Published:Updated:

டிரெஸ்ஸிங் ரூம்!

'லைனிங்' என்பது ஸ்டைல் அல்ல !

பிரீமியம் ஸ்டோரி

 'ஆடை அலங்கார நிபுணர்’
அனுராதா பிஸானி

டிரெஸ்ஸிங் ரூம்!

எவ்வளவுதான் நாம் பர்சனாட்டியாக இருந்தாலும், நாம் அணியும் உடைகள்தான், பிறரிடம் நம்மை உயர்த்திக் காட்டும் என்பது உலக உண்மை! அதனால்தான், ஆடைகள் விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு இருக்க வேண்டியது அதி அவசியமாக இருக்கிறது.

சிலர், ஆடைகளைத் தைப்பதற்காக கொடுக்கும்போது... டெய்லரிடம் ஏகப்பட்ட இன்ஸ்ட்ரக்ஷன்களைக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அது அத்தனையும்...

##~##

தன்னுடைய உடை எப்படி அமைய வேண்டும் என்பதற்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் அக்கறையின் வெளிப்பாடுதான்!

சிலர், சுடிதார் வகைகளைத் தைப்பதில் தங்களுக்கென்று பல 'கான்செப்ட்ஸ்' வைத்திருப்பார்கள். சுடிதாருக்கான டாப்ஸ் தைக்கும்போது லைனிங் வைத்துத் தைக்க வேண்டும் என்பது ஒரு ஸ்டைல். இதை, 'ஸ்டைல்' என்று சொல்வதைவிட துணிக்கும், நமக்கும் பாதுகாப்பு என்றே சொல்லலாம்.

சரி, சுடிதார் தைக்கும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகளைப் பார்த்துவிடுவோம்!

டாப்ஸ்களில் லைனிங் வைத்து தைத்தால்... நாம் அதிக அளவு பணம் கொடுத்து வாங்கும் சுடிதார் துணிக்கான லைஃப்பும் கூடுதலாக இருக்கும். கூடவே, நம்முடைய உடன் பாகங்களை, அடுத்தவர்கள் உறுத்தலோடு பார்ப்பதையும் தவிர்க்க முடியும்.

டிரெஸ்ஸிங் ரூம்!

உடல் பருமனாக இருப்பவர்கள், சுடிதார் டாப்ஸ்களை இறுக்கமாக... அதாவது, டைட்டாக தைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், சதைப் பகுதிகள் இறுக்கப்பட்டு, நீங்கள் 'பருமனானவர்' என்பதை ஊருக்கே காட்டிக் கொடுக்கும்.

மிகவும் ஒல்யான உடல் அமைப்பு கொண்டவர்களும்... டைட்டான மேலாடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இறுக்கமான ஆடைகள், கூடுதல் ஒல்யாகத்தான் உங்களை பிறருக்கு அடையாளம் காட்டும். ஓரளவுக்காவது 'லூஸ் ஃபிட்டிங்'தான் இந்த உடல் வாகுக்குச் சரியாக இருக்கும்.

டிரெஸ்ஸிங் ரூம்!

பருமனோ... ஒல்யோ.... எந்த மாதிரியான உடல் அமைப்பு கொண்டவர்களாக இருந்தாலும் மிக மெல்ய வகை துணிகளாக இருந்தால்... 'டைட் ஃபிட்' என்கிற வகையில் தைத்துப் போடுவதை தவிர்க்க வேண்டும். அது உடலை அப்படியே வெளிக்காட்டும்.

இங்கே வைஷா அணிந்துள்ள சுடிதாரானது நல்ல 'ஹை லுக்' என்றே தெரிகிறது. இருந்தாலும், இவர் அணிந்துள்ள இந்த மெட்டீரியல் மிகவும் மெல்ய வகையாக இருக்கின்றது. டாப்ஸுக்கு லைனிங்கும் கொடுக்கவில்லை. எனவே, இவருடைய லுக், கொஞ்சம் குறைவாகவே மற்றவர்களிடம் தெரியும். எனவே, இதுமாதிரி அணிவதைத் தவிர்க்கலாம்.

அடுத்து, ஜீன்ஸுக்கு வைஷா அணிந்துள்ள வைலட் கலர் பனியன், உடலை நன்றாக இறுக்கிப் பிடித்திருப்பதால்... வயிற்றுப் பகுதியானது நன்றாகத் தெரிகிறது. கூடவே இறுக்கிப் பிடிக்கக் கூடிய ஜீன்ஸையும் அணிந்திருப்பது... உடன் ஒட்டுமொத்த அமைப்பையே அச்சு அசலாக வெளிக்காட்டுகிறது. இதற்குப் பதிலாக...கொஞ்சம் 'லூஸ் ஃபிட்டிங்'கில் இருக்கும் ஒயிட் பனியன் அணிந்து, அதற்கு டைட் ஜீன்ஸ் போட்டால்... படு க்யூட் ப்ளஸ் ஹை லுக் கிடைக்கும்!

டிரெஸ்ஸிங் ரூம்!

புளூ கலர் சுடிதாரில் நிற்கும் மீனாவைப் பாருங்கள். இந்த டிரெஸ்... சாதாரணமாக ஆபீஸ் மற்றும் வெளியிடங்களுக்கு அணிந்து செல்வதற்கு ஏதுவாக இருக்காது. அதேசமயம்... பார்ட்டிகள் என்றால்... இது சூப்பர் சாய்ஸ்!

மீனாவைப் போன்ற உடல் வாகுக்கு, காட்டன் துணிகளில் செக்டு டிசைன் உள்ள டாப் வகைகளை அணிந்தால் பர்ஃபெக்டாக இருக்கும். ஆனால், கட்டாயம் துப்பட்டாவைத் தவிர்க்க வேண்டும். அணிந்தால்... டாப்ஸின் அழகே கெட்டு விடும். இத்தகைய டாப்ஸ்களுக்கு கழுத்து டிஸைன் மிகவும் இறுக்கம் இல்லாதது போல் பார்த்து எடுக்க வேண்டும். இதற்கு, நார்மல் ஜீன்ஸ் சரியான சாய்ஸாக இருக்கும்.

டிரெஸ்ஸிங் ரூம்!

காட்டன் டாப்ஸ் வகைகளை அணியும்போது கட்டாயம் லெகிங்ஸ் வகைகளைத் தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால், இந்த  டாப்புக்கு டைட்டான லெகிங்ஸ் அணியும்போது கால்களின் வடிவமைப்பானது உறுத்தலாக தனித்துத் தெரியும்.

கல்லூரிப் பெண்கள் முதல் இல்லத்தரசிகள் வரை ஒவ்வொரு வகை ஆடைகளையும் அணியும்போது அதன் லைனிங், டைட், கம்பர்டஃபிள் என பல விஷயங்களில் கவனமாக இருப்பது முக்கியம் என்பது இப்போது புரிகிறதுதானே!

                    - ஜொக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு