Published:Updated:

சந்தோஷ் நாராயணன் தாடி ரகசியம்! ரகசியம் கலைக்கும் அவரது மனைவி

சந்தோஷ் நாராயணன் தாடி ரகசியம்! ரகசியம் கலைக்கும் அவரது மனைவி
சந்தோஷ் நாராயணன் தாடி ரகசியம்! ரகசியம் கலைக்கும் அவரது மனைவி

டுத்தடுத்து படங்கள், தொடர் ஹிட்கள் என பிஸியாக இருக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பக்கபலம், அவர் மனைவி மீனாட்சி. தன் கணவர் பற்றி மனம் திறக்கிறார்.

''நீங்க திருமதி சந்தோஷ் நாராயணன் ஆன கதை என்ன?!"

''என் தம்பியோட நண்பருக்கும், சந்தோஷின் நண்பருக்கும் பொதுவான ஒரு நண்பர் இருந்தார். அவர், பின்னணிப் பாடகர் பிரதீப் குமார். அவரோட இசை நிகழ்ச்சிகளைப் பார்க்கப்போகும்போதுதான், நானும் சந்தோஷும் சந்திச்சு, நண்பர்களாகி, இசையால காதலர்களானோம். யெஸ்... சந்தோஷோட இசைதான், அவர்மேல எனக்குக் காதல் வரக்காரணம். நான்தான் முதல்ல, சந்தோஷ்கிட்ட காதலைச் சொன்னேன். இசை தம்பதிகளா வாழ்வில் இணைஞ்சிட்டோம். எனக்கும், என் பொண்ணுக்கும் இசை தெரியும். நாங்க மியூஸிக் குடும்பம்!"

''சந்தோஷ் ஏன் எப்பவும் தாடியோடவே இருக்கார்?"

''அந்த தாடி ரகசியத்தைப் பற்றி நிறையப் பேர் கேட்டிருக்காங்க. அது வேற ஒண்ணுமில்லை... சோம்பேறித்தனம்தான் (சிரிக்கிறார்)! ட்ரிம்மிங், ஷேவிங்க்கு எல்லாம் நேரம் செலவழிக்க சோம்பேறித்தனம் அவருக்கு. தாடி சமாளிக்க முடியாத அளவுக்கு வளர்ந்து அசௌகர்யமா உணரும்போதுதான் ட்ரிம் பண்ணிக்குவார். கண்ணாடி பார்க்கவே மாட்டார். சிம்பிளா இருப்பார். டீ-ஷர்ட், ஷார்ட்ஸ்தான் அவருக்குப் பிடிச்ச டிரெஸ். வெளியில் கிளம்பும்போதுகூட அப்படியே கிளம்பிடுவார்."

''ஆனா நீங்க காஸ்ட்யூம் டிசைனராச்சே?"

''ஆமாம். நான் காஸ்ட்யூம் டிசைனர் என்பதால, எனக்கான உடைகளை ரொம்ப ரசனையா பார்த்துப் பார்த்து வாங்குவேன், டிசைன் செய்துக்குவேன். ஆனா, அவர் பிரத்யேகமா டிரெஸ் பண்ணிக்க விரும்பவே மாட்டார். எப்பப் பார்த்தாலும் போட்ட டிரெஸையே போடுறாரேனு, சமயங்களில் அதையெல்லாம் கிழிச்சு வெச்சிருவேன். ஏதாச்சும் நிகழ்ச்சிகளுக்கு கோட் ஸூட் அல்லது ரிச்சா அவரை டிரெஸ் பண்ண வைக்கிறதுக்குள்ள நான் நிறைய எனர்ஜி இழக்க வேண்டியிருக்கும்."

''ரெண்டு பேரும் ரொம்ப அவுட்டிங் போவீங்களாமே?"

''தினமும் 10 - 12 மணி நேரம் வேலை செய்றார். அவருக்கு ரெஃப்ரஷ்மென்ட் நிச்சயமா தேவைப்படுது. அதனால தினமும் நைட் அவுட்டிங் போயிருவோம். ப்ளாட்ஃபார்ம் கடைகள்ல சாப்பிடுறது எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். குடும்பத்தோட, அல்லது ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து சினிமாவுக்குப் போவோம். டின்னர் முடிச்சதும் எங்க தெரு, பக்கத்து தெருனு ஏரியாவிலேயே வாக்கிங் போவோம். நிறைய பேசுவோம்.

பெரிய பிரேக் கிடைச்சா, ஆஸ்திரேலியாவுல இருக்கிற எங்க சொந்தபந்தம், ஃப்ரெண்ட்ஸை பார்க்கக் கிளம்பிடுவோம். இப்போகூட அங்க போயிட்டு, ரெண்டு வாரத்துக்கு முன்னாடிதான் வந்தோம்.''

''சந்தோஷ் சார் ரொம்பவே அமைதியானவரா?"

''நிறைய பேர் அப்படித்தான் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா, அவர் 10 நிமிஷத்துக்கு மேல ஒருத்தரோட பேசினா, க்ளோஸ் ஆகிடுவார். சினிமாவில் இருந்து நாட்டு நடப்பு வரை, அவருக்கு பொது விஷயங்கள் நிறைய தெரியும். ஆனா, அதையெல்லாம் வெளிக்காட்டிக்க மாட்டார். ஆனா, பிடிச்சவங்ககிட்ட ரொம்ப ஜாலியா, வெளிப்படையா பேசுவார். கூச்சப்படாம வீட்டு வேலைகள் எல்லாமே செய்வார். நல்லா சமைப்பார்."

''அவர்கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம்?''

''அவரையே ரொம்பப் பிடிக்கும் (சிரிக்கிறார்)! கோபமே படமாட்டார். ரொம்ப சிம்பிளா இருப்பார். தன்னைச் சுத்தியிருக்கிறவங்க சந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்படுவார்."

''கபாலி மாஸ் ஹிட். அடுத்து 'பைரவா' ரிலீஸ்!"

'' 'கபாலி' படத்தை ரஜினி சார் ஃபேமிலியோட பார்த்தோம். அடுத்து எங்க நண்பர்கள் டீமோட பல முறை பார்த்தோம். 'கொடி', 'காஷ்மோரா' ரிலீஸுக்குப் பிறகு இப்போ 'பைரவா'.  ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஆனா அடுத்தடுத்த பொறுப்புகளும் அதிகமாகிட்டே இருக்கு. அதையெல்லாம் சரியா ப்ளான் பண்ணி வேலை செய்றார். தினமும் அன்றைய வேலைகள் பற்றி எங்கிட்ட டிஸ்கஸ் பண்ணுவார். லைஃப் ரொம்பவே சூப்பரா போயிட்டு இருக்கு!"

- கு.ஆனந்தராஜ்
படம்: எம்.உசேன்