Published:Updated:

குழந்தைகளின் பார்வைத் திறனை அதிகரிக்கும் 6 வழிகள்! #ChildHealth

குழந்தைகளின் பார்வைத்  திறனை அதிகரிக்கும் 6 வழிகள்! #ChildHealth
குழந்தைகளின் பார்வைத் திறனை அதிகரிக்கும் 6 வழிகள்! #ChildHealth

குழந்தைகளின் பார்வைத் திறனை அதிகரிக்கும் 6 வழிகள்! #ChildHealth

“சிறு வயதில் துவங்கி இப்போது வரை நம் மனதில் கண்ணாடி போடுவதென்பது மரியாதையாக, கம்பீரமாக, இண்டலெக்சுவலாக காட்டிக் கொள்ளவே என்று மட்டுமே தோன்றுகிறது. ஆனால் கண்ணாடி அணிவது என்பது நம் உடலில் உள்ள ஒரு குறைபாடினால் ஏற்படுகிற மாற்றம் என்பதை நாம் நம் குழந்தைகளுக்கு கற்பிக்கத் தவறியிருக்கிறோம். இந்த நிலை மாறி, குழந்தைகளின் கண்பார்வையை மேம்படுத்த ஆறு வழிகளை சொல்கிறார் சென்னை டி.நகரைச் சேர்ந்த கண் மருத்துவர் ரஜினி காந்தா! 

*இன்றைய தலைமுறை குழந்தைகளின் கண்களுக்கு மிகப்பெரிய வில்லனே டிவி, செல்போன், டேப்லெட், லேப்டாப் போன்ற மின்சாதனங்கள்தான். பெற்றோர்களோ குழந்தைகளுடன் போராட முடியாமல் 'இந்தா பாரு என்று வீடியோவை செல்போனில் ஆன் செய்து தந்துவிட்டு அமைதியாகிவிடுகிறார்கள்.

இப்போதெல்லாம் ஒரு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கும் கண்பார்வை கோளாறு ஏற்படுகிறது. இதுபோன்ற மின்சாதனங்களை, அவர்கள்முன் பயன்படுத்தாமல் இருப்பதை தவிர, வேறு சிறந்த வழி இல்லை!

*முந்தைய காலத்தில், குழந்தைகள் பெரும்பாலும் வெளியில் விளையாடுவார்கள். ஆனால், இந்த ‘அபார்ட்மெண்ட்’ காலத்தில், ஜன்னல் வழி இயற்கை காற்று  வருவதுகூட அதிசயமாக இருக்கிறது. நான்கு சுவற்றுக்குள் வளரும் குழந்தைகளுக்கு, இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி மழுங்கிவிட வாய்ப்பிருக்கிறது. இந்த  காரணத்தால்கூட, அவர்களுக்கு சிறுவயதிலேயே கண்பார்வை குறைபாடு ஏற்படுகிறது. அதனால், குழந்தைகள் பாதுகாப்பான வெளியிடங்களில் விளையாட விடுங்கள்.

* சிலர் குழந்தைகளுக்கு கண்பார்வையில் லேசான குறைப்பாட்டை கண்டறிந்தால், ஏதேனும் வைட்டமின் மாத்திரைகளை வாங்கிக்கொடுப்பார்கள். ஆனால், இதுபோன்ற மாத்திரைகளை முறையான மருத்துவர்களின் பரிந்துரையின்றி குழந்தைகளுக்கு அளிக்கக்கூடாது. உங்கள் குழந்தை பார்க்கவோ அல்லது  படிப்பதற்கோ சிரமப்பட்டால், உடனே மருத்துவரிடன் அழைத்துச்செல்லுங்கள். 

* கேரட், பப்பாளி, முருங்கைக்காய், கீரைகள், பால், தயிர், மீன், ஈரல் ஆகியவை கண்களுக்கு போதுமான ஆரோக்கியத்தை/சத்தை அளிக்கவல்ல உணவுகள். அதனால், வாரத்தில் ஒரு  நாளோ அல்லது இரண்டு நாட்களோ இவற்றை குழந்தைகளுக்கு கொடுத்து பழக்குங்கள். மேலும், அவ்வபோது குழந்தைகளுக்கு தங்களின் உடல் ஆரோக்கியம்  குறித்தும், அதன் அவசியம் குறித்தும் கற்றுக்கொடுங்கள். சொல்லபோனால், நீங்கள் இதுபோன்ற விஷயங்களுக்கு முன்மாதிரியாக இருங்கள். ஏனென்றால்,  அவர்கள் நம்மிடம் கேட்டு கற்பதைவிட, நம்மை பார்த்து பழகிக்கொள்வதுதான் அதிகம். 

*கண்பார்வை  கோளாறு என்பது பரம்பரை நோயுமாகும். அதனால், 3 வயதிலிருந்து, ஆறு மாதத்திற்கு ஒருமுறை, உங்கள் குழந்தைகளுக்கு கண் பரிசோதனை  செய்யுங்கள். இதன்மூலம், கண்பார்வை குறைபாட்டை கண்டறிந்து மருந்துகள் மூலம் சரிசெய்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. 

- ஷோபனா ரூபகுமார்

அடுத்த கட்டுரைக்கு