Published:Updated:

‘முத்தம் கேட்டு அடம் பிடிப்பதில் பூர்ணிமா இன்னும் குழந்தையே'! - சிலாகிக்கும் பாக்யராஜ் #Valentinesday

‘முத்தம் கேட்டு அடம் பிடிப்பதில் பூர்ணிமா இன்னும் குழந்தையே'! - சிலாகிக்கும் பாக்யராஜ் #Valentinesday

‘முத்தம் கேட்டு அடம் பிடிப்பதில் பூர்ணிமா இன்னும் குழந்தையே'! - சிலாகிக்கும் பாக்யராஜ் #Valentinesday

‘முத்தம் கேட்டு அடம் பிடிப்பதில் பூர்ணிமா இன்னும் குழந்தையே'! - சிலாகிக்கும் பாக்யராஜ் #Valentinesday

‘முத்தம் கேட்டு அடம் பிடிப்பதில் பூர்ணிமா இன்னும் குழந்தையே'! - சிலாகிக்கும் பாக்யராஜ் #Valentinesday

Published:Updated:
‘முத்தம் கேட்டு அடம் பிடிப்பதில் பூர்ணிமா இன்னும் குழந்தையே'! - சிலாகிக்கும் பாக்யராஜ் #Valentinesday

யக்குனர் பாக்யராஜும்... பூர்ணிமாவும் நட்சத்திர காதல் தம்பதியர். ஏங்கி... தவித்து... செல்லக் கோபம் கொண்டு தன் காதலை வெளிப்படுத்துவதில் முதல் நாள் காதலி பூர்ணிமா என்று சிலாகிக்கும் பாக்யராஜின் நெகிழ்வான குரலில் அத்தனை காதல். ஒவ்வொரு நாளுமே காதலர் தினமாக இருக்க வேண்டும் என நினைக்கும் பூர்ணிமாவோடு சமீபத்தில் 33வது திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் பாக்யராஜ். பல்வேறு வேலைகளுக்கு இடையில் திருமண நாளில் என்னால் பரிசளிக்க முடியாமல் போய்விட்டது என் மனதை என்னவோ செய்தது. இந்த வாலன்டைன்ஸ் டேல, நான் 'காதல்' பரிசால் பூர்ணிமவை அசத்தப் போறேன்' என்று உருகுகிறார் இந்த காதல் மன்னன்.

*என் பேரைச் சொன்னாலே இரண்டு விஷயங்கள் ஞாபகத்துக்கு வரும். ஒண்ணு நான் அணிந்திருக்கும் கண்ணாடி. அடுத்து, 'ஆர்’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட மோதிரம். (மோதிரத்தைப் பார்த்துக்கொள்கிறார்) இந்த மோதிரத்தை பிரவீணாவை (முதல் மனைவி) நான் லவ் பண்ணின காலத்தில், அவங்க எனக்காக போட்டது. என்னை அவங்க ராஜானுதான் கூப்பிடுவாங்க. சுவரில்லாத சித்திரங்கள் பிரிவியூ பார்த்துட்டு வந்து பாராட்டி  போட்ட மோதிரம் அது. தாவணிக் கனவுகள் படம் எடுத்தப்போ சூட்டிங் ஸ்பாட்ல அந்த மோதிரத்தை நான் மிஸ் பண்ணிட்டேன். பூர்ணிமா எனக்காக அதே ‘ஆர்’ மோதிரத்தை வைரத்தில் செய்து கொடுத்தாங்க. இப்போ என் விரங்களில் மின்னுவது பூர்ணிமாவின் அன்பு.

* முதல் மனைவி பிரவீணா விஷயத்துல லவ் அப்புறம் திருமணம். ஆனா பூர்ணிமா விஷயத்துல திருமணம் பண்ணிக்கிடலாம்னு முடிவெடுத்ததுக்கு அப்புறம் எங்களோட காதல் பயணம் ஆரம்பிச்சது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* எனக்குப் புடிச்ச விஷயங்கள் தேடித் தேடி தெரிஞ்சிட்டு சர்ப்ரைஸ் பண்றதுல ஆர்மபிச்சு எனக்காக தன்னை மாத்திகிட்டவங்க பூர்ணிமா. இன்னைக்கும் அவங்களோட அபரிமிதமான அன்பில் என்னை வாயடைச்சு போகச் செய்கிற பொக்கிஷம் அவங்க.

* சிக்கன், பிஷ் விரும்பி சாப்பிடுவேன். பூர்ணிமா எனக்காக அதெல்லாம் சமைக்க கத்துகிட்டாங்க. எனக்கு பிடிச்ச மாதிரி சமைத்துக் கொடுக்குறதுல இன்னிக்கும் பூர்ணிமாகிட்ட இருந்து வெளிவர்ற அலாதி பிரியத்தை அனுபவிக்கிறேன்.

