Published:Updated:

டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா

கறுப்பு வெள்ளை

டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா

வர்ணனை: 'நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்' என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் பானுமதி. தமிழகமே, 'ராமச்சந்திரன்’ என்று கூப்பிட பயந்து, சுருக்கமாக 'எம்.ஜி.ஆர்.' என்றும் உச்சரிக்க யோசித்து, 'புரட்சித் தலைவர், 'பொன்மனச் செம்மல்’ என்றெல்லாம் போற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே... ''என்ன மிஸ்டர் ராமச்சந்திரன்... நல்லா இருக்கீங்களா?'' என்று கணீர் குரலில் குசலம் விசாரிக்கும் துணிச்சல்காரப் பெண்மணி.

பாராட்டு: ஜெமினி நிறுவனத்தின் 'அபூர்வ சகோதரர்கள்’ படப்பிடிப்பு இடைவிடாமல் மூன்று நாட்களாக நடந்து கொண்டிருந்தது. ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனே...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, ''பானு, சிறிது ஓய்வெடுங்கள். பிறகு தொடரலாம்'' என்று சொன்னார். களைத்துப் போய் சோர்ந்திருந்தபோதும், ''வேண்டாம் சார். இன்னிக்கு இந்தக் காட்சியை முடித்துவிட்டுதான் மறுவேலை'' என்று பானுமதி சொல்லிவிட... கேமரா ஓய்வின்றி சுழன்றிருக்கிறது.

'வேலையில் புலி’ என்று புகழப்படும் எஸ்.எஸ். வாசனே, ''எடுத்த காரியத்தை முடிக்கணும்ங்கிற உன் அயராத உழைப்பு ஆச்சர்யத்தைக் கொடுக்குதும்மா...'' என்று வியந்திருக்கிறார் பானுமதியிடம்.

சம்பவம்: நடிப்பு விஷயத்தில், தந்தை பொம்மராஜூ வெங்கட சுப்பையாவின் பேச்சைத் தட்டாதவர். தந்தையின் நண்பரும், புரொட்யூசர் கம் டைரக்டருமான சி. புல்லையா, 'ஈஸ்ட் இண்டியா ஃபிலிம் கம்பெனி' தயாரிக்கும் 'வர விக்ரயம்’ என்ற தெலுங்கு படத்துக்காக பதினேழு வயது பானுமதியை நடிக்க அழைத்திருக்கிறார். மகளை நடிக்க வைப்பதில் துளியும் விருப்பமில்லாதபோதும், நண்பரின் வற்புறுத்தலுக்காக தலையாட்டி இருக்கிறார். படத்துக்கு ஹீரோவே இல்லை என்பதும் ஒரு காரணம். 'கட்டிப் பிடிக்கக் கூடாது, முத்தம் கொடுக்கக்கூடாது’ என்பது போன்ற நிபந்தனைகளோடுதான் நடிக்க அனுப்பியிருக்கிறார் தந்தை. பெரும்பாலும் அவற்றை மீறாமல்தான் கடைசி வரை நடித்து வந்தார் பானுமதி. திருமணம் மட்டும், தந்தையின் விருப்பத்துக்கு மாறாக... காதலில் கைகூடியது. உதவி இயக்குநராக இருந்த ராமகிருஷ்ணாவை மணந்தார்.

டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா

சாதனை: எழுத்து, ஓவியம், நடிப்பு, பாட்டு, படத்தயாரிப்பு, டைரக்ஷன், கதை - வசனம், நிர்வாகத் திறன் என 'அஷ்டாவதானி'யாக வலம் வந்தவர். நடிப்பைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்திருக்கிறது திருப்பதி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம். அந்தக் காலத்து நடிகைகளில் சொந்தமாக ஸ்டூடியோ வைத்து நடத்தியவர்! தமிழ்நாடு இசைக் கல்லூரி மற்றும் நடிப்பு கல்லூரிகளின் முதல்வராக பணியாற்றியவர்.

ரேவதி