Published:Updated:

தேன் நிலாக்களின் ஊர்கோலம்...

தேன் நிலாக்களின் ஊர்கோலம்...

'அவள் விகடன் - சன் ஃபீஸ்ட் மாரிலைட்’ இணைந்து பொள்ளாச்சியில் நடத்திய 'அசத்தல் பெண்கள்’ விழா, வழக்கம்போல சூப்பர் ஹிட்! டிசம்பர் 5-ம் தேதி காலை எட்டு மணி முதலே ராஜேஸ்வரி ஹாலை கலகலவென நிரப்பத் தொடங்கி விட்டனர் வாசகிகள்.

தேன் நிலாக்களின் ஊர்கோலம்...
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''முதல் போட்டி... மியூசிக்கல் சேர்'' என்று தொகுப்பாளர் சுமதி ராஜகோபால் அறிவிக்க... மேடை ததும்ப ஆரம்பித்துவிட்டது. 67 வயதான மகாலஷ்மி பாட்டி ஜூனியர்ஸுக்கு டஃப் ஃபைட் கொடுத்து, ஃபைனலில் தனலஷ்மியுடன் ஓட, க்ளைமாக்ஸுக்காக பார்வையாளர்கள் ஸீட் நுனிக்கே வந்து விட்டனர். 'உங்க எதிர்பார்ப்பை வீணாக்க மாட்டேன்!’ என்பதுபோல, முதல் இடத்தைப் பிடித்தார் பாட்டி!

அடுத்தது ஸ்கிப்பிங்... சுடிதார் இளசுகளுக்கும், சேலைகளுக்கும் நடந்த மல்லுக்கட்டில், இல்லதரசியான சோபனாவுக்கே வெற்றி! நடனப்போட்டியில்... 69 வயது அங்குத்தாயின் நடனம் ஹைலைட்டாக இருந்தது. முதல் இடம் பிடித்தவர்... ஜெயசுதா!

டீ பிரேக்குக்கு பிறகு, 'டயட்டீஷியன்’ மற்றும் 'யோகா பயிற்சியாளர்’ அழகு தாரணி உடலை கச்சிதமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள டிப்ஸ் வழங்கினார். சர்வதேச மற்றும் தேசிய அளவில் யோகா சாம்பியன் பட்டங்களை வென்றிருக்கும் அவருடைய மாணவிகளான ஸ்வேதா, மலர்விழி ஆகியோர் ஆசனங்களை செய்து காட்டியது அழகு.

தேன் நிலாக்களின் ஊர்கோலம்...

பந்தைக் கையால் விடாமல் தட்டும் போட்டியில் 30 விநாடிக்குள் 89 தடவை விடாமல் தட்டி, நம் அசத்தல் பெண்கள் நிகழ்ச்சியில் 'ரெக்கார்ட்’ செய்தார் வினோதா! பக்கெட் பந்து போட்டியில், மிகவும் கவனத்துடன் விளையாடி வென்றார் உஷா.

அடுத்தது, அரங்கத்தையே அதிர வைத்த அந்தாக்ஷரி! 'நிலா அது வானத்து மேலே...’, 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்...’ என தேன் குரல்களில் வழிந்த நிலாக்கள் அரங்கெங்கும் உலவின.

இறுதியாக, வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை ஐ.டி.சி. நிறுவனத்தை சேர்ந்த விஜய்ராஜ் மற்றும் செந்தில் இருவரும் வழங்கினர். பங்கேற்ற அனைவருக்கும் 'சன் ஃபீஸ்ட் கிஃப்ட் பேக்’ வழங்கப்பட்டது!

ஒரு அசத்தல் அவுட்டிங் வந்து போன திருப்தி வாசகிகளின் அகம் மற்றும் முகம் இரண்டிலும்!  

ம.பிருந்தா
படங்கள்: ஜா.ஜாக்சன்