* செலக்டிவா டிரஸ் பண்ணிக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். கடை கடையாகத் தேடி, தன் மனக்கண்ணால எனக்கான உடைகளை செலக்ட் செய்றதுதான் பூர்ணிமா ஸ்டைல். திருமண நாள், பட விழாக்கள், குடும்ப விசேஷங்கள்னு முக்கிய நாட்களில் பூர்ணிமா செலக்ட் செய்த உடைகளைத்தான் போட்டுப்பேன். அதுல காதலும் இருக்கும், எனக்கு ஃபிட்டாவும் இருக்கும்.

* என்னோட ஒன்னா கார்ல டிராவல் பண்றது பூர்ணிமாவுக்கு அவ்ளோ பிடிக்கும். ரொம்ப டயர்டா இருந்தாக் கூட வெளியில் போகனும் சொன்னா போதும்... டக்குனு கிளம்பி என்னோட வருவாங்க.

* நாங்க சந்திச்ச முதல் நாள்ள இருந்து... நான் வாங்கித் தந்த சின்னச்சின்ன பரிசுகள், எங்களுக்குள் பகிர்ந்து கொண்ட அன்யோன்யமான தருணங்கள்னு எதையும் அவங்க மறக்கல. அத்தனையும் அவ்ளோ டீட்டெய்லா எப்பவும் பகிர்ந்து என்ன ஆச்சரியத்தில் தள்றாங்க.  

* எல்லா நாளுமே காதலர் தினமா இருக்கணும்றது பூர்ணிமாவோட ஆசை. ஆனா பல வேலைகளுக்கு இடையில் நிறைய விஷயங்களை மறந்து கடைசியில் ‘சாரி’ சொல்லி அப்பப்போ  அவங்க செல்லக் கோபத்தில் இருந்து  தப்பிக்கிறேன்.

* சைக்கிள்ல, ஸ்கூட்டர்ல யாராவது கணவன் மனைவியா தோள் பிடிச்சு பயணிச்சாலும், நாமும் அது போல போகனும்ன்ற ஆசை பூர்ணிமாவுக்கு வரும். அதை அப்படியே என்கிட்ட சொல்வாங்க. பயணத்தில் என் தோள் சாய்ந்து தூங்குவதும், என்னை பேச வைத்துக் கேட்பதும் அவங்களுக்கு அவ்ளோ பிடிக்கும்.

* மற்ற எல்லாப் பரிசுகளையும் விட என் அருகாமை தான் அவங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பரிசு. வேலை அதிகமாக இருக்கும் நேரங்கள்ள சந்திக்க முடியாமக் கூடப் போயிடும். அதுக்காக என்கிட்ட சின்னச் சின்ன சண்டைகள் போடுவாங்க. அதையும் நான் காதலின் இன்னொரு வடிவமா பார்த்து ரசிப்பேன்.

* புதுசா கல்யாணமான பொண்ணு மாதிரி சின்னதா ஒரு ஹக், முத்தம் கேட்டு அடம் பிடிக்கிற குழந்தை பூர்ணிமா. இப்பவும் அவங்க கிட்ட முதல் நாள் காதலை என்னால உணர முடியுது. இரண்டு குழந்தைகளின் அம்மா, மகனுக்கு திருமணமாகிவிட்டது ஆனாலும் பூர்ணியமாவோட அடம் பிடித்தல்கள் எங்கள் காதலை இன்னும் உயிர்ப்போட வைச்சிருக்கு.  

* நான் வீட்டுக்கு எந்த நேரம் சாப்பிட வந்தாலும் அருகில் இருந்து பரிமாற நினைக்கும் பூர்ணிமாவின் அன்பில் நான் தாய்மையை தரிசிக்கிறேன். பார்த்துப் பார்த்து அன்பு செய்து என்னை மெய்சிலிர்க்க வைக்கிறார்.

* எங்களோட திருமண நாளில் பல கடைகளில் வாங்கி வந்த விதம் விதமான உடைகளால என்னை மலைக்க வைச்சாங்க. ஆனா அன்னைக்கு இருந்த வேலையில ஆசைப்பட்டும், என்னால பூர்ணிமாவுக்கான காதலை, பரிசை கொடுக்க முடியலை. ரொம்ப ஃபீல் பண்ணினேன். இன்னிக்கு பரிசு கொடுத்து அசத்தப்போறேன்.

* திருமணத்துக்குப் பின்னாடி தினமும் நாங்க காதலிக்கிறோம் என்று முடிக்கும் பாக்யராஜின் குரலில் அத்தனை குறும்புகள்...

 
திகட்டும் அன்பால் திணறடிக்கும் இந்த நட்சத்திரத் தம்பதிகளுக்கு நம்முடைய வாழ்த்துக்களும்!

- யாழ் ஶ்ரீதேவி

படங்கள்: பொன்.காசிராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism