Published:Updated:

"ஆயிரத்தில் ஒரு மனசாவது பூக்கட்டும் !"

"ஆயிரத்தில் ஒரு மனசாவது பூக்கட்டும் !"

"ஆயிரத்தில் ஒரு மனசாவது பூக்கட்டும் !"

சென்னை, மாம்பலம், காஞ்சி சங்கர மடத்தில் சமீபத்தில் ஒரு இசைச் சொற்பொழிவு. தவில், சாக்ஸபோன் போன்ற பக்கவாத்தியங்களுடன், வித்தியாசமான அந்த இசைச் சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருந்த ராஜேஸ்வரியிடமும் சின்னதாக ஒரு வித்தியாசம்... அவர் கட்டியிருந்தது, ஜரிகை போட்ட 'கல்யாணி காட்டன்’!

பொதுவாக இதுபோன்ற மேடைகளில் பட்டுப் புடவைகளே மினுமினுக்கும் நிலையில், இதென்ன..?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''காஞ்சிப் பெரியவா வாக்குப்படி, நான் பட்டு உடுத்தறது இல்ல...'' என்று கம்பீரமாக வந்து விழுந்த வார்த்தைகளே... ராஜேஸ்வரியின் இன்னொரு முகத்தையும் நமக்குக் காட்ட... தொடர்ந்து பேச வைத்தோம்.

"ஆயிரத்தில் ஒரு மனசாவது பூக்கட்டும் !"

''சொந்த ஊர் கும்பகோணம். ஆனா... படிச்சது, வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். சின்ன வயசுலயே நல்லது, கெட்டதை நெறி கதைகளா போதிச்சு, சங்கீதத்தையும் சொல்லிக் கொடுத்து பலமான அஸ்திவாரம் போட்டாங்க அம்மா. அஞ்சு வயசுலயே அக்ரஹாரத்துல சுப்ரபாத சொற்பொழிவு தர்ற அளவுக்கு வளர்ந்தேன். கோயில்கள்ல உபன்யாசம், சொற்பொழிவு, பாட்டு, பாகவதம், கதா காலட்சேபம்னு இள வயசு ஒரு பக்கம் நகர... டூயல் இன்ஜினீயரிங் டிப்ளமோ இன் மல்டி மீடியா, எம்.ஏ. மியூஸிக், டிப்ளமோ இன் மாஸ் கம்யூனிகேஷன் எல்லாமும் முடிச்சேன். பேச்சாளர், பத்திரிகையாளர்னு எல்லா தளங்கள்லயும் வலம் வந்தேன்'' என்ற ராஜேஸ்வரி, ஆன்மிக ஈடுபாடு பற்றித் தொடர்ந்தர்.

''குழந்தைகள், இளைஞர்கள ஒன்று திரட்டி, அவங்க மனதை இறை வழியில செலுத்தி, நல்வழிப்படுத்தறதைதான் சொற்பொழிவுகள் மூலமா செஞ்சுட்டு இருக்கேன். வருஷத்துக்கு 100 கல்வி நிலையங்கள் வரை இதுக்காக போயிட்டு வர்றேன்'' என்பவர் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் தவிர, தற்போது சிறைச்சாலைகளிலும்கூட சொற்பொழிவை நிகழ்த்தி வருகிறார்.

''புழல் சிறைச்சாலையில 24 தலைப்புகள்ல சொற்பொழிவு நடத்தினேன். கைதி ஒருத்தர், 'சினிமா, சீட்டு, ஆட்டம், பாட்டம்னே வளர்ந்தவன் நான். ஒருவேளை இதுமாதிரி போதனைகள் எல்லாம் இள வயசுலயே கிடைச்சிருந்தா, இந்த ஜெயிலுக்கு வந்திருக்க மாட்டேம்மா’னு கண் கலங்கினார். இப்படி ஆயிரத்துல ஒரு மனசை என்னால பூக்க வைக்க முடிஞ்சாலும், அதுவே எனக்கு ஆத்ம திருப்தி!''

- கண்கள் மூடி முடிக்கிறார் ராஜேஸ்வரி!

 ரேவதி
படம்: பொன்.காசிராஜன்