Published:Updated:

குட்டீஸ் குறும்பு !

குட்டீஸ் குறும்பு !

பிரீமியம் ஸ்டோரி

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு !

150

வாசகிகள் பக்கம்

நூடுல்ஸ் சாப்பிட்ட மாடு!

குட்டீஸ் குறும்பு !
##~##

சில மாதங்களுக்கு முன் இரண்டு வயது மகன் சுஜன் சக்ரவர்த்தியுடன் எங்கள் கிராமத்துக்குச் சென்றிருந்தோம். பக்கத்து டவுனில் உள்ள டாக்டரிடம் என் அம்மா, அப்பாவுக்கு செக்கப்புக்கு சென்று விட்டு திரும்பியபோது, ''அம்மா, ஒன் பாத்ரூம் போகணும்'' என்றான் சுஜன். நாங்கள் காரை ஓரங்கட்ட, அவசர அவசரமாகச் சென்றவன் ஆச்சர்யக் குரலுடன், ''அம்மா, இங்க வந்து பாரேன்... மாடு நூடுல்ஸ் சாப்பிடுது'' என்று கத்தினான். ஒன்று புரியாமல் நாங்கள் போய் பார்க்க, இரண்டு மாடுகள் வைக்கோல் சாப்பிட்டுக் கொண்டுஇருந்தன. வெடித்துச் சிரித்த நாங்கள், பின் அவனிடம் வைக்கோல் பற்றி எடுத்து சொல்ல, புரிந்தும் புரியாமலும் தலையாட்டினான் குட்டி!

இன்றும் நூடுல்ஸ் சமைக்கும்போது, அந்த நினைவு மனசுக்குள் 'கிச்கிச்’ மூட்டும்!

- எஸ்.சூர்யா தன்வதி, சென்னை-113

''நான் ரொம்ப பிஸி!''

குட்டீஸ் குறும்பு !

என் மகன் கார்த்திக்கை முதல் வகுப்பில் சேர்க்க, பள்ளிக்குச் சென்றோம் நானும் என் கணவரும். அட்மிஷன் செக்ஷன் டீச்சர்ஸ், ''உங்க மகனுக்கு 5 வருஷம் முடிய இன்னும் ஆறு மாசம் இருக்கு. அதனால, அடுத்த வருஷம்தான் சேர்த்துக்க முடியும்'' என்றனர். ''ஐயோ... அப்போ ஒரு வருஷம் வேஸ்ட் ஆயிடுமே...'' என்று நாங்கள் அங்கலாய்க்க, அதைக் கவனித்துக் கொண்டிருந்த என் மகன், ''ஒரு வருஷம் வேஸ்ட்டா எல்லாம் போகாது. நான் வீட்ல டி.வி. பார்ப்பேன், என் ஃப்ரெண்ட் ஹேமாகூட விளையாடுவேன், சின்ன சைக்கிள் ஓட்டுவேன், சாப்பிடுவேன், தூங்குவேன். அப்புறம் எப்படி வேஸ்ட் ஆகும்?'' என்று 'நான்ஸ்டாப்’பாக கேட்க, திகைத்துப் போன அந்த டீச்சர்ஸ், ''ஓ... நீங்க அவ்ளோ பிஸியா..?'' என்று சிரித்தனர்.

'மகனை ஸ்கூலில் சேர்க்க முடிய வில்லையே’ என்ற ஏமாற்றத்தை மறந்து, நானும் என் கணவரும் சிரித்ததை இன்று நினைத்தாலும் மீண்டும் மீண்டும் சிரிப்புதான்!  

- ஜி.கே.எஸ்.பரிமளாமூர்த்தி, கோபிசெட்டிபாளையம்

'ஸ்லோ' கம்... 'ஃபாஸ்ட்' கம்!

குட்டீஸ் குறும்பு !

அன்று காலை என் நான்கு வயது பேரனை, ''ஸ்லோகம் சொல்லி சாமி கும்பிட்டு வா...'' என்று  பூஜை அறையில் அமர்த்தி வந்தேன். வீட்டில் உள்ள அனைவரும் அன்று ஒரு உறவினரின் திருமணத்துக்கு செல்வதற்காக அவசரம் அவசரமாகக் கிளம்பிக் கொண்டு இருக்க, என் பேரன் பல நிமிடங்களாக பூஜை அறையில் இருந்து வெளிவராமல் இருந்ததால், ''செல்லம்... கொஞ்சம் வேகமா ஸ்லோகம் சொல்லிட்டு வாப்பா'' என்றேன். உடனே அவன், ''ஸ்லோகத்தை 'ஸ்லோ’வாதான் சொல்லணும் பாட்டி. வேகமாகச் சொன்னா அது  'ஃபாஸ்ட்’கம் ஆகிடும்!'' என்று கவுன்டர் கொடுக்க, அந்த அவசரத்திலும் மொத்த வீடும் சிரித்தது... அவன் முகம் பெருமையில் நனைந்தது!

- பா.தீபா, சென்னை-29

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு