வுக்கு நேஷனல் அவார்ட் கிடைக்கலே?'ங்கிறதுதான்'' என்று கூடுதல் சோகம் சேர்த்தார் ராது.

''இந்த வருத்தம்தான் எங்களுக்கு பெரிய அவார்ட்'' என்று சென்டிமென்ட் பதில் சொல்லி இமான் புல்லரிக்க வைக்க...

வந்ததில் இருந்து தன் வாட்சையே பார்த்துக் கொண்டிருந்த சுகுமாறன் பக்கம் திரும்பிய நிஷாந்தி, ''இப்படி 'வாட்ச்மேனா'வே இருக்கீங்களே சார்'' என்று கேட்க... அங்கே பிய்த்துக் கொண்ட குபீர் சிரிப்பில் தானும் கலந்த சுகுமாறனிடம், ''உங்களுக்கு பெஸ்ட் கேமராமேன் அவார்ட் கிடைக்கலேனு வருத்தமில்லையா?'' என்று கேட்டு கூல் செய்தார் நிஷாந்தி.

''ஒரு படத்தைப் பார்த்துட்டு கேமரா சூப்பரா இருந்துச்சு, பாட்டு சூப்பரா இருந்துச்சுனு சொன்னா... அது பெஸ்ட் படமில்ல. இது எல்லாமே கரெக்டா மிக்ஸ்ஸாகி இருந்தாத்தான்... அது பெஸ்ட் படம். ’பெஸ்ட் டீம்’ னு அவார்டு வாங்கியாச்சு. இதைவிட என்ன பெரிசா அவார்ட்'' என்று சுகுமாறன் சொன்னதும்...

''ஓ....'' என்று கூவினர் கேர்ள்ஸ்!

''பிரபு சார், நீங்க சிறந்த கதை, திரை கதைக்கான அவார்டை அள்ளியிருக்கீங்க. பாராட்டுறோம். ஒரு நல்ல கதை எவ்வளவு நாள் ரெடியாகும்?'' என்று வைஷ்ணவி கேட்க,

'' 'மைனா’ கதை ரெடி பண்ண கிட்டத்தட்ட ஒன்பது மாசம் ஆச்சு. ஞாயிற்றுக்கிழமையானா சைதாப்பேட்டை சர்ச்சுக்கு போவேன். அப்படி ஒரு நாள் போயிருந்தப்ப, கை விலங்கு மாட்டின கைதியும், போலீஸ்காரரும் ஃப்ரெண்ட்ஸ் மாதிரி பேசிட்டிருந்ததைப் பார்த்தேன். அப்பதான் விதார்த் கேரக்டரும் தம்பி ராமையா கேரக்டரும் மனசுல வந்தாங்க. அப்படியே அதை வளர்த்தெடுத்ததுதான்.... மைனா'' என்று திடீர் லெக்சரர் ஆனார் பிரபு.

''சார், நல்ல திரைக்கதை எப்படி இருக்கணும்..?'' என்று வைஷ்ணவி கேட்க,

''மூணு வருஷ படிப்பை, இந்த ஒரே டிஸ்கஷன்ல கத்துக்கிட்டு போகணும்னு பாக்குறாங்க சார் இந்தப் பொண்ணுங்க'' என்று பிரபுவை சுகுமாறன் அலர்ட் செய்ய,

''ஆமாப்பா... பொல்லாத கூட்டமா இருக்குங்க'' என்று தானும் சேர்ந்தார் இமான்.

''ஆகா.... இமான் சார், உங்கள நாங்க ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப நல்லவர்ர்ர்ர்னு நெனச்சோம். ஆனா... நீங்க டூ பேட். எங்க மனச நோகடிச்சிட்டீங்க. அதனால ஒரு பாட்டு பாடுங்க'' என ஸ்டூடன்ஸ் கோரஸ்ஸாக வேண்டுகோள் விடுக்க... 'மைனா' படத்தின் 'ஜிங்கிடி ஜிங்கிடி’ பாட்டை ராகமாக ஆரம்பித்தார். கேர்ள்ஸ் எழுந்து குத்தாட்ட ஸ்டெப்ஸ் வைக்க... அங்கு ஒரு 'மானாட மயிலாட’ நிகழ்ச்சியே நடந்து, மொத்த காபி ஷாப்புக்கும் என்டர்டெயின்மென்ட் ஆக மாறியது!

'உங்க அடுத்த படமென்ன?'' என்று ஐந்து பேரும் கோரஸாகக் கேட்க, ''யானைகள் பத்தின படம். யானைகள் பற்றி சொல்றதுக்கும் நிறைய விஷயம் இருக்கு'' என்று பதில் தந்தார் பிரபு சாலமன்.

''ஆஹா... விஜய் டி.வி. அவார்ட் வாங்கியாச்சு... அடுத்தது நேஷனல் ஜியாகிராபிக் டி.வி. அவார்டுக்கு ட்ரை பண்றாரு போல. நிச்சயம் கிடைக்கும்'' என்று கேர்ள்ஸ் கிண்டலாகக் கூற...

''ரொம்ப புத்திசாலி பிள்ளைங்க'' என்று சுகுமாறன் நக்கலடித்தார்.

''நீங்க கிண்டலுக்கு சொன்னாலும்... அதுதான் உண்மை, மெய், சத்யம், ட்ரூத்!'' என்று ஏக குரலில் சொல்லி கலைஸ்ரீ காபி கோப்பையை காலி பண்ண, வட்டமேஜை மாநாடும் முடிந்தது எந்த தீர்மானங்களும் போடப்படாமல்... சந்தோஷமாக!

படங்கள்: எம்.உசேன்